Deutsche Welle
25 years of Dolly : டோலியின் இருப்பினால் எங்களுக்கு கிடைத்த இரண்டு முக்கியமான விசயங்களில் ஒன்று அந்த ஆடு வளர்ந்த ஆய்வகம். இங்கிலாந்தின் ரோஸ்லின் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆய்வகம் அது. ஆரம்பத்தில் அரசு எங்களுக்கு நிதி உதவி அளிக்க மறுத்தது. டோலிக்காக நாங்கள் அறிவுசார் சொத்துகளை விற்றோம். பிறகு வேறொரு பண ஆதாரம் கிடைக்கும் வரையில் அது எங்களை காப்பாற்றியது என்று கூறுகிறார் ஆலன் ஆர்ச்சிபல்ட்
டோலி எப்படி க்ளோனிங் செய்யப்பட்டது?
மற்றொரு ஆட்டின் பால் சுரப்பியில் இருந்து பெறப்பட்ட செல்லை வைத்து டோலி க்ளோனிங் செய்யப்பட்டது. 1996ம் ஆண்டு ஜூலை மாதம் வெள்ளை முகத்துடன் பிறந்து டோலி. க்ளோனிங் முறையில் தான் இது பிறந்தது என்பதற்கு அடையாளமாக அந்த வெள்ளை முகம் இருந்தது. வாடகை தாய் முகத்துடன் பிறந்திருக்க வேண்டும் எனில் அது கருப்பு நிறத்தில் தான் பிறந்திருக்க வேண்டும்.
மிகப்பெரிய மார்பகங்களைக் கொண்ட டோலி பார்டோன் என்ற அமெரிக்க பாடகியின் பெயரையே இதற்கு சூட்டினர். மொத்தம் 277 குளோன் செய்யப்பட்ட கருக்களில் டோலி மட்டுமே உயிர் பிழைத்த செம்மறி ஆடு. 6 வயது வரை வாழ்ந்த ஆடு 6 குட்டிகளை ஈன்றது. பிறகு நுரையீரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அந்த செம்மறி ஆடு இறந்து போனது.
மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
ஷின்யா யமானாகா என்ற ஜப்பான் ஆராய்ச்சியாளர் தலைமையில் அமைந்த குழுவிற்கு ஐ.பி.எஸ். செல்களை கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. டோலியின் ஆராய்ச்சி மூலமாகவே இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது. டோலியின் க்ளோனிங் மூலமாகவே ஸ்டெம் செல் ஆராய்ச்சி தீவிரமானது. ஐபிஎஸ் செல்கள் மனித நோயை மாதிரியாக்க ஒரு வழியை உருவாக்கியது. முன்கூட்டிய முதுமை, புற்றுநோய் மற்றும் இதய நோய் பற்றிய ஆராய்ச்சியில் இந்த செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜனவரி மாதம் வெற்றி கரமாக முடிந்த பன்றி - மனித - இருதய மாற்று அறுவை சிகிச்சை டோலியின் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு தான் சாத்தியமானது என்று கூறுகிறார் ஆர்ச்சிபால்ட்.
மனிதனில் க்ளோனிங் ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் டோலியின் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது. வெற்றி கரமாக மனிதனின் கருவை 2013ம் ஆண்டு க்ளோனிங் செய்தனர் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட 150 குளோன் செய்யப்பட்ட கருக்களில், ஜோங்க் ஜோங்க் மற்றும் ஹூவா ஹூவா குரங்களின் வாடகைத் தாய்களால் மட்டுமே உயிருடன் குட்டிகளை ஈன முடிந்தது.
ஒன்றாக இணைந்த 3 “கேலக்ஸிகள்”: சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஹப்பிள்
அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை குளோனிங் செய்வதிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. black footed ferret என்ற உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக 2021ம் ஆண்டு க்ளோனிங் செய்தனர். அழிந்து போன வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள், மம்மூத் வகை யானைகள் மற்றும் பெரிய பாண்டாக்களை மீட்டெடுக்கும் ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil