Discarded rocket part to hit Moon : இன்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிகம் கவலை அடையும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது விண்ணில் மிதக்கும் ராக்கெட் மற்றும் செயலிழந்த செயற்கைக் கோள்கள். செயல் இழக்கும் செயற்கைக் கோள்கள் தங்களின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி விண்கற்களில் மோதும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றது. ஆராய்ச்சியாளர்கள், விண்ணில் இருக்கும் இந்த குப்பைகளை அகற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வறண்ட பிரதேசத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்; ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஃபைன்போஸ் காடுகள்
இந்நிலையில் இன்று பகல் 12.25 மணி அளவில் 3 டன் எடை கொண்ட, மணிக்கு 5800 மைல்கள் பயணிக்கும் ராக்கெட்டின் உடைந்த பாகம் ஒன்று நிலவில் மோத உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த மோதலால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படாது என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
2015ம் ஆண்டே விண்ணில் இப்படி ஒரு பொருள் மிதக்கிறது என்று அரிஜோனா பகுதியில் உள்ள நாசாவின் ஆராய்ச்சி மையம் ஒன்று கண்டுபிடித்தது. ஆனாலும் அது எரிகல் இல்லை என்பதால் அதன் மீது எந்தவிதமான ஆர்வத்தையும் ஆராய்ச்சியாளர்கள் காட்டவில்லை.
மீண்டும் சமீபத்தில் இந்த ராக்கெட் பாகம் ஆராய்ச்சியாளர்களின் கண்களில் பட, ஆரம்பத்தில் எலோன் மாஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்காக விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் பாகம் என்று கூறினார்கள். பின்னர் அது சீன ராக்கெட்டின் பாகம் என்று கூற அதனை சீன அரசு மறுத்து வருகிறது.
ஐரோப்பிய விண்வெளி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் 10 செ.மீக்கு அதிகமான அளவு கொண்ட 36,500 எரிந்த ராக்கெட்டுகளின் பாகங்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பாகங்கள் குப்பையாக விண்ணில் சேகரமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ஒன்றாக இணைந்த 3 “கேலக்ஸிகள்”: சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஹப்பிள்
இதுவரை உலக அளவில் ஒரே மாதிரியாக, விண்ணில் இருக்கும் இந்த உதிரி பாகங்களை எண்ணுவது மற்றும் அதனை அக்ற்றுவது குறித்த எந்த விதமான விதிகளும் இல்லை. விண்வெளியில் ஆராய்ச்சி பயணங்களை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் இத்தகைய விண்வெளி குப்பைகளை எண்ணி மதிப்பீடு செய்து வருகின்றனர்.
தெற்கு இங்கிலாந்தில் வசித்து வரும் 63 வயதான பீட்டர் பிர்ட்விஷில் என்பவர் தன்னுடைய தோட்டத்தில் இருந்து தினமும் தொலைநோக்கி வழியாக எரிகற்களை பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். அவருடைய பார்வையில் தென்பட்ட பூஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள ராக்கெட் உதிரிபாகம் குறித்த புகைப்படங்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil