Russian military build-up in Ukraine : உக்ரைன் அருகே ரஷ்ய ராணுவம் அதன் மிகப்பெரிய சமீபத்திய படைதிரட்டலில் ஈடுபட்டது என்பது அதிகமாக கவனம் பெறவில்லை. இதர வேறு பல விஷயங்களை எதிர்கொள்ளும் இந்தியாவுக்கு இது ஆச்சர்யமாகப் படவில்லை. ஆனால், இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஐரோப்பாவாக இல்லாததால் ஐரோப்பாவுக்கு என்ன நடந்தது. 2014ம் ஆண்டு ரஷ்யாவின் இணைப்பான கிரிமியா, இந்தியாவுக்கு பிரச்னைகளை உருவாக்கியது. மாஸ்கோ உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்தியாவின் நோக்கங்களுக்கு முக்கியமான சிக்கலை ஏற்படுத்தும் அதே போல ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைனுக்கும் கூடசிக்கல் ஏற்படும்.
ஒன்று, சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகளை மேலும் ஆழமாக்குவதைத் தடுப்பதில் டெல்லியின் ஆர்வத்திற்கு அது தடையாக இருக்கும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சாத்தியமான ராணுவ நடவடிக்கைகள், மேற்கத்திய நாடுகளின் பின்னடவு சூழலில் மாஸ்கோவுக்கு பெய்ஜிங்கின் ஆதரவு மேலும் அதிகம் தேவைப்படலாம். சமார்த்தியமான சவாலுக்கு அப்பால், சீனா-ரஷ்யா இடையேயான நெருக்கமான உறவு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இந்தியா ரஷ்யாவின் ராணுவ தளவாட விநியோகத்தை சார்ந்திருக்கும் இந்த தருணத்தில் ரஷ்யா, சீனாவுடன் மேலும் அதிக கடமையாற்றுவது குறிப்பாக பிரச்னைக்குரியதாகலாம். சீனா-இந்தியா இடையே மீண்டும் எல்லை பிரச்னை வெடிக்கலாம்.சில நடவடிக்கைகள் எடுக்கும்படி(உதாரணத்துக்கு இந்தியாவுக்கு ஆயுதங்கள் தரக்கூடாது என்று தடுக்கலாம்) ரஷ்யாவிடம் சீனா கேட்க க்கூடும். உக்ரைனுடனான சிக்கல் தீவிரம் அடையும்போது, சீனா தேவைப்படும் சூழலில் ரஷ்யா என்ன செய்யும்?1962ம் ஆண்டு நிகழ்வை மனதில் கொள்ள வேண்டியது சிறப்பாக இருக்கும். கியூபா ஏவுகனை நெருக்கடியின் போது பெய்ஜிங்க் ஆதரவு மாஸ்கோவுக்கு தேவைப்பட்டது. இதன் பலனாக சோவியத் தனது கூட்டாளியான சீனாவுக்கு ஆதரவு கொடுத்தது. இந்தியா தனது நட்பு நாடு என்ற போதிலும், போரின் முக்கியமான தருணத்தில் ரஷ்யா சீனாவை ஆதரித்தது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையானது, சீனா-ரஷ்யா கூட்டணியை தடுக்கும் டெல்லியில் பரிந்துரை அணுகுமுறையை தடுக்கும் அல்லது இருதரப்புக்கும் இடையே உரசலை ஏற்படுத்தும்-மேற்கத்திய நாடுகளில் அது குறிப்பாக அமெரிக்கா-ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்தும். இதன் விளைவாக, ஜோ-பைடன்-புதின் இடையேயான சந்திப்பை இந்தியா வரவேற்றது. இந்தியாவின் இரண்டு முக்கிய பங்குதாரர்களிடையே கருத்துவேறுபாடு இல்லாத போது இதுவும் உதவக்கூடும். ஆனால், ரஷ்யாவின் இன்னொரு உக்ரைன் ஆக்கிரமிப்பானது, மேற்கு மற்றும் ரஷ்யா இடையேயான அருகாமையில் இருக்கும் நல்லிணத்துக்கான வாய்ப்பை சீரழிக்கும். ஜோ-பைடனின் வெளிப்பாட்டை சுரண்டுவதற்கான பலவீனமாகத்தான் புதின் பார்ப்பதாக சில விமர்சகர்கள் வாதிடுகின்றனர். ஜெர்மன், பிரான்ஸ் முயற்சிகளும் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கின்றன. சீனா-ரஷ்யா ராணுவ பயிற்சிகள், சர்ச்சைக்குரிய குரில் தீவுகளில் ஜப்பானின் முயற்சிகளை ஏற்கனவே ரஷ்ய ராணுவம் தடுத்திருக்கிறது.
மேலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையானது, தனது கூட்டாளி நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுடன் நடுநிலைத்தன்மையை பேணுவதில் இந்தியாவின் முயற்சிக்கு சிக்கல் ஏற்படக்கூடும். கிரிமியாவுடனான ரஷ்யாவின் இணைப்புக்குப் பின்னர், இந்தியா தனது நிலை குறித்து தெரிவித்திருக்கலாம். ஆனால், ரஷ்யாவின் நடவடிக்கையை இந்தியா வெளிப்படையாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. ஆனால், இந்தியாவின் மவுனமும் ஒரு வலியுறுத்தலாகவே பார்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, டெல்லியிடம் இருந்து மாஸ்கோ ஆதரவை கோரியிருந்தால், கிரிமியா விவகாரத்தைப் போல இந்தியாவின் மவுனத்தை தனக்கான ஆதரவாக எடுத்துக் கொண்டிருக்கலாம். சமீபத்தில் அது ஒருதலைப்பட்சமாக ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான சிக்கல் மோசம் அடைந்தபோது, ரஷ்யா உடனான முரண்பாடுகள்தான் இந்தியா-அமெரிக்கா, இந்தியா-ஐரோப்பா ஆகிய உறவுகளை முன்னணிக்கு கொண்டு வந்தன. மேற்கு இந்திய நாடுகளின், மேலதிக பொருளாதாரத் தடை தொடர்புடைய பதிலடிகளானது, ரஷ்யா உடனான இந்தியாவின் வணிக திறன் மற்றும் பன்முக உறவுகளை மேலும் தடுக்கும். "அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்க்கும்(CAATSA) சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வாஷிங்க்டன் சலுகை அளிக்கக் கூடும் என்று தகவல் வெளியான சமயத்தில்தான் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. சலுகையை ஆதரிக்கும் செனட்டர்களான டெட் குரூஸ் மற்றும் மார்க் வார்னர் போன்றவர்கள், மாஸ்கோவுக்கு இந்தியா ஆதரவு அளிக்கப்போகிறதோ சந்தேகக் கண் கொண்டு இதனை பார்க்க முடியும்.
டெல்லி, வாஷிங்க்டன் இரண்டு தரப்புமே இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் இதர சிலரும் இருக்கின்றனர். முந்தைய நிர்வாகங்களின்போது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சிக்கல்கள் எழுந்தபோது, இந்தோ-பசிப்பிக் பகுதியில் இருந்து, ஐரோப்பியாவின் பேரழிவு சூழலில் அமெரிக்கா கவனம் செலுத்தியிருக்கக்கூடும். சீனாவின் சவால்கள் குறித்து வாஷிங்க்டன் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா விரும்பிய தருணத்தில்தான் அது ஏற்கனவே அமெரிக்காவின் கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தது.
இந்தியாவில் ரஷ்யாவைப் பற்றி பேசிய ஜெர்மனி கப்பற்படை தளபதி; வீட்டுக்கு அனுப்பிய அந்நாட்டு அரசு
ரஷ்யா-உக்ரையின் சிக்கலானது, ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் ஆழ்ந்த பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவில் எதிரான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அருகாமை நாட்டுடனான நெக்கடி, குறிப்பாக இந்தியாவுக்கு பிந்தைய காலத்தில் ஆசியா உடனான அதிகரிக்கும் கவனப்படுத்தலை குறைக்கும். மேலும், ரஷ்யாவின் சாவல்களில் கவனம் செலுத்தும் முறையில் ஐரோப்பிய நாடுகள், அதன் உறுதியான செயல்பாட்டுக்கு எதிராக சீனா உடனான உறவை வலுப்படுத்தும். ஒத்த கருத்துள்ள நாடுகள் மத்தியில் சீன விவகாரத்தில் நடுநிலைத் தன்மை வேண்டும் என்று கோரும் டெல்லியின் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மேலும், இந்தியாவுக்கு எதிராக அல்லது வேறு எங்கேனும் மேலும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கவன சிதறலை சீனா தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமா இல்லையா என்று தெரியவில்லை. ரஷ்யா-உக்ரைன் சிக்கல் மீதான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் ஆசியாவில் வேறு எந்த நாடுகளை விடவும் சீனா பலன் பெறக் கூடும். இதன் வாயிலாக மேற்கு நாடுகளுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே உபயோகமான மத்தியஸ்தராவதற்கான சாத்தியமுள்ள இருப்பையோ அல்லது ஐரோப்பாவை நோக்கிய ஆசியாவை வலுப்படுத்த தேவையிருக்கிறது என மேற்கு நாடு ஒன்றிடம் அடைக்கலம் கோருவதையோ அல்லது அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிளவுகளை ஆழப்படுத்துவதற்கான முயற்சியையும் சீனா தன்னகத்தே கொண்டிருக்கும்.
ரஷ்யா-உக்ரைன் சிக்கலின் இதர பிரச்னைக்குரிய அம்சங்களும் டெல்லிக்கு இருக்கின்றன. உக்ரைனில் 7500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அதே போல உக்ரைனுடன் பொருளாதார, பாதுகாப்பு வர்த்தக உடன்படிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. முன்னுதாரமாண, கொள்கை தொடர்பான கவலைகளும் அங்கே உள்ளன. அதிகாரம் பெரும்பாலும் அவைகளைத் தாக்கும் என்று டெல்லியில் பலர் வாதிடுகின்றனர். இருந்தாலும் கூட, இந்தியாவுக்கு எதிராக பெய்ஜிங் செயல்பட்டது போல உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மாஸ்கோ நியாயப்படுத்தும். வரலாற்று தொடர்புகள், இன தொடர்புகள் மற்றும் இந்தியாவின் முயற்சிகள் சீனாவை அச்சுறுத்துவதாக இருக்கின்றன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையானது, டெல்லி தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக போகக் கூடும்.
மேலே கூறிய அனைத்து காரணங்கள் காரணமாக, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றும் தூரதரக ரீதியிலான தீர்வு மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. தனது இந்த கவலைகள் குறித்து ரஷ்யாவிடம் தனிப்பட்ட முறையில் இந்தியா வெளிப்படுத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் அப்படி ஒருசூழலை கருத்தில் கொண்டு, ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் நலன்களில் சாத்தியமான வீழ்ச்சி ஏற்படுவதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
இந்த பத்தி முதலில் கடந்த 21ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘At stake in Ukraine’என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் வாஷிங்டன் டிசியில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் இந்தியா திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.
தமிழில் ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.