Advertisment

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்

மிக அவசரமாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தவறான இடங்களில், தவறான நேரங்களில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
migrant workers, Coronavirus in india

migrant workers, Coronavirus in india

பார்த்தா முகோபாத்யாய், முக்தா நாயக்.

Advertisment

கோவிட் – 19 பல்வேறு நாடுகளில் மக்களை வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளது. இந்தியாவில், என் மக்களை அது தெருவில் நிறுத்தியுள்ளது அல்லது தனியே நீண்ட தூரம் நடக்க வைத்துள்ளது. சாலை போக்குவரத்தும், ரயிலும் நிறுத்தப்பட்ட பின்னர், அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களோ அல்லது நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களோ நடந்தே வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய் தனது உடைமைகளை தோளில் சுமந்து செல்கிறாள், தகப்பனோ தன் குழந்தைகளை தோளில் சுமந்து செல்கிறார். இது ஒரு நம்பகத்தன்மையின் பிம்பம். ஆனால் ஒரு மகத்தான சக்தியின் பிம்பமும் ஆகும். அது செயலற்ற முறையில் இந்த தடையை ஏற்றுக்கொண்ட ஆட்சியாளர்களுக்கு, தனிமனிதனின், ஒரு தெளிவான நினைவூட்டலும் ஆகிறது.

100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன?

மக்கள்தொகை கணக்கெடுப்புகளும், தேசிய மாதிரி கணக்கெடுப்புகளும், கள ஆய்வுகளும், இந்தியாவில் குறுகிய கால தொழில் செய்யும் தொழிலாளர்கள், விளிம்பு நிலை மனிதர்களின் இடப்பெயர்வு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது என்று ஆட்சியாளர்களுக்கு மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வந்தது. அதை, கடந்த வாரம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் பாதசாரிகளாக நடந்தே சென்ற கூட்டத்தினர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். மிக அவசரமாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தவறான இடங்களில், தவறான நேரங்களில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவில்லை. தற்போது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.

முதலில், புலம்பெயர் தொழிலாளர்களை நாம் திரும்பிச்செல்ல வற்புறுத்தக்கூடாது என்பதை அரசு முதலில் உணரவேண்டும். அவர்களை ஆட்டு மந்தைகளைப்போல் அடைத்து வைத்திருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்திய நம் ஊரடங்கின் குறிக்கோளுக்கு அது உதவியிருக்குமா? வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்புடன், பெரும்பாலும் உள்ளூர் சமூகத்துடன் கூட்டு வைத்திருக்கும், மாநில அரசுகளும் இந்த ஊரடங்கை ஏற்றுக்கொண்டன. தற்போது திடீரென தோன்றிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, நகரின் அனைவரும் ஊரடங்கிற்காக வெளியே வராமல் இருக்கும் நிலையில், விரைவாக உணவு மற்றும் தங்குவதற்கான இடங்களை நிறுவுவதற்கு முடியவில்லை. ஆனால் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் நடந்தனர். அப்போது அரசு ஒரு முடிவெடுத்தது. முதலில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகளை அளித்தது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து, அரசு நெடுஞ்சாலைகளையே உறைவிடமாக மாற்றியது. விளையாட்டு அரங்கங்களை தற்காலிக தங்குமிடங்களாக மாற்றியது. மற்ற நாடுகள் அவற்றை மருத்துவமனைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஏன் நடப்பது தொடர்கிறது என்பதற்கு பதிலளிக்க முடியும். ஏனெனில் அதற்கு காரணங்கள் உள்ளன. அவை, முறையாக செயல்படுத்தப்படாத உணவு வழங்கல், குறைவான விழிப்புணர்வு, அறுவடைக்கு காத்திருக்கும் ரபி பயிர்கள், போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை கேரளாவில் கூட புலம்பெயர் தொழிலாளர்களை தெருவிற்கு கொண்டு வந்தன. ஆனால் மனதளவில் அவர்களின் நடை, இந்த நாட்டின் மீதான தீவிர அவநம்பிக்கையை மட்டுமே அளிக்கிறது. குறிப்பாது அது உதவுகிறேன் என்று உத்ரவாதமளிக்கும்போது மேலும் அவநம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது. அவர்கள் பாதி பாதியாக மக்களை அனுப்பிவைக்கிறோம் என்று கூறி தந்திரமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால், இயல்புநிலை திரும்பியவுடன், அவர்கள் மக்களுக்கு உதவுவது சந்தேகம்தான்.

வீட்டிலிருந்து தொடர்ந்து வரும் அழைப்புகள், இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் இருக்கவே விரும்புகின்றனர். அப்போது மட்டுமே அவர்கள் பலமாக உணருகின்றனர். அல்லது எந்த பிரச்னை என்றாலும், அதை தனது சொந்த ஊரில் இருந்து எதிர்கொள்வதையே பாதுகாப்பாக கருதுகின்றனர். நமது நகர மக்கள் எப்போதும் புலம்பெயர் தொழிலாளர்களை தவிர்ப்பார்கள். இன்றும் அவர்களை தங்க அனுமதிப்பதற்கு ஒரே காரணம் அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கு மட்டும்தான்.

ஒரு நாடாக, இந்த நாடு அவர்களுக்கு பக்கபலமாக உள்ளதென்று மக்களை நம்பவைப்பதில் நாம் வெற்றியடையவில்லை. எந்த சூழலிலும் மக்களை பாதுகாப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்திய குடிமகன்களாக அது அவர்களின் உரிமையாகும். வன்முறை மற்றும் அடக்குமுறை என்ற லென்ஸ் வழியாகவே ஏழைகள் இந்த நாட்டை பார்க்கிறார்கள். அதற்கு தற்போது போடப்பட்டுள்ள ஆணைகள் ஆதாரமாகும். எப்போதாவது அவர்கள் மீதும் அரசு அக்கறை காட்டுகிறது.

உண்மையில் நாடு முழுவதும் இந்தியர்கள் நடக்கும் படங்கள் உலகையே பரபரப்பூட்டுவதாக இல்லை. அதற்காக நாம் கவலைகொள்கிறோமா? அரசு நமக்கு அவ்வப்போது நினைவூட்டிக்கொண்டிருக்கும், சமூக பரவல் இல்லையெனில், (ஒருவேளை சில கொத்தான பரவல் இருக்கலாம்) நடந்தேசெல்லும் புலம்பெயர் தொழிலாளர் குழுவினர் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வெளியே சுற்றுவது குறித்து கவலையில்லை. ஆனால், சமூக பரவல் தொடங்கிவிட்ட நிலையில், நாம் அதிக கவலைகொள்ள வேண்டும். ஆனால், பரவல் சோதனையை அரசு நடத்துவதற்கு மறுக்கிறது. எனவே தற்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் நூறு கிலோ மீட்டர்களுக்கு மேல் நடப்பதற்கு அனுமதிக்க வேண்டுமா? அது மனிதாபிமானமற்ற செயலாக தெரிகிறது. அவர்களுக்கு பேருந்து வசதி வழங்கினால், டெல்லியில் இருந்து வருவதற்கு உத்ரபிரதேச அரசு ஆயிரக்கணக்கான பேருந்துகளை ஏற்பாடு செய்ததைப்போல், தேவையின் அடிப்படையில் ஒரு நடைமுறையை நாம் பின்னபற்ற வேண்டும். வாய்ப்பு கிடைத்தால், அனைவரும் வீடுகளுக்கு செல்வதற்கே விரும்புவார்கள்.

இரண்டு அணுகுமுறைகளை கருத்தில்கொள்ளலாம். அவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டுமெனில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கலாம். ஆனால், அதற்கு அவர்கள் வந்து, தங்கள் பெயர்களை பதிந்துகொண்டு, நியமிக்கப்பட்ட உறைவிடங்களில் தங்க வேண்டும். அவற்றை தற்காலிக சிறைச்சாலைகள் என்று அழைப்பது உதவாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைக்கு, இது நம்பிக்கையளிக்கக்கூடிய வகையிலான வாக்குறுதியாக இருக்கும். அதை பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ வழங்கவேண்டும். பரவலை தடுப்பதற்கு, நாம் புலம்பெயர் தொழிலாளர்களை அடையாளப்படுத்தி, அவர்களின் வீடுகளை கண்டுபிடித்து, உள்ளூர் அரசுக்கு அவற்றை தெரியப்படுத்தினால் நல்லது. இத்தகவல்களை அவர்களின் ஆதார்கார்டுகளின் மூலம் திரட்டலாம்.

ஆதார் கார்டுகளில் உள்ள அவர்களின் தகவல்களை கண்டுபிடித்து, நடக்கும் அளவு தொலைவில், எடுத்துக்காட்டாக 100 கிலோமீட்டர் தொலைவு எனில், அவர்கள் விரும்பினால், அவர்களை நடக்க அனுமதிக்கலாம். அவர்கள் தங்கள் வீடுகளை அடைந்தவுடன், பஞ்சாயத்துக்கள் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தலாம். ஆதார் தகவல்கள் தாமதமாக கிடைத்தாலும், அவர்களுக்கு தெரியும் வெளியூர் சென்று திரும்பியவர்கள் குறித்த விவரம். கேரளாவும், ஒடிஷாவும், பஞ்சாயத்துக்கு பொறுப்புகளை கொடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் நிதிக்குழுவும் தேசம் முழுவதும் இதை விரிவுபடுத்தி, செயல்படுத்தாலம்.

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு பஞ்சாயத்துக்கள் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்கள், நியமிக்கப்பட்ட உறைவிடத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும், யாருக்கெல்லாம் வீட்டிற்குச் செல்ல வேண்டுமோ அவர்கள் தங்கள் பெயர்களை டிஜிட்டல் பயணச்சீட்டு முறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களின் ஆதார் எண், முகவரி மற்றும் சென்று சேரவேண்டிய இடம் ஆகியவை ஒரு மையப்படுத்தப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும், அங்கிருந்து அவர்களுக்கு குறுஞ்செய்திகளிலோ, வாட்சப்விலோ அவர்கள் செல்ல வேண்டிய பயண நாள், நேரம், பேருந்து பயணசீட்டு ஆகியவை வரும். அச்சிடப்பட்ட பட்டியல் உறைவிடத்தில் இருக்கும். பேருந்துகள் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்திற்கே சென்று அழைத்துவரவேண்டும். மத்திய பேருந்து நிலையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இதை செய்யலாம். அவர்களின் ஆதார்கார்டுகள் பேருந்து கிளம்பும் முன் சரிபார்க்கப்படும்.

அதே நேரத்தில், இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று சேரும் இடங்கள் கோவிட் பரவலுக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாகும் என அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனங்களிடம், அவர்களின் அடிப்படை நிலையங்களில் இருந்து விஎல்ஆர் டேட்டாவை ஆய்வு செய்ய கேட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவும், பின்னரும், சந்தாதாரர்கள் அதிகரித்துள்ள பகுதிகளை கண்டுபிடிக்க வேண்டும். சாத்தியமெனில் இதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடத்தையும் கண்டுபிடிக்கவேண்டும். இதை உடனடியாக, தகவல்கள் அழிக்கப்படுவதற்கு முன்னர் செய்ய வேண்டும்.

நிஜாமுதீன் மாநாடு: 4000 பேரை அடையாளம் காண்பதில் 20 மாநில அரசுகள் மும்முரம்

ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு, மக்களை எதிர்பார்த்து, ஊரடங்கை செய்வதில் பலனில்லை. நாம் தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்கள். அனைவரின் முகவரி குறித்த தகவல்கள் நம்மிடம் உண்டு. அதன்மூலம் நாம் மிகச்சிறப்பாகவே இந்த பிரச்னைகளை கையாளலாம்.

இக்கட்டுரையை எழுதிய பார்த்தா முகோபாத்யாய், முக்தா நாயக் இருவரும், புதுடெல்லி, கொள்கை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவர்கள்.

தமிழில்: R.பிரியதர்சினி.  

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க - Migrant workers distrust a state that does not take them into account

 

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment