Advertisment

ராஜபக்‌ஷேவின் இந்தியப் பயணம்: தமிழர்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahinda Rajapaksa’s India visit, New Delhi likely to raise Sri Lankan Hindu Tamil’s issues

Mahinda Rajapaksa’s India visit, New Delhi likely to raise Sri Lankan Hindu Tamil’s issues

மகிந்த ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஈழத்தமிழர்கள் பிரச்னை மறறும் இந்தியப்பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் குறித்தும் விவாதிக்கப்படும்.

Advertisment

கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக பதவியேற்ற சில மாதங்களில் அவரது சகோதரர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் இந்தியப்பயணம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிங்கள தேசிய அலை காரணமாக இம்முறை இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழர்களுக்கு எதிரான நிலை இம்முறை முதன்மையானதாக இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டரில் புனித அந்தோணியார் சிலை உள்ளிட்ட கத்தோலிக்கர்களின் சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், அதில் முந்தைய அரசு வீழ்ச்சியடைந்ததும் இவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் தேவலாயங்களில் நடந்த தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் 10 சதவீத இஸ்லாமியர்கள், அதுவும் அவர்கள் பெரும்பான்மை தமிழர்களாகவே இருந்ததும், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் வசிப்பவர்கள் என்பதும் ராஜபக்சே சாகோதரர்களுக்கு சாதமாக அமைந்தது.

அரசியலமைப்பு சட்டம் எனும் கலங்கரை விளக்கம்

அந்த ஈஸ்டர் துயரம் இன்னும் மர்மமாகவே உள்ளது. தாக்குதல் குறித்த இந்தியாவின் எச்சரிக்கை மீது இலங்கை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர். மேலும் 2019ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி கோத்தபயவின் அலுவலக செய்திதொடர்பாளர் ஒரு பேட்டியில், கோத்தபய ராஜபக்சே உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஈஸ்டர் துயரத்தின் மூளையாக செயல்பட்ட ஷஹரான் ஹஸ்மிக்கு ஆதரவாக இருந்துள்ளதை ஒப்புக்கொண்டார். இந்த படுகொலைக்கு பின்னணியில் உள்ள அரசியல், தேர்தலுக்கு முன் மதப்பிரச்னைகளை வளர்த்தது.

போது பால சேனா(BBS)வினர் இஸ்லாமியர்களை குறி வைத்தனர். அதன் தலைவர் காலகோடா அத்தே ஞானசாரா கூறுகையில், தேர்தலின்போது புத்த துறவிகள் இலங்கையின் 7 ஆயிரம் கோயில்களில் ஒரு கோயிலுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து கொடுத்தால், அது சிங்கள அரசை அமைக்கும் என்று கூறினார். இன்று இலங்கை அரசில் 49 புத்த துறவிகளும், 2 தமிழ் இந்துக்களும் உள்ளனர். ஒரு இஸ்லாமியர் கூட கிடையாது.

ஈஸ்டர் துயரத்திற்கு இஸ்லாமியர்கள் பலிகடா ஆக்கப்பட்டதால், ராஜபக்சே சகோதரர்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்த தமிழ் இந்துக்கள் மீது குற்றம் சாட்டவில்லை. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளை மகிந்தா அழித்த பின் இலங்கையின் மக்கள் தொகையில் உள்ள 11 சதவீத தமிழ் இந்துக்கள் அவர் மீது கோபத்துடனே இருந்துவருகின்றனர். அதிகளவிலான தமிழ் இந்துக்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது இந்திய – இலங்கை உறவில் சிக்கலை ஏற்படுத்தக்கூடியது.

சீனா தொடர்பான விவகாரம் மேலும் மோசமான சிக்கல்கள் நிறைந்தது. ராஜபக்சே சகோதரர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவானவர்கள். இலங்கையில் சீனாவின் பெரிய முதலீடுகளுக்கு மகிந்த ராஜபக்சேவே காரணமாவார். ஹம்பதோட்டா துறைமுகம் மற்றும் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் சீனாவுக்கு 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்பட்டுள்ளது. இது டெல்லிக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் இந்த ஆழமான துறைமுகத்தை வர்த்தகப் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ள உபயோகிக்கலாம். இந்த ஒப்பந்தம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவால் கிடப்பில் போடப்பட்ட ஒன்று. ஆனால், தற்போது இத்திட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்ற நினைக்கிறது. இந்த இலங்கை- சீன உறவே 2015ம் ஆண்டு தேர்தலுக்கு முன் இந்தியா, ராஜபக்சேவை எதிர்த்தவர்களுக்கு உதவியதற்கான காரணம். 2015ம் ஆண்டு மகிந்தாவின் தோல்விக்கு, இந்தியாவின் உச்சகட்ட உளவு அமைப்பே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். 2019ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கோத்தபய ராஜபக்சேவை சீனா செல்வதை விட முதலில் இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார்.இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் 3 நாட்கள் கோத்தபய ராஜபக்சே டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழர்களை இலங்கை அரசு, மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். கொலும்பில், தமிழகத்தை சேர்ந்த தூதர் ஒருவரை இந்தியா நியமிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக இந்தியா முயற்சி எடுத்துவருகிறது. அதேநேரத்தில் நரேந்திரமோடியின் அரசு இந்தியப்பெருங்கடலில் பெய்ஜிங்கின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்த்து வருகிறது. இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் 2019ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். தீவிரவாத எதிர்ப்பில் தனது ஒற்றுமையை காட்டுவதற்காக இலங்கையில், தாக்குதல் நடந்த புனித அந்தோணியாரின் சிலையை பார்வையிட்டார்.

பிள்ளைகளைவிட கணவனே மன அழுத்தத்துக்கு காரணம் - ஆய்வில் பெண்கள் வெதும்பல்

கோத்தபய ராஜபக்சேவின் டெல்லி சுற்றுப்பயணத்தின்போது, அவரை சந்தித்த இந்திய பிரதமர், தீவரவாதத்தை எதிர்ப்பதற்கும், பாதுகாப்பிற்கும் 50 மில்லியன் டாலர் கடனும், இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு 400 மில்லியன் டாலரும் ஒதுக்கினார். ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டிய மோடி, தீவிரவாதத்தை எதிர்க்க ஒத்துழைப்பு வழங்கினால், தீவிரவாதத்தை எதிர்ப்பதற்காக ஒதுக்கப்படுத்தப்பட்டுள்ள நிதி, மேலும் அதிகரிக்கப்படும் என்று விளக்கிக் கூறவும் தவறவில்லை. பதிலுக்கு, சீனா மீதான இந்தியாவின் அச்சத்தை குறைக்கும் வகையில் கோத்தய ராஜபக்சே, இந்திய-இலங்கை உறவில் எந்த மூன்றாவது நாடும் பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மகிந்தாவின் சுற்றுப்பயணத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போதும் விவாதிக்கப்படும். இலங்கையின் உள்நாட்டு சூழல் தொடர்பான மற்ற பிரச்னைகளும் எழுப்பப்படும். 2019ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கையின் சிறுபான்மையினர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. எனினும் இலங்கையின் தமிழ் இந்துக்கள் மீண்டும் பாதுகாப்பின்றி உணர்கின்றனர்.

அவர்கள் ராஜபக்சே சகோதரர்களை சிறுபான்மையினருக்கு விரோதியாகேவே பார்க்கிறார்கள். இங்கிலாந்துகாரர்கள் வருகைக்கு முன் புத்த அரசர்களின் வரலாற்று தலைநகரான அனுராதபுரத்தில் புதிய அதிபர் உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது, சிறுபான்மையினர் அவருக்கு ஆதரவு அளிக்காதது குறித்து பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்தார். மேலும் ஞானசாரா, 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றிபெற்றால், அவரது எண்ணம் நிறைவேறியதாக கருதி, பிபிஎஸ் சங்கத்தை கலைத்துவிடுவேன் என்று அறிவித்தார். 2019ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டபின், பாஜகவின் பொதுச்செயலாளர் ராம் மாதவ், இலங்கை சிறுபான்மையினர்களை பாதுகாப்பதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதை அறிந்துகொள்ள அந்நாட்டின் தேர்தல் வரை காத்திருக்க முடியாது. துன்பப்படும் அண்டை நாட்டினருக்கு இந்தியா தஞ்சமளிக்கும். அது இந்தியாவின் பாரம்பரியம் என்று தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஜாப்ரல்லாட், ஆராய்ச்சியாளர், பேராசிரியர் உத்திரப்பிரதேசம்.

தமிழில் R. பிரியதர்சினி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment