Advertisment

அடர் வெள்ளை - ஆழ்ந்த கரும் புள்ளிகள்; நூறு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியில் தென்பட்ட பட்டாம்பூச்சி

100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
Mar 14, 2022 13:04 IST
rare butterfly spotted in the Kotagiri slopes, spotted royal, royal spotted, spotted royal, Tajuria Maculata

rare butterfly spotted in the Kotagiri slopes : 1800களின் பிற்பகுதியில் அதிக அளவில் நீலகிரி மலைப் பகுதியில் காணப்பட்ட ஸ்பாட்டட் ராயல் பட்டாம்பூச்சிகள் (Tajuria Maculata) ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் மக்கள் பார்வையில் பட்டுள்ளது. வெள்ளை நிற இறக்கைகளில் ஆழ்ந்த கறுப்பு நிற புள்ளிகளைக் கொண்டுள்ள இந்த பட்டாம்பூச்சிகள் உலகில் வடகிழக்கு இந்தியாவைத் தவிர தென்னிந்தியாவில் சில இடங்களில் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளது என்று கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

Advertisment

பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்கள் பார்ப்போம். வண்ண வண்ண நிறங்களில் மிக அழகாக, ஓரிடம் விட்டு ஓரிடம் பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகள் என்றால் அனைவருக்கும் ஒரு வித மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. தமிழகத்தில் அதிக பட்டாம்பூச்சிகளுக்கு தாய்மடியாக திகழ்வது கோவையும் நீலகிரியும் தான்.

ஒரு நட்சத்திரத்தின் அழிவு எப்படி இருக்கும் தெரியுமா? மெய் சிலிர்க்க வைக்கும் தகவல்கள்

publive-image

தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் பட்டாம்பூச்சிகள் வலசை போகும் பண்பு கொண்டவை. நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பருவமழை ஆரம்பிக்கும் முன்னாள் அவை மெல்ல மெல்ல கீழிறங்கி கிழக்கு தொடர்ச்சி மலையை அடையும்.

இத்தகைய வலசை காலத்தில் லட்சக் கணக்கில் பட்டாம்பூச்சிகள் வலசை செல்லும். பல நேரங்களில் மிகவும் தனித்து விளங்கும், அதிகம் கவனிக்கப்படாமல், அல்லது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பகுதிக்கு வந்து செல்லும் பட்டாம்பூச்சிகளும் கண்ணில் அகப்படும்.

தமிழகத்தில் கோத்தகிரி மலைத் தொடரில் காணப்படும் இந்த வகை பட்டாம்பூச்சிகள் கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்ப உயர்வை தாங்கும் வகையில் தகவமைப்பை மாற்றிக் கொள்ளும் பவளப்பாறைகள் – ஆய்வு முடிவுகள்

நீண்ட நாட்களாக இந்த பகுதியில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு மற்றும் அதனை முறையாக பதிவு செய்யாமல் இருப்பது நீலகிரியின் உயிரினங்கள் குறித்து மக்களுக்கு முழுமையாக தெரியாமல் போவதற்கு வழி வகுக்கும் என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளன்னர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Environment #Wildlife #Nilgiris #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment