Advertisment

டி20 உலகக் கோப்பை: 16 வயது சரவெடியை உலகம் அடையாளப்படுத்தும் பதம் 'லேடி ஷேவாக்'!

மந்தனா, உண்மையில், "அணியின் குழந்தை" (ஷஃபாலி) பங்களிப்பை ஒப்புக் கொண்டார். “நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் பவர் பிளேயில் நிறைய ரன்கள் அடித்தேன். ஆனால் இப்போது, ஷஃபாலி நான் செய்யும் வழியில் ரன்களைப் பெறுகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
16 year old shafali verma t20 world cup virender sehwag

16 year old shafali verma t20 world cup virender sehwag

விஷால் மேனன்

Advertisment

சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது வெறும் 14 வயதான ஷஃபாலி வெர்மா, ரோஹ்தக் (Rohtak) நகரின் ஸ்ரீ ராம் நரேன் கிரிக்கெட் அகாடமியில் ஹரியானாவின் ரஞ்சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் ஹூடாவை எதிர்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். பயிற்சியாளர் அஸ்வானி குமார் தனது நட்சத்திர மாணவியை உயர்மட்ட பந்துவீச்சுக்கு எதிராக சோதிக்க விரும்பினார். ஆனால், அந்தப் பெண் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலையில், ஹூடா எளிதான, மெதுவான பந்தை வீசினார். இறங்கி வந்து ஆடிய ஷஃபாலி, அதை தலைக்கு மேல் அடித்து நொறுக்கினார். ஹூடாவின் அடுத்த பந்து 130 கி.மீ வேகத்தில் இருந்தது, ஆனால் அதில் கூட அவர் எந்த சிரமத்தையும் மேற்கொள்ளவில்லை.

"டி 20 உலகக் கோப்பையில் இந்த சிறுமி சிறப்பாகச் செயல்படுவார் என்பதை நான் அறிவேன்" என்று ஹூடா கூறுகிறார்.

பெண்களின் டி 20 உலகக் கோப்பையில் மூன்று ஆட்டங்களில் தனது இரண்டாவது வீரர் விருதை, மெல்போர்னில் நேற்று வியாழக்கிழமை வென்றார் ஷஃபாலி. நியூசிலாந்திற்கு எதிரான அவரது 34 பந்துகளில் 46 ரன்கள், இந்தியாவை மூன்று ஆட்டங்களில் மூன்றாவது வெற்றியைப் பெற உதவியது. இந்தியா அரையிறுதிக்கும் முன்னேறியது.

பெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் - வைரல் வீடியோ

அந்தளவுக்கு, வர்ணனை பெட்டியில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், 16 வயதான சிக்ஸர் மழை பொழிந்த வீராங்கனையை புகழ்ந்தனர். "இந்த பெண்ணால் தீவிரமாக விளையாட முடியும்" என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கூறுகையில், “ஷஃபாலி ஒரு வீராங்கனையாக இருந்து, பெண்களின் கிரிக்கெட்டை காண ஒரு கூட்டத்தை ஈர்க்கிறார். ஒப்பிடுவது நல்லதல்ல. ஆனால் அவர் எனக்கு வீரேந்திர சேவாக்கை நினைவூட்டுகிறார். தாக்குதல் அணுகுமுறை பெண்களின் கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியைக் கொண்டுவருகிறது" என்றார்.

நீண்ட காலமாக, பெண்கள் கிரிக்கெட் பெரிய ஹிட்டர்களை கொண்டிருப்பதாக அறியப்படவில்லை, ஆனால் மூன்று ஆட்டங்களில் எட்டு சிக்ஸர்களுடன் ஷஃபாலி அதை மாற்றி வருகிறார். வெறும் 17 டி 20 சர்வதேச போட்டிகளுக்குப் பிறகு, அவர் தனது ஸ்டிரைக் ரேட்டை 148 ஆகக் கொண்டுள்ளார், இது உலகின் மிகச் சிறந்ததாகும்.

30 வயதான ஹூடா அந்த முதல் “மென்மையான” பந்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். “அதன்பிறகு, பயிற்சியாளர் என்னிடம்‘ ‘Kya kar raha hai, jaan laga ke bowl kar’ (நீங்கள் என்ன செய்கிறீர்கள், கொஞ்சம் உயிரோட்டத்துடன் பந்து வீசுங்கள்) என்று கூறினார். அவளுடைய ஆட்டத்தை விளையாட மற்றவர்களை விட அவளுக்கு அதிக நேரம் இருப்பதாகத் தோன்றியது. அப்போது அவள் 14 வயதுதான். அவள் வெளியேறி வந்து எனது <பந்தை என்னைத் தாக்கிய விதம் மனதைக் கவரும் வகையில் இருந்தது" என்று ஹூடா கூறுகிறார்.

publive-image

தனது மகளை உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக மாற்றுவதில் தீவிரம் கொண்டிருந்த சஞ்சீவ் வர்மா என்ற சாதாரண ரோஹ்தக் (Rohtak) நகரின் பொற்கொல்லரின் மகளின் (ஷஃபாலி வெர்மா) ஆரம்ப நாட்களை பயிற்சியாளர் அஸ்வானி நினைவு கூர்ந்தார். ஷஃபாலியின்ஐந்து வயதிலிருந்தே, விடியற்காலை 5 மணிக்கு அவரது தந்தை எழுப்புவார். பின்னர், சஞ்சீவ், அவரது மகள் மற்றும் மகன் சாஹில் ஆகியோர் பைக்கில் வெற்று சாலைகள், பூங்காக்கள் அல்லது கிரிக்கெட் விளையாடுவதற்கான வாகன நிறுத்துமிடங்களைத் தேடுவார்கள்.

மகளிர் டி20 உலகக்கோப்பை; கடைசிப் பந்தில் இந்திய அணி வெற்றி

ஆல்-பாய்ஸ் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. எனவே, ஷஃபாலியின் தலைமுடியைக் குறைக்கும்படி தந்தை சஞ்சீவ் கேட்டார். களத்தில் உள்ள ஒவ்வொரு சிறுவனையும் ஷாஃபாலி முந்தியதால் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்த படி: அஸ்வானியின் அகாடமி. "முதலில், அவள் வயதுடைய வீராங்கனைகளின் பந்துவீச்சை கான்கிரீட் ஆடுகளத்தில் எதிர்கொள்ளும்படி கேட்டேன். ஒரு கட்டத்தில், அவர் சில சிறுமிகளை காயப்படுத்துவார் என்று நான் கவலைப்பட்டேன். ஓரிரு மாதங்களில், நான் அவளை தரை விக்கெட்டுக்கு மாற்றினேன், அங்கு அவள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எதிர்கொண்டாள்" என்று பயிற்சியாளர் கூறுகிறார்.

முதல் தர வீரர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இப்போது அவருக்கு வந்துவிட்டது. அணியின் அனுபவமிக்க வீராங்கனைகள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிக ரன்களை குவிக்கவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் இந்தியா அனைத்து வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

மந்தனா, உண்மையில், "அணியின் குழந்தை" (ஷஃபாலி) பங்களிப்பை ஒப்புக் கொண்டார். “நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் பவர் பிளேயில் நிறைய ரன்கள் அடித்தேன். ஆனால் இப்போது, ஷஃபாலி நான் செய்யும் வழியில் ரன்களைப் பெறுகிறார்.

'சூச்சின்' டெண்டுல்கரா? தமிழக அரசியல் தலைவர்களுக்கு நேரடி சவால் விடுத்த டிரம்ப்! (வீடியோ)

இது ஒரு ஆரம்பம் என்று சஞ்சீவ் கூறுகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் அடித்ததால் அவர் அணியில் இருக்கிறார். இப்போது, அவள் 10 அல்லது 15 ஓவர்களுக்கு களத்தில் இருந்தால் அவள் என்ன செய்வாள் என்று பாருங்கள். அவர் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்றும், எத்தனை அணியிடம் ஆட்டத்தை முடிக்கிறார் என்பதைப் பாருங்கள். நாங்கள் அனைவரும் அவள் மீது மிகக் கடினமாக உழைப்பை கொட்டியிருக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

வியாழக்கிழமை, ஆட்டத்துக்குப்  பிறகு நடந்த விருது வழங்கும் விழாவில், இந்த டி 20 உலகக் கோப்பையில் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீராங்கனையாக மாற உதவிய அனைவரையும் ஷஃபாலி குறிப்பிட மறக்கவில்லை: “எனது அப்பாவுக்கும் எனது அகாடமியில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு நன்றாக பயிற்சி அளிக்கவும், எனது பேட்டிங்கை மேம்படுத்தவும் அவர்கள் உதவினார்கள்" என்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "

Womens Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment