ரத்தத்தில் ஹீமோகுளோபின் சரியாக இருந்தால் பல நோய்களின் பாதிப்பை தடுக்க முடிக்க முடியும். எனவே ஒவ்வொரு நபரும் தனக்கான இரும்புச் சத்து அளவை தெரிந்துக் கொள்ள வேண்டும். இரத்தசோகை குறித்தும், அதனை சரிசெய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்தது இங்கே.
இந்தியாவில், குறிப்பாக பெண்களில் 55% பேர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் இரத்த இழப்பு ஏற்படுவதால், இரத்தசோகை ஏற்படும்.
இரத்தத்தில் இரும்புச்சத்து ஆண்களுக்கு 13-14 அலகுகளிலும், பெண்களுக்கு 12-13 அலகுகளிலும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் கீரைகளில் இரும்புச்சத்து அதிகம். சிறுவயது முதலே கீரை சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, அகத்திக்கீரை என அனைத்து கீரைகளையும் தினமும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.
பழங்களில், மாதுளை, அத்தி, காய்ந்த திராட்சை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம். இவற்றை தினசரி எடுத்துக் கொள்ளும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள எளிய பொருள் எள். எள்ளை துவையலாக, பொடியாக செய்து சாப்பிடலாம்.
இரும்புச்சத்து அதிகம் தரும் தானியங்களுள் ஒன்று கம்பு. நாம் தினமும் சாப்பிடும் வெள்ளை அரிசி சோறை விட கம்பஞ்சோறு 8 மடங்கு இரும்புச்சத்தைக் கொண்டுள்ளது. ரத்தசோகை உள்ளவர்கள் வாரத்திற்கு 2-3 நாட்கள் கம்பு அரிசி சோறு சாப்பிடுவது சிறந்தது.
கோழியின் கல்லீரல், மண்ணீரல் இரும்புச்சத்தை கிரகிக்கும் தன்மைக் கொண்டது. எனவே ரத்தசோகை உள்ளவர்கள் இவற்றை சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.