Advertisment

ஜார்ஜ் பெர்னாண்டஸை நினைவு கூறுவோம் - தன்னலமற்ற அரசியல்வாதி

எந்தவொரு தலைவரும் அதிலும் இவரைப்போன்ற முக்கிய தலைவர் அவர்களின் பொதுநலப்பணிகளை விளம்பரப்படுத்தவே விரும்புவார். ஆனால், அவரின் சாதனைகளுக்காக எவ்வித ஆட்டமும், பாட்டுமின்றி அமைதியாக இருந்தவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
george fernandes a selfless politician 171103 - ஜார்ஜ் பெர்ணான்டசை நினைவு கூறுவோம் - தன்னலமற்ற அரசியல்வாதி

george fernandes a selfless politician 171103 - ஜார்ஜ் பெர்ணான்டசை நினைவு கூறுவோம் - தன்னலமற்ற அரசியல்வாதி

Upamanyu Hazarika

Advertisment

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விளம்பரத்தை தவிர்ப்பார். அது எந்த அளவுக்கு எனில், டெஹெல்கா ஸ்டிங் குறித்து உண்மை நிலவரங்களை அவர் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கி கூறிவில்லை. அதற்காக அவர் விமர்சிக்கப்பட்டார்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இறந்த பின்னர் அவருக்கு பத்மவிபூஷண் விருது கொடுத்து தற்போதை இந்திய அரசு கவுரவம் அளித்திருப்பது, அவர் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு அமைவதற்கான அடித்தளம் அமைத்ததற்கான அங்கீகாரமாகும். அவரது உறுதி, சமரசமின்மை, விடாப்படியான தன்மை மற்றும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுவது போன்ற குணங்களே, எதிர்கட்சித்தலைவர்களுடன் நம்பகத்தன்மையுடன் நடந்து கூட்டணி அரசிற்கு உதவி, வி.பி.சிங் தலைமையில் முதன்முதலில் கூட்டணி அரசு அமைவதற்கும், 1996 முதல் 2000மாவது ஆண்டு வரை வலுவான மற்றும் நிலையான தேசிய ஜனநாயக கூட்டணி அமைவதற்கும் காரணமாக இருந்தது. இதில் குறிப்பிடத்தக்க மற்றும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், விரைவில் பிரபலமடையக்கூடிய டிவி போன்ற மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத காலத்திலேயே, கர்நாடகாவில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, மும்பையில் மட்டுமல்ல பிகாரிலும் சிறந்த தலைவராக விளங்க முடிந்தது. வாழ்க்கை முழுவதுமே போராடியவர். வாய்ப்பற்றவர்களுக்காக போராட்டம், அதிகாரமிக்க இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரசை எதிர்த்து போராட்டம், ஊழலை எதிர்த்து போராட்டம். பாதுகாப்புத்துறை அமைச்சராக, கப்பற்படை தலைவர் அட்மிரல் விஷ்ணுபகவத்தை பணியிலிருந்து பதவிநீக்கம் செய்வதிலும் தயக்கம் காட்டவில்லை.

எம்.எஸ்.கோல்வால்கரின் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தால்தான் அவரின் ஆற்றல் நமக்கு புரியும்

ஏழைகள் மற்றும் வறியவர்களுக்கு அவரது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதே, அவர்கள் மீது அவர் கொண்டிருந்த அதீத விசுவாசத்தை காட்டுகிறது. எல்லோரிடமும் இதேபோன்றதொரு கருணைதான். ஒருமுறை பின்னிரவில் நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பியபோது, அவரது வளர்ப்பு நாய் அவரின் படுக்கையில் உறங்கியதை பார்த்த அவர், அந்த நாயை தொந்தரவு செய்யாமல், தரையிலே பாயை விரித்து படுத்து உறங்கினார். அவரின் தனிப்பட்ட வேலைகள் அனைத்தையும் தானே செய்துகொள்பவர். தனது உடைகளையும் தானே துவைத்துக்கொள்வார். தினமும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் இதை செய்துகொள்வார். நிறைய நேரங்களில் சில முக்கிய நபர்களுடனான உரையாடல் கூட அவரது பாத்ரூமில்தான் நடக்கும். ஏனெனில் துணி துவைத்துக்கொண்டே பேசுவார்.

அவர் சீனர்களை எப்போதும் போற்றுவார். ஏனெனில், அவர்கள் ஊழழுக்கு மரண தண்டனை விதிப்பவர்கள். இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், ஊழல் குறையாது. அவர் ஊழல் எவ்வாறு கட்சிகள் முழுவதும் செழித்து வளர்ந்திருக்கிறது மற்றும் இங்குள்ள தலைவர்களிடமும் உள்ளது என்பது குறித்து நாடக பணியில் தெரிவிப்பார். மிரட்டல் கூட மென்மையாக உள்ளதாக குறிப்பிடுவார். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த இரண்டு தலைவர்கள் சந்திக்கிறார்கள் எனில், அதில் ஒருவர் மற்றவரிடம் கூறுவார், என்னைப்பற்றி உனக்கு தெரியும், உன்னைப்பற்றி எனக்கு தெரியும். இதனால்தான் நானும் அமைதியாக இருக்கேன், நீங்களும் அமைதியாக இருக்கீங்க என்று கூறி நாடகத்தனமாக உதடுகளை மூடி, விரலை வாயில் அமைதியை காட்டும் வகையில் கூறுவார்.

நேரு, காந்தி குடும்பத்தினர் மீதான அவரது விருப்பு, வெறுப்புகளுக்கு அவரது சொந்த விருப்பங்கள் காரணமல்ல, அவர்கள் நாட்டுக்கு செய்த தீங்குதான் என அவர் தீவிரமாக நம்புகிறார். 1998ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தியபோது, வி.பி.சிங் இல்லாவிட்டால், நாம் அவரைப்போன்ற ஒருவரை உருவாக்கியிருக்க வேண்டும் என்பதை பிரபலாகும் வகையில் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிகரமான முதல் பரிசோதனை, முற்றிலும் வேறான கூட்டணியுடன் என்பதே அனைவர் மத்தியிலும் அவர் மீதான மரியாதைக்கு சாட்சியாகும். எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்கு எதிரான, அவரது சுயநலமில்லாத அர்ப்பணிப்பிற்கு தேஜ கூட்டணி கடமைபட்டுள்ளது. உண்மையில் 1999 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றபின்னர் கூட, சோனியா தலைமையிலான அரசை ஆதரிக்க கூடாது என்பதற்கு முலாயம் சிங் யாதவை இணங்கச் செய்யுமளவிற்கு செயல் வீரராக இருந்தார்.

எந்தவொரு தலைவரும் அதிலும் இவரைப்போன்ற முக்கிய தலைவர் அவர்களின் பொதுநலப்பணிகளை விளம்பரப்படுத்தவே விரும்புவார். ஆனால், அவரின் சாதனைகளுக்காக எவ்வித ஆட்டமும், பாட்டுமின்றி அமைதியாக இருந்தவர். ஒவ்வொரு ஆண்டும் சியாச்சின் உச்சியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு கனடாவில் உள்ள அவரின் சகோதரர் பிளம் கேக் வழங்குவார். பெங்களூரில் உள்ள கோஷி பேக்கரியில் இருந்து வரவழைத்து, தானே எடுத்துச்சென்று அவர்களுக்கு வழங்குவார். அதற்காக எந்த ஆரவாரமும் செய்யமாட்டார். அவரது பங்ளாவிற்கு அருகில் அடுத்தடுத்து இருந்த பல்வேறு குடியிருப்புக்களை பர்மாவில் இருந்து வந்த அரசியல் அகதிகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் வழங்கியுள்ளார். அதுவும் எவ்வித விளம்பரமும் இன்றியே செய்துள்ளார்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விளம்பரத்தை தவிர்ப்பார். அது எந்த அளவுக்கு எனில், டெஹெல்கா ஸ்டிங் குறித்து உண்மை நிலவரங்களை அவர் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கி கூறிவில்லை. அதற்காக அவர் விமர்சிக்கப்பட்டார். சவப்பெட்டி ஊழலில், கார்கில் போரின்போது இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்வதற்கு அவசரமாக சவப்பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதற்காக அமைச்சரின் அறிவுரை இன்றி இணை செயலாளர் அலுவலக அளவில் இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின. அதற்கும் இவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இருந்த உண்மைகளை அவரது நண்பர் ஆர.வி.பண்டிட் புத்தகத்தில் விளக்கியிருந்தார்.

அரசியலில் உச்சபட்ச வெற்றியை அடைந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தலைவர்கள் அரசியலின் ஆச்சர்யம் என்று தான் கூறவேண்டும். அதற்கு பின்னரும் அவர் சுயநலமின்றியே செயல்பட்டார். ஆபிரகாம் லிங்கனின் குணத்திற்கான சோதனையில் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஒருவரின் குணத்தை சோதிக்க, அதிகாரம் வழங்கப்பட்டு, அவர் பாதகமான சூழ்நிலையில் நடந்துகொள்கிறார் என்பது பரிசோதிக்கப்படும். அதில் இன்றைய சூழலில் இவர் தனித்தன்மையுடன் திகழ்ந்தவர்.

உபாமன்யு ஹசரிக்கா என்ற உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எழுதிய கட்டுரை. இவரே தெஹல்கா வழக்கில் ஜார்ஜ் பெர்ணாண்டசுக்காக ஆஜரானவர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment