ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள். அங்கே தொடர்ந்து மழைக்காடுகளும் அதனைத் தொடர்ந்து நடுவே வறட்சியான பூமியும் அதில் ஆயிரக்கணக்கான மலர்களும் பூத்துக் குலுங்கினால் என்ன யோசிப்பீர்கள்? இந்த இரண்டு சூழலியலுக்கும் இடையே ஒரு மீட்டர் கூட இடைவெளி இல்லாமல் இருந்தால்? கேட்கவே வியப்பாக இருக்கிறது தானே. இப்படி ஒரு இயற்கை அதிசயத்தை நாம் தென்னாப்பிரிக்காவில் காண முடியும். தென்னாப்பிரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ளது ஃபைன்போஸ் என்ற இயற்கை சூழலியல். இந்த வறண்ட பிரதேசத்தில் மட்டும் சுமார் 7000 தாவர வகைகள் இருக்கின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உலகத்தில் வேறெந்த நிலப்பரப்பில் வளரும் தாவரங்களின் வேர்களைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய, நீளமான வேர்களைக் கொண்டுள்ளது இந்த சூழலில் வாழும் தாவரங்கள் என்று ஃப்ரொசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயன்ஸில் ஆராய்ச்சியாளர்கள் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நீண்ட, நெடிய, பசுமையான மரங்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க வெப்ப மண்டலக் காடுகளை ஒட்டியே இருக்கும் இந்த ஃபைன்போஸ் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காலநிலை மற்றும் புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனாலும் கூட உலகிலேயே அதிக அளவில் பூக்கள் பூக்கும் உயிர்பன்முகத்தன்மை நிலமாக ஃபைன்போஸ் காடுகள் இருக்கின்றன.
பல ஆண்டுகள் கழித்து காவிரிக் கரையில் நீர் நாய்கள் – மகிழ்ச்சியில் முக்கொம்பு மக்கள்
இந்த இரண்டு வகையான காடுகளுக்கும் மத்தியில் ஒரே ஒரு மீட்டர் இடைவெளி தான் இருக்கிறது. ஏன், எதனால் ஒரே தொடர்ச்சியாக அமைந்திருக்கும் நிலப்பரப்பில் இரண்டு வகையான காடுகள் காணக்கிடைக்கின்றன? இதற்கான காரணங்கள் என்ன? என்பதை கண்டறிய ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் துறை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த ஒரு மீட்டர் வித்தியாசம் என்பது சவான்னா மற்றும் மழைக்காடுகளுக்கும் இடையே இருக்கும் தொலைவைக் காட்டிலும் மிகவும் குறைவானது. பொதுவாக 2 வகையான காடுகளுக்கு இடையே குறைந்த பட்சம் சில கிலோமீட்டர் பரப்பாவது இடைவெளி இருக்கும். இத்தகைய இடைவெளிகள் ஃபைன்போஸ் – ஆப்பிரிக்க வெப்ப மண்டல காடுகளில் குறைவாகவே உள்ளது.
இதன் காரணத்தை அறிந்து கொள்ள ஆப்பிரிக்க வெப்பமண்டல காடுகளில் இருக்கும் சில தாவரங்களை ஃபைன்போஸ் பகுதியில் வைத்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் ஆராய்ச்சியாளார்கள். நான்கு ஆண்டுகளாக அந்த தாவரங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
நீர்நிலைகளை அச்சுறுத்தும் விஷப்பாசிகள்… ஆரம்பத்திலேயே வளர்ச்சியை தடுக்க புது முயற்சி
ஃபைன்போஸ் தாவரங்களின் வேர்கள் எக்காரணம் கொண்டும் இந்த புதிய தாவரங்கள் இருக்கும் நிலப்பரப்பில் ஊடுருவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டதோடு, தேவையான ஊட்டச்சத்துகளையும் அவ்வபோது வழங்கி வந்தனர். வெப்பமண்டலக் காடுகளில் வளரும் இதே தாவரங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் ஐந்து மடங்கு வேகமாக இந்த தாவரங்கள் 4 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தது கண்டறியப்பட்டது.

இதன் அருகில் ஃபைன்போஸ் தாவரங்கள் தன்னுடைய சிறிய, நுண்ணிய வேர்களைக் கொண்டு தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அருகில் இருக்கும் வெப்பமண்டல காடுகளில் இருந்து உறிஞ்சிக் கொள்வதால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் அக்காடுகளில் இருக்கும் தாவரங்கள் மெதுவாக வளர்ச்சி அடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
இந்த வளர்ச்சிக்கான காரணத்தை மேலும் நுணுக்கமாக ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் முயன்ற போது, ஃபைன்போஸ் பகுதியில் வாழும் தாவரங்கள், மயிரிழையைப் போன்ற மிகவும் நுண்ணிய அதே நேரத்தில் ஊட்டச்சத்துகளை தேடி கண்டடையும் ஏவுகணை போன்ற செயல்களில் ஈடுபடும் வகையில் வேர்களை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற தாவரங்களின் வேர்கள் நுழையவே முடியாத இடத்திற்கும் பாம்பு போன்று ஊர்ந்து தனக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இந்த தாவரங்கள் பெற்றுக் கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காடுகளில் இருக்கும் தாவரங்களின் வேர்களைக் காட்டிலும் 10 மடங்கு நீளமாக இருக்கின்றன ஃபைன்போஸ் வேர்கள். ஒரு கிராம் ஃபைன்போஸ் வேர்கள் 15 கால்பந்து மைதான நீளத்திற்கு சமமாக உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil