Advertisment

கொரோனா காலத்தில் முடங்கிய ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைத்த சிஎஸ்கே! வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
csk, chennai super kings 2008, ipl 2020, ipl 2008, dhoni, cricket news, sports news, cricket video, சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் 2020, தோனி

csk, chennai super kings 2008, ipl 2020, ipl 2008, dhoni, cricket news, sports news, cricket video, சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் 2020, தோனி

மறக்க முடியுமா அந்த நாளை!!? ஐபிஎல் எனும் கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்களுக்கு அறிமுக செய்து, அது ஏகோபித்த வரவேற்புடன் தொடங்கி, சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் தோனி படை முதன் முதலாக காலெடுத்து வைத்த நாள் நேற்றோடு (மே.23) 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

Advertisment

ஒருநாள் தாமதமான செய்தி என்றாலும் தரமான செய்தி அல்லவா! எப்படி மிஸ் பண்ண முடியும்?

தமிழகத்தின் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சி! வார்த்தை மோதலில் கம்பீர் - எம்.எஸ்.கே பிரசாத்

இளைஞன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹெய்டன், ஹஸ்ஸி, பிளெமிங், ஸ்டைரிஸ், முரளிதரன் என ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தனர்.

அந்த முதல் ஐபிஎல் தொடரில், பஞ்சாப்புக்கு எதிராக முதன் முதலாக களமிறங்கியது சென்னை. ஆனால், போட்டி நடந்தது மொகாலியில். ஹஸ்ஸி 54 பந்துகளில் 116 ரன்கள் குவிக்க, 240 ரன்கள் விளாசிய சிஎஸ்கே 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

அதன்பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியோடு, சிஎஸ்கே மோதியது. இந்த போட்டி தான், சென்னை சூப்பர் கிங்ஸ், சேப்பாக் ஸ்டேடியத்தில் விளையாடிய முதல் போட்டியாகும். அதாவது, மே.23 அன்று.

இதுகுறித்த சிறப்பு வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் முடங்கிக் கிடைக்கும் ரசிகர்களை மீண்டும் பெஸ்டிவல் மோடுக்கு கொண்டுச் செல்கிறது இந்த வீடியோ. உலகம் முழுவதும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்ளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுளள்து.

23, 2020

பின்ன... சிஎஸ்கே-ன்னா சும்மாவா!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Super Kings Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment