Rahul Gandhi Statement on Asha, Anganwadi Workers and called them true patriots
Rahul Gandhi Statement on Asha, Anganwadi Workers and called them true patriots : கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பம் முதலே எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியவர் காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி தான். கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இன்னும் நான்கு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. வைரஸின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. ஊரடங்கு நிலையிலும் 199 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து கடந்துள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் இந்த நாட்டிற்காக போராடும் உண்மையான தேச பக்தர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பேறுகால உதவியாளர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Advertisment
Advertisements
இந்தியா முழுவதும் ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து, கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் தொடர்ந்து தங்களை அர்பணித்துக் கொண்டுள்ளனர். நாட்டின் தேவை உணர்ந்து அதற்காக சேவை செய்வதே உண்மையான தேசப்பற்று. ஊடக வெளிச்சத்திற்கு வராமல் உண்மையாக உழைக்கும் அவர்களே உண்மையான ஹீரோக்கள். அவர்கள் நம்மையும், நம் குடும்பங்களையும் இந்த இக்கட்டான சூழலில் பாதுகாக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Rahul Gandhi Statement on Asha, Anganwadi Workers and called them true patriots
போலி தகவல்கள் மற்றும் செய்திகள் வைரஸை விட வேகமாக பரவும் சூழலில் இந்த பணியாளர்கள், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் மிக முக்கியமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் நன்றிகடன்பட்டுள்ளோம். இந்த பிரச்சனை முடிவுற்றதும் அவர்களின் முன்மாதிரியான சேவை, அவர்களின் பணிச்சூழலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
இந்த நாட்டிற்காக பணியாற்றும் ஒவ்வொரு சமூகப் பணியாளரையும் நான் வணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினர் இந்த நோயில் சிக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்’’ என்று அந்த அறிக்கையில் அறிவித்திருக்கிறார்.