மழைக்காலங்களில் ஏற்படும் பருவ நிலை மாற்றும் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அவற்றை தடுப்பதற்கு சில உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். அந்த வகையில் மழைக்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளை இப்பதிவில் பார்க்கலாம்.
நட்ஸ் வகைகள் எல்லா காலத்துக்கும் ஏற்ற வகையிலான உணவுகள் தான். நட்ஸ்களில் அதிக அளவு புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவற்றை தினசரி சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தரும்.
இயற்கையாகவே உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளும்போது சளி, காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதோடு ரத்தம் உறைதலைத் தடுத்து மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும். அதனால் மழைக்காலம் மட்டுமல்லாமல் அனைத்து நேரங்களிலும் தினசரி உணவில் பூண்டை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சளில் அதிக அளவில் ஆன்டி செப்டிக், ஆன்டி வைரல், ஆன்டி ஃபங்கல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்திருக்கின்றன. இவை நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவி செய்வதோடு நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவி செய்யும்.
மழைக்காலத்தில் அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்காது. அதோடு நிறைய தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தவிர்த்து விடுவோம். ஆனால் இயல்பாகவே மழைக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும். அதனால் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்.
மழைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் நாவல் பழம், மாதுளை, செர்ரி வகைகள், பிளம்ஸ், பேரிக்காய், பப்பாளி, ஆப்பிள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இது நோயெதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்தும்.
வெயில் காலத்தைப் போலவே மழைக்காலத்திலும் நிறைய நீர்க்காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், முள்ளங்கி, தக்காளி, வெள்ளரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த காய்கறிகள் செரிமான ஆற்றலை இலகுவாக்கி, குடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நோயெதிப்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“