Advertisment

ஆஷஸ் 3-வது டெஸ்ட்; ஹாரி புரூக் அபாரம்; 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.,யை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டி; ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து; தொடரை தக்கவைப்பு

author-image
WebDesk
New Update
Ashes Test cricket

Ashes Test cricket

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

உலகின் பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஷஸ் தொடர் ஆகும். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள்: TNPL 2023 NRK vs MADURAI: இறுதிவரை திக்.. திக்… மதுரை அணியை 4 ரன்களில் வீழ்த்தியது நெல்லை

3 ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் உட் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 80 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் கம்மின்ஸ் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதன் மூலம் 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹெட் 77 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் அதிகபட்சமாக பிராட் மற்றும் வோக்ஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால், 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்திருந்தது.

இதையடுத்து 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேக் கிராவ்லி 44 ரன், பென் டக்கட் 23 ரன், மொயீன் அலி 5 ரன், ஜோ ரூட் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஸ்டோக்ஸ் 13 ரன், பேர்ஸ்டோ 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அணியின் வெற்றிக்கு 21 ரன்களே தேவைப்பட்ட போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புரூக் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிறிஸ் வோக்ஸ் உடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Australia Ashes England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment