scorecardresearch

இப்போ எதற்கு ஷிகர் தவான் கேப்டன்? காமெடி செய்கிறதா இந்திய கிரிக்கெட் வாரியம்?

former India cricketer Ajay Jadeja admitted that he remains confused over Dhawan’s selection in the team Tamil News: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏதிரான தொடரரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தவானின் தேர்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Ajay Jadeja on Dhawan's captaincy selection
Shikhar Dhawan – Indian cricketer

 Shikhar Dhawan Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் தொடக்க வீரர் ஷிகர் தவான். தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கென ரசிகர் பெருங்கூட்டதை வைத்துள்ள இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானர். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2315 ரன்களையும், 153 ஒருநாள் போட்டிகளில் 6422 ரன்களையும், 68 டி-20 போட்டிகளில் 1759 ரன்களையும் குவித்துள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள தவான், ஐசிசி நடத்திய தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் ஆனார். இந்த சாதனையை அடைய சச்சின் டெண்டுல்கர் 18 இன்னிங்ஸ்களும், சவுரவ் கங்குலி 20 இன்னிங்ஸ்களும் எடுத்த நிலையில், தவான் 16 இன்னிங்ஸ்களில் கடந்து அசத்தினார்.

2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியின் தொடர் நாயகன் விருதை வென்றவர் தவான். 2017ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவர் 271 ரன்கள் எடுத்தார். இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் 125 ரன்களாக இருந்தது. இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும், குறைந்தபட்சம் 500 ரன்களுடன் 100 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்ட ஒரே பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் மட்டுமே உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அவரது சராசரி 130க்கு மேல் உள்ளது.

டெஸ்ட், டி-20 அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட தாவன்…

இந்திய அணியில் மூத்த வீரராக உருவெடுத்த ஷிகர் தவான் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக வலம் வந்தார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்றோருக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவம் அவரும் அளிக்கப்பட்டது. ஆனால், அவரின் ஃபார்ம் சரிவை சந்திக்க தொடங்கியதால், அவர் மீது அணி நிர்வாகம் வைத்திருந்த நம்பிக்கையை மெது மெதுவாக இழந்தார்.

இதனால், முதலில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்தும், அடுத்து டி-20 அணியில் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டார். அவர் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடினார். இதேபோல், அவர் கடைசியாக கடந்தாண்டு ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடினார். இத்தொடருக்கான இந்திய அணியையும் அவர் வழிநடத்தி இருந்தார்.

தவான் ஏற்கனவே கடந்தாண்டு நடந்த டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கழற்றி விடப்பட்ட நிலையில், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்தும் கழற்றி விடப்பட இருக்கிறார். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்து வரும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை கேப்டனாக தவான் வழிநடத்தி வருகிறார். அவரின் தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது.

வழக்கம் போல் தொடக்க வீரராக களமாடிய தவான், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தினார். மேலும், தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். 99 பந்துகளில் 10 பவுண்டரிங்கள், 2 சிக்ஸர்கள் என அதிரடி காட்டினார். தொடர்ந்து அவர் சதம் விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 ரன்கள் சேர்க்கும் முன், 97 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

எனினும், அவரின் ஆட்டம் மெச்சும் படியான ஒன்றாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு, தனது சிறப்பான மட்டை சுழற்றால் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்தார். இதேபோல் அவரின் கேப்டன்சியும் சிறப்பானதாக இருந்தது. அவரின் அட்டகசமான ஆட்டத்தால், அவரை ஒருநாள் தொடர் அணியில் இருந்தும் கழற்றி விட வேண்டும் என்று கூறிய நிபுணர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கிறார். அதோடு, தானும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் வீரர்களுடன் ரேஸில் உள்ளேன் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அஜய் ஜடேஜா கருத்து…

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏதிரான தொடரரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தவானின் தேர்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், தவானை விட இளம் வீரராக இருக்கும் கேஎல் ராகுலை அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு பதிலாக அவரை அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது. ஆனால் தவான், கேப்டன் ரோகித் விரும்பும் “ஆக்ரோஷமான கிரிக்கெட்டின்” ஒரு பகுதியாக இல்லை. இதைத்தான் இந்திய அணி நிர்வாகம் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மாற்றியமைக்க முயற்சிக்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜய் ஜடேஜா

“ஷிகர் தவான் குறித்து நான் முற்றிலும் குழப்பமாக உள்ளேன். அவர் இங்கே என்ன செய்கிறார்? 6 மாதங்களுக்கு முன்பு அவர் நீக்கப்பட்டார். இந்திய நிர்வாகம் கேஎல் ராகுல் மற்றும் சில இளம் வீரர்களை கேப்டனாக நியமித்தது. பின்னர், அவர் திடீரென கடந்த ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் அணியில் இருந்து வெளியேறினார்.

இதன்பின்னர் அவரை இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு அழைத்துச் சென்றனர். அப்படி அவர்கள் (அணி நிர்வாகம்) என்ன நினைக்கிறார்கள்? மேலும் அவரை இந்திய அணியில் சேர்க்கும் திட்டம் ஒரு பகுதியாக இருந்தால், கேப்டன் ரோகித் சர்மா கூறிய “ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவோம்” என்கிற அணியின் ஒரு பகுதியாக தவான் இருக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை.” என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ajay jadeja on dhawans captaincy selection

Best of Express