இது போன்ற மோசமான சூழலில் நாடு இருக்கும் போது எப்படி ஐ.பி.எல். நடத்தப்படுகிறது? - ஆண்ட்ரூ டை

ஒவ்வொருவரின் பார்வையும் இதில் வேறுபடலாம். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கின்றேன்.

ஒவ்வொருவரின் பார்வையும் இதில் வேறுபடலாம். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கின்றேன்.

author-image
WebDesk
New Update
Andrew Tye wonders how IPL franchises ‘spending so much’ amidst COVID-19 crisis

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் எப்படி ஐ.பி.எல். போன்ற போட்டிகளை நிறுவனங்களால் நடத்த முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரூ டை.

Advertisment

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஆண்ட்ரூ டை.

இந்தியர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், மருத்துவமனைக்கு செல்லவே முடியாத அளவுக்கு மக்கள் கஷ்டப்படும் போது எப்படி ஐ.பி.எல். போன்ற போட்டிகளுக்காக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் அதிக பணத்தை செலவிடுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க : இந்த நேரத்துக்கு இது நிச்சயம் நமக்கு தேவை; அம்மாவுடன் பாட்டு பாடும் குட்டிச்சுட்டியின் வீடியோ

Advertisment
Advertisements

ஆனால் இது போன்ற ஒரு சூழலில் மன அழுத்ததை குறைக்க போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று தான் நானும் விரும்புகின்றேன் என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். ஒவ்வொருவரின் பார்வையும் இதில் வேறுபடலாம். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கின்றேன். வீரர்கள் அனைவரும் பாதுகாக்க இருக்கிறார்கள். இது பாதுகாப்பாக தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டை இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் சாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகினார்கள். ஆனால் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் போட்டிகளில் இருந்து வெளியேறவில்லை. நாதன் கௌல்டர் நைல் போன்றோர் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: