Advertisment

கீழ்படியாத அரசியல்வாதிகளின் மனதில் கடவுள் பயத்தை விதைத்தவர்... சென்று வாருங்கள் சேஷன்!

சேஷன் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க இறைவனை வேண்டுகிறேன் - குரேஷி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirunellai Narayana Iyer Seshan put fear of God

Tirunellai Narayana Iyer Seshan put fear of God

 S Y Quraishi

Advertisment

Tirunellai Narayana Iyer Seshan put fear of God : முப்பது வருடங்களுக்கு முன்பு நம் ஜனநாயத்தில் உருவான எழுச்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததையே குறிக்கிறது டி.என்.சேஷன் அவர்களின் மறைவு. 90களின் முற்பாதியில் கீழ்படியாமல் இருக்கும் அரசியல்வாதிகளின் மனதில் பயத்தை விதைக்கவும், ஏனைய இந்தியர்களின் மனதில் மரியாதையை விதைக்கவும் சேஷன் அவர்களின் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது.  அவர் இந்திய தேர்தல் முறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களால் உருவான மகிமையை அவருக்கு பின்னால் வந்த தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பெற்றிருக்கின்றோம் என்பதை கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனாலும் அவருடன் நாங்கள் எப்போதும் ஒப்பிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

Tirunellai Narayana Iyer Seshan

அவருக்கு கீழ் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாலு பிரசாத் யாதவின் தொகுதியான தனப்பூருக்கு அனுப்பப்பட்டேன். பின்பு ஒரு முறை ஜெயலலிதா வாழ்ந்து வந்த பகுதியான மயிலாப்பூருக்கு நான் அனுப்பப்பட்டேன். சேஷன் இவர்கள் இருவரிடமும் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருந்தார். அதனால் தான் அங்கு நான் பார்க்க வேண்டிய வேலை இரட்டைப்பளுவாக மாறியது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

1996ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது சேஷன் என்னிடம் “எதற்கும் பயப்படாதே. ஒன்றும் நடக்காது. உன் முகத்தில் யாரேனும் குண்டு வீசப்படலாம். உன் வயிற்றில் துப்பாக்கி குண்டு துளைக்கலாம்” என்று கூறினார். சில மீட்டர்கள் தொலைவில் இரண்டு முறை குண்டு வெடித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக என் வயிற்றில் குண்டு துளைக்கமால் உயிருடன் வீடு திரும்பினேன்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் மாவோய்ஸ்ட் பகுதியில் ஒரு முறை நான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். பழங்குடிகள் வாழும் பகுதியை அடைவதற்கு சரியான சாலைகள் இல்லை என்று நான் புகார் அளித்ததோடு, என்னை நகர்புறங்களில் இருக்கும் தொகுதிகளில் பணிக்கு அமர்த்த வேண்டும் என தைரியம் அனைத்தையும் வளர்த்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் மொத்தமாகவே தேர்தல் பணியில் இருந்து எனக்கு அப்போது விலக்களிக்கப்பட்டது.

நான் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது சேஷனை சந்தித்து வாழ்த்துகளை பெற சென்னை சென்றேன். அப்போது அவருடைய மனைவி எனக்கு சந்தனத்தால் ஆன விநாயகர் சிலை ஒன்றை பரிசாக அளித்தார்.

மேலும் படிக்க : குடியரசுத் தலைவர் தேர்தலிலும் களம் கண்ட டி.என்.சேஷன்!

சில மாதங்களுக்கு முன்பு தான் தி கிரேட் மார்ச் ஆஃப் டெமாக்ரசி : செவன் டிகேட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எலெக்சன்ஸ் (The Great March of Democracy: Seven Decades of India’s Elections) என்ற புத்தகத்தை நான் வெளியிட்டேன். அந்த புத்தகத்தில் இந்திய தேர்தல் ஆணையராக செயல்பட்ட போது சேஷன் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை எழுதியிருந்தார். அதே போன்று ஃப்ரெஞ்ச் பேராசிரியர் க்ரிஸ்கோப் ஜெஃப்ரெலோட், டி.என்.சேஷன் குறித்து எழுதியிருந்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் ஆணையர் சுகுமார் சென் மற்றும் டி.என். சேஷன் ஆகியோருக்கு இந்த புத்தகத்தை நான் அர்பணித்ததை மகிழ்ச்சியாக கருதுகின்றேன். சேஷன் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க இறைவனை வேண்டுகிறேன்.

(இந்த கட்டுரையை எழுதிய குரேஷி இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)
Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment