Solar Eclipse 2023 Live Today: 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. கிரகணத்தின்போது சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு முழு கிரகணத்திற்குச் செல்லும், பின்னர் மீண்டும் வளையத்திற்குத் திரும்பும்.
இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.06 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நீடிக்கும் என்று வானியல் இணையதளம் இன் தி ஸ்கை தெரிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது இந்தியாவில் உள்ள பார்வையாளர்களால் பார்க்க முடியாது மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசியாவில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.
சூரிய கிரகணத்தை காண முடியாதவர்கள் நாசா ஒளிபரப்பும் நேரடி காட்சிகளை காண முடியும். இந்நிலையில் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு நேரடி காட்சிகளை நாசா ஒளிப்பரப்புகிறது.
Solar Eclipse 2023 Live Streaming: சூரிய கிரகணம் லைவ்; நாசா நேரடி ஒளிபரப்பு; யூடியூப் லிங்க் இங்கே!
Solar Eclipse 2023: அரிய ஹைபிரிட் சூரிய கிரகணம்; நீங்கள் பார்ப்பது எப்படி?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஹைபிரிட் சூரிய இளைஞர் ஒருவர் படம்பிடிக்கிறார்.


இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் சூரிய கிரகணம் தென்பட்டது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவில் பல இடங்களில் தென்பட்டது. ஹைபிரிட் சூரிய கிரகணத்தின் போது பிறை சூரியன் தென்பட்டதை மக்கள் கண்டு ரசித்தனர்.
ஆஸ்திரேலியாவின் எக்ஸ்மவுத் வளைகுடாவில் நிகழ்ந்த சூரிய கிரகண காட்சிகளை இங்கு காணலாம்.
https://twitter.com/a_film_maker/status/1648909989074079744/video/1
ஆஸ்திரேலியாவில் தெரிந்து வந்த சூரிய கிரகணம். அங்கே நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் தற்போது இந்தோனேஷியாவில் தெரிகிறது.


இந்தோனேஷியாவின், ஜகர்தா பகுதியில் தெரியும், சூரிய கிரகணத்தை, எப்படி பார்க்க வேண்டும் என்பதை மகளுக்கு சொல்லித் தரும் தாய்.
இன்னும் சில நிமிடங்களில், ஹைபிரிட் சூரிய கிரகணம் அதன் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இன்னும் சில நிமிடங்களில் சூரிய கிரகணம் நிறைவடைய உள்ளது.

மேகங்கள் சூழ, பாதி சூரிய கிரகணத்தின் காட்சிகள், இந்தோனேசியாவின் ஜகர்தா பகுதியில் காண முடிந்தது.
மீண்டும் சூரியன் ’ரிங்’ வடிவதற்கு வந்துவிட்டது. முழு சூரிய கிரகணம் முடிந்த நிலையில், மீண்டும் பாதி சூரிய கிரகணம் நிகழத்தொடங்கி இருக்குறது. அதற்கான பிரத்யேக புகைப்படம் கிழே

முழுமையான சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது ஒரு நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்நிலையில் சூரியன் அதன்’ ரிங்’ வடிவத்திற்கு மீண்டும் திரும்பிவிட்டது.


நிலா சூரியனை முழுவதுமாக மறைக்க தொடங்கி இருக்கிறது. சூரியன் வடிவம் மெதுவாக மறையத் தொடங்குகிறது. முழு சூரிய கிரகணம் நடைபெறும்போது வானம் முழுவதுமாக இருளாக மாறும்.
மிகவும் அரிதாக தோன்று இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் எக்ஸ்மோத் பகுதியில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மதியம் 12.29 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
ஹைபிரிட் சூரிய கிரகணம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள எக்ஸ்மோத் பகுதியில் தெரிந்த சூரிய கிரகணத்தின் புகைப்படம் .

இந்த சூரிய கிரகணத்தை காலை 8.59 முதல் 9.05 வரை ஆஸ்திரேலியாவில் காண முடியும். இந்தோனேசியாவின் சில பகுதிகளில் காலை 9.53 மணி முதல் 10.28 மணி வரை பார்க்க முடியும்.