இந்த வாரம் ஸ்கைவாட்சர்ஸுக்கு கொண்டாட்டமான வாரமாக இருக்கப் போகிறது. வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து உள்ளதாக அறிவியல் தகவல்களை வெளியிடும் லைவ் சயின்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை வரையில் இக்காட்சியை காண முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வரை இதைக் காண முடியும்.
இதில் நிலாவும் இணையப் போவதாக தெரிகிறது. நாளை முதல் இந்த அரிய காட்சியை நாம் காண முடியும்.
இதை வெறும் கண்களாலும் கண்டு ரசிக்கலாம் எனஅறு பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கிரகங்கள் சமமான தொலைவில் இருக்கும். ஒன்றுக்கொன்று ஆறு முதல் ஏழு டிகிரி தொலைவில் இருக்கும். செவ்வாய் மங்கலாக இருக்கும். ஆனால் மற்றவை பிரகாசமாக இருக்கும்.
கிரகங்கள் மின்னும் நட்சத்திரங்களைப் போலல்லாமல் பிரகாசிக்கும். அப்படித்தான் நாம் அவைகளை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.
மேலும், இந்த விண்மீன் கூட்டத்தில் நட்சத்திரங்கள் இல்லை. எனவே கிரகங்களைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.
பட்ஜெட் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரெட்மி 10A இவ்வளவு தான் விலை!
ஆனால் புதன் பொதுவாக சிறியது மற்றும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் கண்டறிவது மிகவும் கடினம் என்று அவர் கூறினார்.
முன்னதாக, "ஏப்ரல் தொடக்கத்தில், சூரிய உதயத்திற்கு முன் தென்கிழக்கில் வெள்ளி, செவ்வாய் மற்றும் சனி மூன்றும் உருவாகின்றன, சனி ஒவ்வொரு நாளும் செவ்வாய் கிரகத்தை நோக்கி சீராக நகர்கிறது. மாதத்தின் நடுப்பகுதியில், வியாழன் அதிகாலையில் உயரத் தொடங்குகிறது. இது நான்கு கிரகங்களை உருவாக்குகிறதுய. இது காலை நேரத்தில் வானில் ஒரு வரிசையில் காண முடியும்" என்று நாசாவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil