Advertisment

ஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல - ஏழைகளை கவனிப்பதில் தோல்வி

author-image
WebDesk
Mar 29, 2020 16:12 IST
india lock down corona virus covid 19

india lock down corona virus covid 19

சுகாதாரத்திற்கு செய்யப்படும் செலவுகள், செலவுகளே அல்ல, முதலீடு என்று இந்தியா எப்போதும் உணர்ந்ததே இல்லை. முன்எப்போதும் இல்லாத அளவு, தொற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய அளவு, பலமான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்புவதற்கு, இந்த ஊரடங்கு தடையின் வெற்றி முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

Advertisment

பிரதாப் பானு மேத்தா, கட்டுரையாளர்

இந்தியாவின் தேசிய ஊரடங்கு என்பது அவசியமான ஒன்றுதான். அதற்கு எதிராக இரண்டு வகையான விமர்சனங்கள் எழுகின்றனர். இந்திய பொருளாதாரம் ஏழ்மை நிலையில் உள்ளது. பல மில்லியன் மக்கள் விளிம்பு நிலையில் வாழக்கூடியவர்கள். அவர்களால் இந்த ஊரடங்கின் விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாது. இந்தியாவின் மக்கள் அடர்த்தி மற்றும் வாழ்க்கை நிலை, நிறைய இடங்களில், சமூக தனிமையை கடினமாக்குகிறது. இரண்டாவது வாதம், சமூக பரவலின் நீட்சி, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவில்லை.

தனிமைப்படுத்தலின் போது, குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருக்க எளிய வழிகள்!

இந்த விவாதங்களும் அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். இந்தியாவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஒருவேளை தொற்று ஏற்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி வைக்கக்கூடிய அளவிற்கும், மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் நம்மிடம் வசதி இல்லை. எனவே அவர்களை நோய் வரும் முன் காப்பாற்றுவதற்கான ஒரே வழி, எவ்வளவு சாத்தியமோ அந்த அளவிற்கு, இந்த பரவலை குறைப்பது மட்டும்தான். இதில் இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் சமூக பரவல் தற்போது, கையாளக்கூடிய அளவில் உள்ளது என்பது மட்டுமே. ஏழைமக்கள்தான் இந்த பரவலுக்கு காரணம் என்ற சந்தேகத்தை விதைத்து அவர்களுக்குதான், இந்த ஊரடங்கு தேவை என்று நம்பவைக்க முயல்கின்றனர். ஆனால் இது ஊறுவிளைவிக்க கூடிய சலுகை. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய எந்த பரவலும் ஏழைமக்களிடம் கணக்கிட முடியாத அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற நெருக்கடிகள் நல்லவற்றையும் கொண்டுவரும், தீயதையும் எடுத்துவரும். பஞ்சாப், ஒடிஷா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள், கடினமான சூழல்களில், தங்களின் சொந்த முயற்சிகளை எடுத்தது, இந்த விஷயத்தில் உற்சாகப்படுத்தக்கூடிய ஒன்றாகும். அதிகமாக புறக்கணிக்கப்பட்ட பஞ்சாயத்தும், உள்ளூர் அதிகாரிகளும் முக்கியமாகிறார்கள். தங்கள் ஊர்களில் சாத்தியமுள்ளவர்களை கண்டுபிடிப்பது, கண்காணிப்பது மற்றும் தனிமைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றலாம். நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அதில் சில மோசமாக தோல்வியடையலாம். இந்த சூழலில்தான் முன்னணி ஊழியர்கள் நிறைய யோசனைகளை முன்வைக்கிறார்கள். அதற்காக அவர்களை அங்கீகரிக்காதது தவறு. இந்த நெருக்கடி கூட்டாட்சி மற்றும் பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் கொண்டுவரும். தற்போதைய அரசின் செயல்பாடு பழைய நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறது.

இந்தியாவை ஒரு முடிவுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நிலை கவலையளிக்கிறது. இதற்கு முன் இதுபோன்ற சவால்களை இந்தியா சிறப்பாக கையாண்டுள்ளது. ஆனால், தேசத்தின் முன் தயாரிப்பும், தேசிய ஊரடங்கின் நன்மையை எடுத்துக்கொண்டு பின்தொடர்வதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. ஊடரங்கு அறிவிப்பு, நமது தேச கொள்கைக்கு ஏற்ப, அதனுடன் ஒத்துப்போவதாக இல்லை. இது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை காட்டுகிறது. ஒன்று ஏழைகளுக்கான பொருளாதார வீழ்ச்சி மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. இது ஆரம்ப நாட்களில்தான், ஆனால், நன்மைக்கான அறிகுறிகளாக இல்லை.

மத்திய அரசின் மீதான விமர்சனங்கள் சரிதான். பிரச்னை முழுவதிலுமே ஏழை மக்கள் குறித்து பின்னர் சிந்திக்கிறது அல்லது அவர்களை இழக்கிறது அல்லது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்த நெருக்கடி காலத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டங்களையே எடுத்துக்காட்டாக கொள்வோம். அது மந்திரவாதியின் மாயாஜாலம் போல் உள்ளது. முன்னணி தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத்திட்டம், ரேஷன் கடைகளில் உயர்த்தப்பட்ட அளவு உணவுப்பொருட்கள் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்று. இதுபோன்ற பேரழிவு காலங்களில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், அதிகளவில் பாதிக்கப்படக்கூடியவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் வாழ்க்கைக்கு உத்ரவாதம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக, நமக்கு தரப்படுவது, மோசமாக கொஞ்சம், கொஞ்சமாக வழங்கப்படுகிறது. பெரிய அர்ப்பணிப்பு என்ற முகமூடியின் பின் செய்யப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் வைத்தியநாதன் ஐயரின் அறிக்கையாக மார்ச் 27ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களின் கீழ், குறிப்பாக பரிமாற்றம் செய்யப்படும் பணம், அதிர்ச்சியூட்டுமளவிற்கு குறைவாக உள்ளது. நெருக்கடி என்பது அரிதான நிகழ்வு. பொருளாதார நிபுணர்களும், வங்கியாளர்களும் அரசியல் கட்டமைப்பை கடந்து, அறிவார்ந்த வாதங்கள் முன்வைக்கிறார். அவற்றின் சாரம் என்னவெனில், நாளை ஏற்படக்கூடிய பாதுகாப்பு கணிக்க முடியாத அளவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. அரசின் மறைவான ஆதரவு என்ற வழிமுறை தெளிவாக இல்லை.

இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள இந்த பிரச்னை, முன் சிந்தனையால் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பணப்பரிமாற்றம், உணவு, உறைவிடம் குறித்து முன்பே அறிவித்திருந்தால், அவர்கள் புலம்பெயர வேண்டியதன் அவசியத்தை தடுத்திருக்கும். நமக்கு கைகளை தட்டுவதற்கும், பாத்திரங்களை தட்டுவதற்கும் நேரம் கொடுக்கப்பட்டதுபோல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வீடு சென்று சேர்வதற்கான நேரத்தை வழங்கியிருக்கலாம். சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் மீதான நம்பிக்கை ஏற்கனவே உடைந்துவிட்டது. குற்றத்திற்கு நிகராக அவர்கள் நடந்தே வீடுகளுக்கு செல்லும் இந்த செயல், ஏதோ நிகழப்போகிறது என்பதை உறுதிசெய்கிறது. ஏழைகளை இதுபோன்ற நெருக்கடி காலங்களில் இந்நாடு நடத்தும்விதம், பணமதிப்பிழப்பின்போது அவர்களை நடத்தியது போலவே உள்ளது. பொதுநலனுக்காக அவர்கள் தியாகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நாடு குறைந்தளவே அவர்களின் தேவைகளை ஏற்றுக்கொள்கிறது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமூகத்திற்கு ஆபத்தான ஒன்றுதான். நாம் அந்த சவாலையும் எதிர்த்து போரிடவேண்டும். பொருளாதார வீழ்ச்சியை கையாள்வதையும் நெருக்கடி நிலையில் சேர்க்க வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் நாம் காட்டிய தயக்கம், தவறான நடவடிக்கைகள், நீதிக்கான கேள்விகளை முடக்கி, நாம் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை காண்பிக்கிறது. அது நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை.

கொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்... ஏமாந்து விடாதீர்கள்!

சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் வெளிப்படையில்லாத தன்மை உள்ளது. அது பற்றாக்குறையை ஏற்படுத்தும். பல இடங்களில் இது வெளிப்படையாகவே தெரிகிறது. பரிசோதனைகளை பொறுத்தவரையில், இந்தியாவில் பரிசோதனை வசதிகள் குறைவாகவே உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், இருக்கும் வசதிகளையே அது முறையாக பயன்படுத்துவதுபோல் தெரியவில்லை. அரசு நிறைய பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்கிறது. ஆனால், இந்த பற்றாக்குறை கருவிகளை வைத்து, நமது பரிசோதனை முறைகள் என்ன என மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் இதில் கவலையளிப்பதாக உள்ளது. இந்தியா எதை சந்திக்க முயற்சி செய்கிறது. அதிக பரிசோதனைகள் செய்யும்போது, அதிக பீதி ஏற்படுமோ என்றும் அஞ்சுகிறதா? அல்லது அது சுகாதாரத்துறையின் மீது அதிக சுமைகளை ஏற்படுத்திவிடுமோ என்று எண்ணுகிறதா? ஆனால் இப்போது நாம் ஒரு பரிசோதனை கொள்கையை வகுத்துவிட்டால், அது எதிர்காலத்தில் ஊரடங்கை குறைக்கும். பரிசோதனையும் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல, தேவையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

சுகாதாரத்திற்கு செய்யப்படும் செலவுகள், செலவுகளே அல்ல, முதலீடு என்று இந்தியா எப்போதும் உணர்ந்ததே இல்லை. முன்எப்போதும் இல்லாத அளவு, தொற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய அளவு, பலமான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்புவதற்கு, இந்த ஊரடங்கு தடையின் வெற்றி முன்மாதிரியாக இருக்க வேண்டும். இத்துறைக்கு கூடுதலாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உறுதிகொள்ள வேண்டும். செயல்திறன்களை அதிகரிப்பதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் மாஸ்க்குகளின் தயாரிப்பை அதிகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை இந்தியாவிற்கு தேவை. போதிய அளவு பரிசோதனை செய்வது, கண்காணிப்பது, முன்னணி ஊழியர்கள், பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். அவையெல்லாம் ஊரடங்கை குறைக்கவும், மீண்டும் ஊரடங்கு தேவையில்லை என்ற நிலையை எட்ட உதவவேண்டும். இதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகள், தொற்று அல்லாத காலத்திலும் நமக்கு துணை நிற்கும்.

பிரதமர் குடிமக்களை எப்போதும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்துகிறார். பெரும்பாலானோர் பணிகிறார்கள். தற்போது நாடே தயார்நிலையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பொருளாதாரத்தை பொருத்தவரையில் அது அர்த்தமுள்ளதாகவே தோன்றுகிறது. சுகாதார உட்கட்டமைப்பை நம்பிக்கைகொள்ளும் வகையில் காண்பிக்கிறது.

இக்கட்டுரையை எழுதியவர் பிரதாப் பானு மேத்தா. இந்திய கல்வியாளர், அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment