Asia Cup 2018: India vs Afghanistan Live Cricket Match Score: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா நேற்று(செப்.25) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பின்னர் லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு ஆகியோர் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் டோனி, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் ஜொலிக்கவில்லை.
கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவின் போராட்டம், ஆட்டத்தை சமநிலையில் (டை) முடிக்கவே உதவியது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதாலும், ஆப்கானிஸ்தான் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதாலும் இந்த ஆட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனாலும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான இந்தியாவை ‘டை’ செய்தது ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் பரிசாக அமைந்தது.
முன்னதாக தரப்பட்ட செய்தி:
சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. ஆனால், ஆப்கன் அணி பாகிஸ்தானிடமும், வங்கதேசத்திடமும் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது. இதனால், அந்த அணிக்கு இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். இருப்பினும், இந்தப் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மிகப்பெரிய ட்விஸ்ட்டாக கேப்டன் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தோனி டாஸ் வீச அழைக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, 696 நாட்கள் கழித்து, சர்வதேச போட்டி ஒன்றில் தோனி டாஸ் வீசிய நிகழ்வு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இப்போட்டி கேப்டனாக தோனியின் 200வது போட்டியாக அமைந்தது.
மேலும், இப்போட்டியில் லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Asia Cup 2018: India vs Afghanistan Live Cricket Score: இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ நீங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் கண்டுகளிக்கலாம்.
மேலும் படிக்க: இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியை எங்கு? எப்படி காணலாம்?