மேக்னாட் தேசாய்
இந்தியாவின் இயல்பான தன்மை என்பது குறித்தும், யார் உண்மையான இந்தியாவின் குடிமக்கள் என்பது குறித்தும், இன்னும் நான்கு ஆண்டுகள் அரசியல் விவாதங்கள் நடக்குமோ என சிறிது சந்தேகமாக உள்ளது. நேருவின் மதச்சார்பற்ற இந்தியா அல்லது இந்துக்களின் தேசம் என்பதை கட்டாயமாக முன்வைத்து போட்டிகள் ஏற்பட்டு போராட்டம் நடைபெறுமா? இந்த விவாதத்தில் வரலாறு முக்கியமான ஒன்றாகும்.
கொரோனா பாதிப்பு தீவிரமானால், நாட்டின் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்திக்கும்
இந்தியா ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்து, 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது என்பது இதில் ஒரு முக்கியமான விஷயமாக மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்படுவதாகும். பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்ற அர்த்தமும் இதில் அடங்கியுள்ளது. துல்லியமானதாகவே இருந்தாலும், இது வரலாற்றின் ஒரு பகுதிதான். இது வடஇந்தியாவின் கதை மற்றும் முக்கியமாக அது இந்தி பேசும், அதாவது பீமாரு மாநிலங்கள் என்ற பகுதியை மட்டுமே சேர்ந்ததாகும். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை முஸ்லிம் ஆட்சியாளர்கள் நெருங்கவில்லை. சில நூறாண்டுகள் அவர்கள் வங்காளத்தைக்கூட நெருங்கவில்லை. தென்னிந்தியாவையும் அவர்கள் நெருங்கவில்லை. ஔரங்கசீப் தனது வாழ்நாளின் கடைசி 25 ஆண்டுகள் தெற்கு பகுதியை வெற்றிகொள்ள எண்ணி தோல்வியையே தழுவி வந்தார்.
அந்த காலவரிசையில் கூட பாகுபாடு உள்ளது. சிந்து சமவெளி பகுதிகளில் முகமது பின் காசிமும், குஜராத் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் கஜினி முகமதுவும் ஊடுறுவினார்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஆட்சி செய்வதற்காக தங்கவில்லை. முகமது பின் காசிமுக்கு பின் 500 ஆண்டுகள் கழித்து, டெல்லியில் சுல்தான்களின் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர், 13ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில்தான் வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி இருந்தது என்று வரையறுக்கலாம். தென்னிந்தியாவின் வரலாறு முற்றிலும் மாறுபட்டது. இந்தியா எப்போதும் மற்ற நாட்டினர் மீது முதலில் போர் தொடுப்பவனாகவோ அல்லது அதை ஆக்கிரமிப்பவனாவோ இருந்ததில்லை என்று இந்திய அரசியல்வாதிககள் மற்றும் பாஜகவினரும் அடிக்கடி கூறுவார்கள். இது ஒரு சுவாரஸ்மானதும், உண்மையுமானதுமான கூற்று போல் தெரியும். ஆனால் அது உண்மை கிடையாது. இதை இந்தி பிரந்தியத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் நம்பி மீண்டும், மீண்டும் கூறி வரலாம். ஆனால், மாமன்னர் ராஜராஜசோழன் தனது ஆட்சியை கடல் கடந்து மலாய் தீவுகள் வரை வியாபித்திருந்தார் என்பது தென்னிந்தியர்களுக்கு தெரியும்.
இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
தென்னிந்தியர்கள் முஸ்லிம்களின் முரட்டுத்தனமான அத்துமீறலை அனுபவித்ததில்லை. முஸ்லிம் வருகைக்கு முன்னரே, பல நூறாண்டுகளாக அரேபியர்கள் இந்தியாவுடன் வர்த்தத்தில் தொடர்பில் இருந்தார்கள். வடஇந்திய பகுதிகளை முஸ்லிம்கள் ஆட்சி செய்தபோது, தென்னிந்தியாவில் விஜயநகர பேரரசு செழித்திருந்தது. முழு ஆதிக்கத்தையும் பெற்ற பின்னர்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் துவக்கம் 1857ம் ஆண்டு முதல் ஆரம்பமானது என்று வரலாறு கூறுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை (அதுவும் சுதேச அரசுகளின் மீது ஆதிக்கத்துடன்) ஆண்ட ஒரே வெளிநாட்டு ஆட்சியாளர் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே, அதுவும் 90 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பின்னர், இந்தியா முழுவதையும் முதலில் ஆட்சி செய்தவர் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆவார்.
இந்தியாவிற்கு பல வரலாறுகள் உண்டு. இந்தியாவின் வேற்றுமையின் அடிப்படை அதுவேயாகும். ஒற்றை அமைப்பு என்பது அதன் மீது காலந்தோறும் திணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான வரம்புகளை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. அசாமை எடுத்துக்காட்டாக கெள்ளலாம். அசாமியர்கள் தங்கள் தேசம் என்பதில் ஒரு நிலையற்ற கருத்தை பேணுகிறார்கள். அசாமியர்கள் என்றே கூறிக்கொள்கிறார்கள். அவர்களும் இந்தியர்கள்தான். ஆனால், அவர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதையே மஹாராட்டிரர்கள், தமிழர்கள், காஷ்மீரிகள் என ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.
இந்து இந்தியாவை ஒருவர் வெல்ல வேண்டும் என்று நினைத்தால், அவர் இந்துவின் பண்புகளான வேற்றுமைகளை முதலில் கவனிக்க வேண்டும். ஒற்றை கடவுளோ அல்லது அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு ஒற்றை புனிதநூலோ இல்லை. அவர்கள் யாரை வழிபடவேண்டும். யாரை அவர்களுக்கு மத்தியில் அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். விநாயகரோ அல்லது ஹனுமனோ அது அனைத்து இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவருக்குமான கடவுளே ஆவார். இந்தியா என்பது பலர் சேர்ந்து ஒன்றுபட்டு வாழும் நாடு. அது ஒருவருக்கு மட்டுமானது அல்ல.
தமிழில் : R. பிரியதர்சினி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.