காற்றோட்டமான அறையில் 15 நிமிடம் இந்த பயிற்சி... 4 மணி நேரம் தூங்கி எழுந்த உற்சாகம் கிடைக்கும்: மருத்துவர் சிவராமன்
போதுமான தூக்கம் வராதது நீங்கள் சோர்வாக இருக்க ஒரு காரணம் ஆகும். ஊட்டச்சத்து குறைபாடுகள், மன அழுத்தம், போன்ற பிற காரணங்களும் உண்டு என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
போதுமான தூக்கம் வராதது நீங்கள் சோர்வாக இருக்க ஒரு காரணம் ஆகும். ஊட்டச்சத்து குறைபாடுகள், மன அழுத்தம், போன்ற பிற காரணங்களும் உண்டு என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கத்தைப் பெறுவது அவசியம். நம்மில் பலருக்கு போதுமான தூக்கம் இல்லை, இது சோர்வுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். மேலும் இதற்கான காரணம் மற்றும் சோர்வை தவிர்க்க அவர் முக்கிய வழிகளையும் கூறுகிறார்.
Advertisment
தூக்கத்தின் போது, உங்கள் உடல் பல முக்கியமான செயல்முறைகளைச் செய்கிறது. இதில் முக்கியமான வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுதல் மற்றும் மீண்டும் உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இதனால்தான் பெரும்பாலான மக்கள் நல்ல தூக்கத்திற்கு பிறகு புத்துணர்ச்சியை உணர்கிறார்கள்.
இரத்த சோகை என்பது பெண்களில் சோர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மாதவிடாய் இரத்த இழப்பு இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி, பெண்களுக்கு சோர்வை உண்டாக்கும். அடுத்து தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் சோர்வாக உணர்வார்கள்.
மூன்றாவதாக நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள். இவர்கள் எப்போதும் சோர்வாகவே உணர்வார்கள். அதற்கு முதலில் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும். அதற்கு அதிகமாக நீர் குடிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
ஏராளமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். அதேபோல காலை உணவில் 45% பழங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அடுத்ததாக தினசரி காலை 45 நிமிடம் 3 கிலோ மீட்டர் தூரம் கைகளை வீசி நல்ல நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எப்போது சோர்வாக உணர்ந்தாலும் காற்றோட்டமான அறைக்கு சென்று நல்ல மூச்சுப்பயிற்சி எடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.