ஆபத்தான நோய்களில் ஒன்று கேன்சர் என்கிற புற்றுநோய், இந்த கேன்சர் வராமல் தடுக்க மாதத்தில் ஒருமுறை உண்ணாவிரதம் இருங்கள் என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.
மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். கேன்சர் என்கிற இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க நவீன மருத்துவம் முன்னேறி வருகிறது. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலர் உள்ளனர். அண்மையில், புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ரஷ்யாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த தடுப்பூசி பரவலாகவில்லை.
அதே நேரத்தில், இந்த கொடிய கேன்சர் வராமல் இருக்க மாதத்தில் ஒருமுறை உண்ணாவிரதம் இருங்கள் என்று டாக்டர் யோக வித்யா ஆலோசனை கூறியுள்ளார்.
கேன்சர் பற்றி யோக வித்யா கூறுகையில், “நீங்கள் ரத்த பரிசோதனை பார்த்தீர்கள் என்றால் எல்லாருக்குமே கேன்சர் செல்கள் இருக்கும். மினிமல் வேல்யூ என்று போட்டு இருக்கும். அதற்கு மேல போகும்போதுதான், கேன்சர் இருப்பதைக் காட்டுகிறது. கேன்சர் என்பது செல்ஸ் டேமேஜ் ஆன ஒரு விஷயம். மன அழுத்தம் ஆகும்போது, கலர் பவுடர்ஸ், நிறைய கெமிக்கல் சாப்பிடும்போது, செல்கள் பலவீனமாக இருக்கும்போது, செல்கட்டமைப்பு சரியாக இல்லை என்றால் செல்கள் பாதிப்படைகின்றன. பாதிப்படைந்த செல்கள் உடலில் அதிகமாக இருக்கும்போது, கேன்சர் வருகிறது. ஆனால், இது குறைந்தபட்சமாக எல்லாருக்குமே இருக்கிறது.
இந்த செல்கள் பாதிப்பை அதிகம் ஆகாமல் எப்படி குறைக்கலாம் என்பதைப் பார்த்தால், உண்ணாவிரதம் என்கிற Intermittent Fasting ரொம்ப உதவியாக இருக்கும்.” என்று கூறுகிறார்.
மேலும், “சாப்பிடக் கூடிய உணவை வைத்துதான், கேன்சர் செல்களே வாழ்கிறது. அதனால், மாதம் ஒரு தடவையாவது 16 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது, கேன்சர் செல்களுக்கு நாம் உணவு கொடுக்காத நேரத்தில் அவை எல்லாம் அழிந்து கழிவுகளாக வெளியே வந்துவிடுகின்றன. அதனால், மலக்கட்டு நீண்ட நாட்கள் இருப்பவர்களுக்கு கேன்சர் வருகிறது என்பதால் ஒருமுறை மலசுத்தி என்கிற பேதிக்கு எடுத்துக் கொள்வது நல்லது” என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.