நகர்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதால், கிராமங்களிலிருந்து வந்து வேலைசெய்யும், புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களின் ஊருக்கு திரும்புகின்றனர். இது புது கொரோனா தொற்று உருவாக்கும் இடங்களை கண்டறிவதற்கு போதிய வழிமுறையை வகுக்க அறிவுறுத்துகிறது.
மனோஜ் மோகனன், கட்டுரையாளர்
சில வாரங்களில், புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் (கோவிட் – 19), அண்மைக்கால இந்திய வரலாற்றிலே நாம் சந்தித்திராத அளவிற்கு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் கவலைகொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், எப்போது இந்த வைரஸ் ஊரகப்பகுதிகளில், அதாவது இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் சமூகப்பரவலாக மாறும் என்பது குறித்தே.
கர்ப்பிணிகளை உலுக்கும் கேள்வி: தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா கொரோனா?
தற்போது இந்தியாவில் சமூக பரவல் நடந்துகொண்டிருக்கிறது என்பதை கருத்தில்கொண்டு பார்த்தால், தற்போது யாரும் பயணிகளால் பாதிக்கப்படவில்லை. சாதாரணமாக அது மற்றவர்களுக்கு பரவியிருக்கிறது. இந்த தொற்றுநோய் இப்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதா அல்லது மூன்றாம் கட்டத்தில் உள்ளதா என்று விவாதித்தால் நாம் சிலவற்றை தவறவிடுவோம். இந்த வைரஸ் இங்குள்ளது. தொற்றுநோய் அதிவேகமாக பரவிவருகிறது. அதற்கான அர்த்தம் வரும் நாட்களில் மற்றும் வரும் வாரங்களில், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு அதிகரிக்கும் என்பதாகும். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள், இந்த தொற்றுநோயின் அதிவேக வளர்ச்சியின் துவக்கத்தைதான் காட்டுகின்றன.
அதிவேகமான வளர்ச்சி அல்லது அசுரத்தனமான பரவல் என்பதன் தீவிரத்தை புரிந்துகொள்ளும் வகையில் விளக்க வேண்டுமெனில், ஒரு பெரிய குளத்தில் உள்ள அல்லி மலர்கள் தினமும் இரண்டு மடங்கு பெருகிவருகிறது. தற்போது குளம் முழுவதிலும் பல லட்சம் அல்லி மலர்களே வியாபித்திருக்கின்றன. இதில் பாதி மலர்கள் குறைவதற்கு எத்தனை நாட்களாகும்? ஒரு நாளாகுமா. குளம் முழுவதும் அல்லி மலர்களால் நிரம்புவதற்கு 5 நாட்களுக்கு முன், 6 சதவீதம் மட்டுமே அல்லி மலர்களால் நிரம்பியிருந்தது. இதுதான் இந்த அசுரத்தனமான பரவலில் உள்ள பிரச்னையே. அது முதலில் மெதுவாக இருக்கும். அடுத்தது அசுர வேகமாக இருக்கும். நாம் பார்க்கும்போது, தாமதமாக பார்த்துவிட்டோமே என்று தோன்றும்.
பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த கவனத்தை எவ்வாறு கொண்டு வருவது மற்றும் கொள்கை வகுப்பவர்கள் எவ்வாறு இந்த பிரச்னைக்கு துணிவுடன் செயலாற்றி, இந்த அலையை தடுத்து நிறுத்துவது என்று சில அறிவுரைகளையும் கூறுவதே இன்று எனது குறிக்கோள். அதற்கு மூன்று முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார். இரண்டாவதாக, அவர்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம் என்பது அதிர்ச்சியூட்டுமளவிற்கு நலிந்த நிலையில் உள்ளது. மூன்றாவதாக, கோவிட் – 19ன் பொதுவான அறிகுறிகள் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஆகிய மூன்றுதான் உள்ளது. இந்த பகுதிகளில் நாம் இந்த தொற்றுநோய் பரவுதலை குறைப்பதற்காக திட்டமிட வேண்டும். ஏனெனில் தற்போது நேரம் மிக முக்கியம், நம்மிடம் சில வாரங்களே உள்ளன மாதங்கள் அல்ல. இது பெரிய சவாலாக வெடிப்பதற்கு முன்னர், நாம் அதை செய்ய வேண்டும்.
இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் சர்வதேச பயணிகளாலேயே கொண்டுவரப்பட்டது. பெரும்பாலானோர் இதுவரை நகரங்களிலேயே உள்ளனர். இது நீண்ட நாட்கள் தொடர வாய்ப்பில்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் என ஒவ்வொருவராக பாதிக்கப்படுவார்கள். திடீரென அறிவிக்கப்பட்ட தடை உத்தரவால், நகரங்களில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துவிட்ட நிலையில், பிகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துவந்து டெல்லியில் தங்கி பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக நடந்தே தங்கள் கிராமங்களை சென்றடைந்த வியத்தகு நிகழ்வு நடந்தது. அவர்களும் தங்கள் கிராமங்களுக்கு வைரசை சுமந்து சென்றிருக்க வாய்புள்ளது.
இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியா கிராமங்களில், 70 சதவீதத்திற்கும் மேலான ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகள் தனியார் துறையினரால் தான் வழங்கப்படுகின்றன. மேலும் பிகார், மத்திய பிரதேசம், உத்ரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் தகுதியற்ற சுகாதார பணியாளர்களே 75 சதவீதத்திற்கும் மேல் ஆரம்ப சுகாதார மருத்துவ வசதிகளை வழங்கிவருகின்றனர். அவர்களை நாம் முறைசாரா துறை பராமரிப்பாளர்கள் என்று அழைக்கிறோம். நானும், என்னுடைய இணை ஆசிரியர்களும் இதுவரை செய்த ஆய்வுகளில், கிராமப்புற இந்தியர்களுக்கு கிடைக்கும் சுகாதாரம் தரமின்றி, மிகமிக மோசமான நிலையில் உள்ளதாகவே காட்டுகிறது. இங்கு சுகாதார பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மருத்துவ அறிவு மற்றுத் அனுபவம் குறைவாகவே உள்ளது. அவர்களுக்கு தெரிந்ததைவிடவும் குறைவான பணிகளையே அவர்கள் செய்கின்றனர். அதை நாம் தெரிவதற்கும், செய்வதற்குமான இடைவெளி என்று குறிப்பிடுகிறோம். இதனால், சுகாதார பணியாளர்கள், சரியான சிகிச்சையை குறைவாகவே பரிந்துரைக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தபோதும், தீங்கு விளைவிக்கக்கூடியதை அதிகமாக பரிந்துரைக்கிறார்கள். அவர்களின் அறியாமையின் தீர்வாக நாம் இதையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வயிற்றுப்போக்கு, நிமோனியா, மகப்பேறு மற்றும் காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு அவர்கள் ஒரே முறையில் சிகிச்சையளிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் பெற்ற சுகாதார பணியாளர்கள், பெரிய மூன்றாம் நிலை மையங்களில் நன்றாக பணியாற்றுகிறார்கள். இதிலுள்ள சோகம் என்னவெனில், இங்கு பணியாற்றுபவர்கள் முறையான மருத்துவர்களின் பிரதிநிதிகள் அல்ல அல்லது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வசதிகளும் கிராமப்புறங்களுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில், இரண்டில் ஒருபங்கு இந்தியர்கள் கிராமப்புற பகுதிகளில் வசிக்கிறார்கள். அதாவது இங்கு கூட்டம் அதிகம்.
ஒருவேளை கிராமப்புறத்தில் தொற்று அதிகளவில் ஏற்பட துவங்கினால், இருமல், காய்ச்சல், மூச்சுதிணறலால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரிக்கும். இவையனைத்தும், அபூர்வமான அறிகுறிகள் அல்ல. உண்மையில் காசநோயும் இருமல் மற்றும் காய்ச்சலுடன்தான் இருக்கும். (கோவிட் – 19க்கு ஏற்படுவது வறட்டு இருமல்) உலகளவில் காசநோய் தற்போது 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல - ஏழைகளை கவனிப்பதில் தோல்வி
பெரும்பாலான இருமல் மற்றும் காய்ச்சலுக்கு முறைசாரா துறை சுகாதார பணியாளர்கள் மூலமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களுக்கு, தொற்றுநோய் குறித்தும், எவ்வாறு ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். எவ்வாறு பரவலை தடுக்க வேண்டும் என்பதும் தெரியாவிட்டால், அவர்களின் மருத்துவ கிளினிக்குளே வெகு விரைவில் பரவலுக்கான காரணமாக அமைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டிருக்காது. அவர்கள் கிளினிக்குகளுக்கு கோவிட் – 19 தொற்று உடையவர்கள் வந்தால், அவர்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பது இந்த சுகாதார பணியாளர்களுக்கு தெரியாது. அவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கும் மருந்துகளையே வழங்குவார்கள். (அதில் ஒரு ஆன்டிபயாடிக், இருமல் மருந்து, காய்ச்சல் மருந்து மற்றும் வலி நிவாரணிகள் இருக்கும்) அதுவும் கொஞ்சம் நோயை கட்டுப்படுத்த சிறிது நேரம் உதவும். ஆனால் இதுபோன்ற கடுமையான தொற்றுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தங்க வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது. கிராமப்புறத்தில் அந்த வசதி கிடைத்துவிட்டால், சுகாதார அமைப்பையே மொத்தமாக திகைப்படைய செய்யும். ஆனால், இந்தியாவில், போதிய அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் இல்லை. அதனால் தேவையை சந்திக்க முடியாத நிலையே ஏற்படும்.
தற்போது இவ்வாறு சிந்தித்து பாருங்கள், அந்த சுகாதார பணியாளர், தன்னிடம் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலுடன் வரும் அனைவரையும் நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது பாதுகாப்பானது என்று எண்ணி, பரிசோதனைக்காகவும், ஆலோசனைக்காகவும் அங்கு அனுப்பினால் நிலை என்னவாகும்? அது ஒரு பெரியளவிலான தேவையை உருவாக்கும். நம்மிடம் குறைந்தளவிலான சேவையே உள்ளது. மேலும், தொற்று ஏற்பட்டுள்ள சந்தேக நோயாளிகள், கிராமத்தில் இருந்து நகரத்தில் உள்ள மையங்களுக்கு பரிசோதனைக்காக செல்ல முயற்சி செய்தால், அது பரவலை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும். இது அனைத்துமே பிரச்னையை ஏற்படுத்துவதாவே தெரிகிறது. அதுவே உண்மையும் கூட. இந்த சவாலில் இருந்து முன்னேறிச்செல்ல இன்னும் நேரம் இருக்கிறது. அதற்கு நான் பின்வரும் மூன்று அணுகுமுறைகளை அறிவுறுத்துவேன். முதலில் கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றிவரும் சுகாதார பணியாளர்களை தயார்படுத்துங்கள். என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இரண்டாவதாக, நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விளக்கி, அதை எவ்வாறு கையாள்வது என்று எடுத்துக்கூறுங்கள். மூன்றாவதாக முறையான சரியான கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இவை இந்த தொற்றுநோயிலிருந்து நாம் முன்னேறிச்செல்ல உதவும்.
முறைசாரா துறை சுகாதார பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் இருக்காது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வழிமுறைகள் உள்ளூர் மொழிகளிலேயே இருக்க வேண்டும். மேலும் அவை அவர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவை சுகாதார துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றிடம் தற்போது உள்ளதை விட சிறந்ததாக இருக்க வேண்டும். முறையான மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களிடம் இருந்து எதிர்ப்பை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இது போருக்கான நேரமல்ல. மருந்து நிறுவனங்களிடம் உள்ள மருத்துவ பிரதிநிதிகள் மூலம் இந்த முறைசாரா துறை சுகாதார பணியாளர்களை அணுகலாம். உள்ளூர் மொழிகளில் வீடியோக்களை உருவாக்கி அதில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதார பணியாளர்களுக்கு விளக்கி, அவர்கள் மூலம் மக்களுக்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
பீதியை தடுக்க நோயாளிகளுக்கு இந்த தொற்று குறித்து விளக்கலாம். ஒவ்வொரு காய்ச்சல் மற்றும் சளிக்காய்ச்சலும் சுகாதார அமைப்பை நாடுவதே நெருக்கடியை உருவாக்கும். நம்பகமான, ஆதாரத்துடன் தெளிவான தகவல்கள், சாதாரண மக்களுக்கும் கிடைக்கப்பெறாததால், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், போலியான தீர்வுகளுமே தற்போது நிறைந்து காணப்படுகின்றன. சுகாதார அமைச்சகமும், வாட்சப்பும் இணைந்து எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கின்றது. அதை மேலும் பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இறுதியாக, இந்த தொற்றுநோயை துரத்த முயற்சிப்பது பயனற்றது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புடன் இருக்கும் வழக்கத்திடம் இருந்து அது விரைவாகவே ஓடிவிடும். நாம் தற்போது கண்காணிப்பை, தேவை இருக்கும் இடத்தில் செய்து, இந்த தொற்று அடுத்தவாரம் எந்த இடத்தில் அதிகரிக்கும் என்பதை, கொள்ளை வகுப்பாளர்களுக்கு தெரிவித்து உதவவேண்டும். இந்தியாவில் செல்போன் மூலம் தொடர்புகொண்டு, தாங்களாகவே முன்வந்து சுயமாக அறிகுறிகள் குறித்து கூறுவதன் அடிப்படையில், அவர்களை மற்றும் அப்பகுதிகளை டிஜிட்டல் முறையில் கண்காணிப்பது போன்றவற்றை செயல்படுத்துவது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும். இதுபோன்ற நவீன சிந்தனைகள் தற்போது நமக்கு அதிகளவில் தேவை. அதன் மூலம் பாதிப்பு அதிகம் மற்றும் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து, அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கும், போதிய பரிசோதனை கருவிகள், நோய்தடுப்பு சிகிச்சைக்கான மருந்துகளை தயார்நிலையில் வைப்பதற்கும் உதவும். அது தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்காது. ஆனால், இதற்கு முன் நாம் தோற்றுப்போன விஷயங்களில் இருந்து பாடம் கற்று, நம்மை தற்காத்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
இக்கட்டுரையை எழுதிய மனோஜ் மோகனன் டியூக் பல்கலைக்கழகத்தின் பொது கொள்கைகள், பொருளாதாரம் மற்றும் உலக சுகாதார துறை பேராசிரியர்.
தமிழில்: R.பிரியதர்சினி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.