/tamil-ie/media/media_files/uploads/2023/04/Total-solar-eclipse-20230418-1.jpg)
சூரிய கிரகணம் 2023 தேதி மற்றும் நேரம்
இன்று, (ஏப்ரல் 20) உலகின் சில பகுதிகளில் மிகவும் அரிதான "ஹைபிரிட்" சூரிய கிரகணத்தைக் கண்டுக்களிக்கலாம். இந்த அரிய கிரகண நிகழ்வை நாசா தனது யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிப்பரப்புகிறது. அதற்கான லிங்க் இங்கே
ஹைபிரிட் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.06 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நீடிக்கும் என்று வானியல் இணையதளம் இன் தி ஸ்கை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: Solar Eclipse 2023: அரிய ஹைபிரிட் சூரிய கிரகணம்; நீங்கள் பார்ப்பது எப்படி?
கிரகணத்தின் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும். மேலும் சந்திரனின் நிழலின் இருண்ட பகுதியில் உள்ள பூமியின் பகுதிகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் சில சமயங்களில், சந்திரன் சூரியனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது, எனவே சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இது நிகழும்போது, அது வளைய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
பூமியின் மேற்பரப்பு வளைந்திருப்பதால், கிரகணங்கள் வளையத்திலிருந்து மொத்தமாகவும் மற்றும் நேர்மாறாகவும் செல்லலாம். இது ஒரு கலப்பின (ஹைபிரிட்) கிரகணம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நாளை அதற்கு ஒரு உதாரணம்.
துரதிர்ஷ்டவசமாக, இது இந்தியாவில் உள்ள பார்வையாளர்களால் பார்க்க முடியாது. ஆனால் நாசாவின் யூடியூப் பக்கத்தில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
நாசாவின் சூரிய கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பு
இந்திய நேரப்படி ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, நிபுணர்களின் வர்ணனையுடன் கிரகணத்தின் தொலைநோக்கி காட்சிகளை நாசா பகிர்ந்து கொள்ளும். கீழே உள்ள இணைப்பில் நீங்கள் அதைக் காணலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.