Many bird species nest and lay eggs nearly a month early: வசந்த காலம் என்பது எப்போதும் பறவைகளின் ரீங்கார நாதத்தின் காலம். நீண்ட பகல் பொழுதுகள், கொஞ்சும் பறவைகளின் மொழி மற்றும் இடைவிடாது ஹம்ம்மென்று இசைக்கும் தேனீக்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டது? காடுகளை தொலைத்து நாம் தற்போது இயற்கையுடனான பிணைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவிட்டோம்.
கால நிலை மாற்றத்தின் கொடூர பிடியில் சிக்கித் தவிக்கும் நமக்கு ஆராய்ச்சியாளார்கள் மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கின்றனர். அமெரிக்க அறிஞர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில் “பறவைகள் அனைத்தும் இயல்புக்கு மாறாக, ஒரு மாதத்திற்கு முன்பே தங்களின் கூடுகளை கட்டி, முட்டையிடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அழிவின் விளிம்பில் இருக்கும் கானமயில், இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறதா? ஒரு விரிவான அலசல்
ஏன் இயற்கைக்கு மாறானது என்று கேட்கின்றீர்களா? இதோ உங்களுக்கான விளக்கம், சிக்காகோ நகரில் கடந்த 100 ஆண்டுகளாக பறவைகளின் போக்கு குறித்து ஆய்வு செய்து தரவுகளை சேமித்து வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள். கிட்டத்தட்ட 72 விதமான பறவைகள் குறித்து 100 ஆண்டு தரவுகள் தற்போது நமக்கு கிடைக்கும். அவற்றில் மூன்று பங்கு பறவைகள் இயல்புக்கு மாறாக 25 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தங்களின் முட்டைகளையிட்டு குஞ்சு பொரிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
1880 முதல் 1920ம் ஆண்டுகள் வரை சேமிக்கப்பட்ட தரவுகளை தற்போது பயன்படுத்தி அதனை ஒப்பீடு செய்த போது இத்தகைய அதிர்ச்சியான முடிவு நமக்கு கிடைத்துள்ளது. ஆய்வின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஜார்னல் ஆஃப் அனிமல் எக்காலஜி என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.
தமக்கு தேவையான உணவின் இருப்பு, பூக்கள் பூக்கும் தருணம், அதில் மொய்க்கும் ஊர்வன ஆகியவற்றின் அடிப்படையில் தான் பறவைகள் கூடுகட்ட துவங்குகின்றன. அமெரிக்காவில் செர்ரி, பேரிக்காய், ஆப்பிள், ப்ளம் மரங்கள் இயல்பைக் காட்டிலும் சில வாரங்களுக்கு முன்பே பூக்க துவங்கியிருந்தன. அதே சமயத்தில் இங்கிலாந்திலில் 1987 முதல் 2019 ஆண்டு வரையில் பூக்கள் இயல்பைக் காட்டிலும் ஒரு மாதத்திற்கு முன்பே பூக்கத் துவங்கியதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
கணிதவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படும் ஏபெல் பரிசு; 2022ம் ஆண்டுக்கான “வின்னர்” யார் தெரியுமா?
இது குறித்து ஃப்லீட் அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஜான் பேட்ஸ் என்ற பறவை ஆராய்ச்சியாளர், “வசந்த காலத்தின் துவக்கத்திலேயே ஒரு பறவை கூடு கட்டுகிறது என்றால் அது சிக்கலையே உருவாக்கும். ஏன் என்றால் வசந்த காலத்தின் துவக்கத்திலும் குளிர்க் காற்றின் அலைகள் வீச துவங்கும். அப்படி வீசும் போது பூக்கும் பூக்களின் நிலைமை மற்றும் அதனைச் சார்ந்திருக்கும் பூச்சியினங்கள் நிலைமை மோசமடையும் . போதுமான உணவு இல்லாத காலத்தில் நடைபெறும் இனச்சேர்க்கையும், புதிய உயிரினங்களின் வரவும் அதிக அளவில் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று தி கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.