scorecardresearch

பிரிண்டட் சோலார் பேனலுடன் 15,000 கி.மீ. எலெக்ட்ரிக் காரில் பயணித்த விஞ்ஞானிகள்

ஒவ்வொரு பேனலும் 18 மீட்டர் இருக்கும். எப்போது காருக்கு சார்ஜ் தேவைப்படுகிறதோ அப்போது சுருட்டி வைக்கப்பட்டுள்ள சோலார் பேனலை எடுத்து ஏற்கனவே சூரியனிலிருந்து பெறப்பட்ட ஆற்றலை பயன்படுத்தி காருக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிரிண்டட் சோலார் பேனலுடன் 15,000 கி.மீ. எலெக்ட்ரிக் காரில் பயணித்த விஞ்ஞானிகள்

டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் பிரிண்டட் சோலார் பேனல் உடன் 15,000 கி.மீ. தூரம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பயணித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.

19 பிளாஸ்டிக் சோலார் பேனல்கள் டெஸ்லா எலெக்ட்ரிக் காருடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு பேனலும் 18 மீட்டர் இருக்கும். எப்போது காருக்கு சார்ஜ் தேவைப்படுகிறதோ அப்போது சுருட்டி வைக்கப்பட்டுள்ள சோலார் பேனலை எடுத்து ஏற்கனவே சூரியனிலிருந்து பெறப்பட்ட ஆற்றலை பயன்படுத்தி காருக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த பிரிண்டட் சோலார் பேனலை உருவாக்கிய பால் தஸ்தூர், “காருக்கு மட்டுமல்லாமல் வேறு எந்த வகையில் இது பயன்படும் என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது ஆஸ்திரேலியர்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி சிந்திக்க வைக்கும்” என்றார்.

பட்ஜெட் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரெட்மி 10A இவ்வளவு தான் விலை!

அச்சிடப்பட்ட சோலார் என்பது இலகுரக, லேமினேட் செய்யப்பட்ட PET பிளாஸ்டிக் ஆகும். இது ஒரு சதுர மீட்டருக்கு $10க்கும் குறைவான செலவில் செய்ய முடியும். ஒயின் லேபிள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் வணிக அச்சுப்பொறியில் பேனல்கள் செய்யப்படுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Australian scientists to power tesla on fivteen thousand km trip with printed solar panels

Best of Express