/tamil-ie/media/media_files/uploads/2022/04/Capture.jpg)
Online sales on dead coral rocks : ராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டக் கல் என்று கூறி 20 கிராம் பவளப்பாறைகளை ரூ. 5 ஆயிரம் வரை ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இந்த ஆன்லைன் விற்பனை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் காணப்படுகிறது. கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் பசு, கடல் தாமரை, டால்பின் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
பவளப்பாறைகள் இன்று பல்வேறு காரணங்களால் அழிவை சந்தித்து வருகின்றன. ஆழ்கடல் மீன் பிடித்தலுக்காக பயன்படுத்தப்படும் வலை, பவளப் பாறைகளை வெட்டி எடுத்தல் மற்றும் வெப்பநிலை உயர்வு போன்றவை காரணமாக பவளப்பாறைகள் அழியத் துவங்கியுள்ளது. இதனால் பவளப்பாறைகளை வாழ்விடமாக கொண்ட விலங்கினங்களும், தாவரங்களும் கூட அழிந்து வருகின்றன. இந்த சூழலில் அதனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆன்மீகப் பயணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களுக்கு வருகைப் புரிவது வழக்கமான ஒன்றாகும். அவர்கள் அப்படி வரும் போது மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமேஸ்வரம் கோவில் போன்றவை கட்டாயமாக போக வேண்டிய இடங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ராமேஸ்வரம் வரும் பக்தர்களிடம் ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என்று கூறி பலர் பவளப்பாறைகளை விற்பனை செய்து வந்தனர். தற்போது ஆன்லைனிலும் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.
காசிரங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை உயர்வு; மகிழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள்
இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் ஆன்லைனில் தடை செய்யப்பட்ட பவளப் பாறைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது வன உயிரின தடுப்பு சட்டம் 1972-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டு மூன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரத்திற்கு மேல் அபராதமும் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்யும்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வனத்துறை ஏற்கனவே சைபர் கிரைம் மற்றும் ராமநாதபுரம் காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.