New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Danainae.jpg)
மேற்குத் தொடர்ச்சி மலையில் தன்னுடைய பயணத்தைத் துவங்கும் இந்த பட்டாம்பூச்சிகள் நான்கு நாட்களில் ஈரோடு காடுகள், மலை மகதீஸ்வரா வனவிலங்கு சரணாலயம், காவிரி வனவிலங்கு சரணாலயங்களை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
tags attached in the wings to monitor butterfly migration : ஒவ்வொரு ஆண்டும் பட்டாம்பூச்சிகள் பருவமழை காலங்கள் துவங்குவதற்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடம் பெயருகின்றன.
அடர் வெள்ளை – ஆழ்ந்த கரும் புள்ளிகள்; நூறு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியில் தென்பட்ட பட்டாம்பூச்சி
தமிழகத்தில் கோவை, நீலகிரி பகுதியில் இருந்து ஏற்காடு, ஜவ்வாது மலை என்று பட்டாம்பூச்சிகள் இடம் பெயருகின்றன. மிக சமீபத்திலேயே இயற்கை ஆர்வலர்களின் கண்களில் சிக்கிய இந்த நிகழ்வு குறித்து முழுமையான ஆராய்ச்சிகள் எங்கும் நடைபெறவில்லை. அதே போன்று ஒரு முழுமையான வலசை குறித்த தகவல்களையும், காரணங்களையும், சூழல்களையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை!
ஆரம்பத்தில் தன்னார்வலர்கள் பலர் சைக்கிள், கார், பைக் என்று பட்டாம்பூச்சிக் கூட்டங்களை ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை சென்று கண்காணித்தனர். யாரும் இதுவரை முழுமையாக இந்த வலசைய் குறித்த ஆய்வுகளை நடத்தவில்லை. இந்த சூழலில் வயநாட்டில் உள்ள பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் டனைனா வகை மில்க்வீட் பட்டாம்பூச்சிகளின் ஒரு பக்க இறக்கையில் மட்டும் டேக்குகளை பொருத்தியுள்ளனர். இந்த ஸ்டிக்கர்கள் மூலமாக பட்டாம்பூச்சி எங்கே வரை பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலும் என்று ஆராய்ச்சியாளர்களும் ஆர்வலர்களும் நம்புகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தன்னுடைய பயணத்தைத் துவங்கும் இந்த பட்டாம்பூச்சிகள் நான்கு நாட்களில் ஈரோடு காடுகள், மலை மகதீஸ்வரா வனவிலங்கு சரணாலயம், காவிரி வனவிலங்கு சரணாலயங்களை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். டனைன் பட்டாம்பூச்சியின் நிறம் மற்றும் அதன் எண்ணிக்கை காரணமாக இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.