Asia Cup 2018: India vs Bangladesh Final: ஆசிய கோப்பை 2018 இறுதிப் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, இந்தியா ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது. கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாத அளவுக்கு நடந்த பரபரப்பான ஆட்டம் இது! ரசிகர்களை இருக்கையின் நுனியில் தள்ளிய அந்த நிமிடங்களை நேரம் வாரியாக தொகுப்பாக இங்கு காணலாம்!
ஆசிய கோப்பை 2018 போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இவற்றுக்கு இடையே நடைபெற்ற மோதல்களில் இந்தியா 2 வெற்றி, ஒரு டை மூலமாக முதல் அணியாக இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது.
வங்கதேசம் அணி, சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றதன் மூலமாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆசிய சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நேற்று (செப்டம்பர் 28) துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 48.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 49.6வது பந்தில் 223 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று, ஆசிய கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் பரபரப்பான நிகழ்வுகளை நேரம் வாரியாக இங்கு காணலாம்!
Asia Cup 2018: India vs Bangladesh Live Score: ஆசிய கோப்பை 2018, இந்தியா-வங்கதேசம் லைவ் ஸ்கோர்
01: 47 AM: ஆட்ட நாயகன் விருது லிட்டன் தாஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது ஷிகர் தவானுக்கு அளிக்கப்பட்டது.
01:45 AM: அதிகமுறை ஆசிய கோப்பை வென்ற அணிகள்,
இந்தியா - 7
இலங்கை - 5
பாகிஸ்தான் - 2
01: 23 AM: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. மஹ்மதுல்லா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்தியா லெக் பைஸ் மூலம் ஒரு ரன் எடுத்து வென்றது. இதன் மூலம், 7வது முறையாக இந்தியா ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
India need six from the last over to win the Asia Cup!
Can they do it?#INDvBAN LIVE ????https://t.co/N0RVppXoLg pic.twitter.com/Ujm6BeqJMz
— ICC (@ICC) September 28, 2018
01:14 AM: 49 ஓவர்கள் முடிவில் இந்தியா 217-7. 6 பந்தில் 6 ரன்கள்
01:10 AM: முஸ்தாபிசூரின் முதல் பந்திலேயே, புவனேஷ் குமார் அவுட். 21 ரன்களில் அவர் வெளியேறினார். இதனால், ஆட்டத்தில் கூடுதல் டென்ஷன்.
01:08 AM: 48 ஓவர்கள் முடிவில், இந்தியா 214-6. வெற்றிப்பெற இன்னும் 9 ரன்கள் தேவை.
01:04 AM: ருபெல் ஓவரில், ஜடேஜா 23 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், ஆட்டத்தில் மேலும் உச்சக்கட்ட டென்ஷன் நிலவுகிறது.
01:00 AM: முஸ்தாபிசூர் ரஹ்மான் வீசிய 47வது ஓவர் முடிவில், இந்தியா 210-5 ரன்கள். வெற்றிக்கு தேவை 13 ரன்கள்.
12:57 AM: 46வது ஓவர் முடிவில், இந்தியா 205-5. இன்னும் 18 ரன்கள் தேவை.
12:54 AM: வாவ்..வாவ்.. வாவ்.. .ருபெல் ஓவரின் 3வது பந்தில், புவனேஷ் ஒரு நேர் சிக்ஸ்.
12: 51 AM: மஹ்மதுல்லா வீசிய 45வது ஓவர் முடிவில் இந்தியா 197-5. வெற்றிப்பெற இன்னும் 30 ரன்கள் தேவை.
12:46 AM: 44 ஓவர்கள் முடிவில் இந்தியா 191-5. வெற்றிப்பெற இன்னும் 32 ரன்கள் தேவை.
12:43 AM: கடைசி ஓவரை வீசுகிறார் கேப்டன் மோர்டசா.
12:39 AM: 43 ஓவர்கள் முடிவில் இந்தியா 187-5. வெற்றிப்பெற இன்னும் 36 ரன்கள் தேவை.
12:34 AM: பெரிதாக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், ஜடேஜாவும், புவனேஷும் சிங்கிள்ஸ், டூஸ் எடுப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இதுதான் இப்போது தேவையும் கூட. 42 ஓவர்கள் முடிவில், இந்தியா வெற்றிப் பெற 37 ரன்கள் தேவை.
12:28 AM: கொஞ்சம் கூட ரன் எடுக்க விடாமல், இந்தியாவை வங்கதேச பவுலர்களை படாதபாடுபடுத்தி வருகின்றனர். ஜடேஜா மட்டும் தான் அணியில் மீதமிருக்கும் பேட்ஸ்மேன்.
12:22 AM: தோனி இறுதிவரை நின்று மேட்சை முடித்துக் கொடுக்காமல் சென்றதால், 1587வது முறையாக, தோனி அணிக்கு தேவையா? என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர் இணையவாசிகள்.
12:16 AM: கேதர் ஜாதவ் டிரெஸ்சிங் ரூமுக்கு அழைக்கப்பட்டிருக்கிற்றார். இதனால், புவனேஷ் குமார் களத்தில் இறங்கியுள்ளார். இருக்கு... இன்னைக்கு என்னமோ இருக்கு!
12:13 AM: தசைப் பிடிப்பால் ரன் ஓட முடியாமல் தவிக்கும் கேதர் ஜாதவிற்கு இந்திய பெவிலியனில் இருந்து மெசேஜ் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
12:08 AM: தோனியைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா களத்தில் இறங்கியுள்ளார். இந்தியாவுக்கு இன்னும் பெரிய இலக்கு காத்திருக்கிறது.
12:05 AM: அடக்கடவுளே! முஸ்தாபிசூர் ஓவரில் தோனி அவுட். வெளியே சென்ற பந்தை முத்தமிட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்னில் அவுட்டானார் மகேந்திர சிங் தோனி.
12:00 AM: மீண்டும் கேதர் ஜாதவின் காலில் பிரச்சனை. ரன்கள் ஓட முடியாமல் தவிப்பதை காண முடிகிறது. தோனிக்கு பிரஷர் மேலும் அதிகமாகும் என்பதை மறுக்க முடியாது.
11:54 PM: 34வது ஓவர் முடிவில் இந்தியாவுக்கு தேவையான இலக்கு 69 ரன்கள். கேதர் ஜாதவுக்கு பின்னங்கால் சதை பிடிப்பு. எப்போ பார்த்தாலும், அவருக்கு காலில் பிரச்சனை தான்.
11: 51 PM: மீண்டும் தாக்குதல் நடத்த முஸ்தாபிசூர் வந்துள்ளார்.
11:47 PM: டென்ஷன் நிறைந்த ஆட்டத்தில், கேதர் ஜாதவ் ஒரு சிக்ஸர் அடித்து சற்று ரசிகர்களை இளைப்பாற்ற, தோனி, ருபெல் ஹொசைனின் ஒரு ஓவரை மெய்டன் செய்துள்ளார்.
11:33 PM: தினேஷ் கார்த்திக் அவுட். மஹ்மதுல்லாவின் மிகச் சாதாரணமான பந்தை, ஃபிளிக் செய்ய முயன்று கிளீன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அவர் அடித்த ரன்கள் 37. இந்த யுகத்தின் மிக தெளிவான எல்பிடபிள்யூ இதுவாகத் தான் இருக்க முடியும்.
11:15 PM: தோனியும், கார்த்திக்கும் பந்தை ரொட்டேட் செய்வதில் கில்லாடிகள். இந்த பார்ட்னர்ஷிப்பின் பெரிய பலமே இதுதான். இந்தியாவுக்கு அது கைக்கொடுக்குமா?
10:52 PM: தோனியும், தினேஷ் கார்த்திக்கும் தான் இப்போது இந்தியாவுக்கு உள்ள துருப்புச் சீட்டுகள். இந்த சீட்டு கலைந்தால், இந்தியாவை கரை சேர்ப்பது கடினமே.
10:32 PM: கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட். 48 ரன்னில் ருபெல் ஓவரை, ஷார்ட் பாலில் புல் ஷார்ட் அடித்த ரோஹித், இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கப்சிப்.
Bangladesh continue to fight, but India cross 100 - it's all to play for!
The huge wicket of Rohit Sharma has fallen for 48. Now MS Dhoni and Dinesh Karthik are together in the middle. #INDvBAN LIVE ????https://t.co/N0RVppXoLg#AsiaCup pic.twitter.com/91ZYAnDq4v
— ICC (@ICC) September 28, 2018
10:16 PM: 14 ஓவர்களுக்குள் 5 பவுலர்களை பயன்படுத்தி, இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறார் வங்கதேச கேப்டன் மோர்டசா.
10:00 PM: வங்கதேச பவுலர்கள் தொடர்ந்து இந்திய அணிக்கு தீவிர அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர். முதல் 10 ஓவருக்குள்ளாகவே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருப்பது தான் பெரிய மைனஸ். இதிலிருந்து மீண்டு வருவது என்பது, அதுவும் வங்கதேச பவுலிங்கிற்கு எதிராக சற்று கடினம் தான். பந்துகளை வீணாக்காமல் ரொட்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இறுதியில் தோனி இருக்கிறார்.. பார்த்துக் கொள்வார் என இம்முறை நினைக்க முடியாது.
09:45 PM: மோர்டசா பந்தில் இரண்டு ரன்னில் அவுட்டானார் அம்பதி ராயுடு. இந்தியா இப்போது மிகப்பெரும் சிக்கலில் உள்ளது.
09:30 PM: நூருல் இஸ்லாம் ஓவரில் 15 ரன்னில் தவான் அவுட்டானார். உடனே, நூருல் காலத்திலேயே பாம்பு ஆட்டம் போட, ஒட்டுமொத்த வங்கதேச ரசிகர்களும் பாம்பு டான்ஸ் போட்டு தவானை வழியனுப்பினர்.
09:15 PM: முதல் ஓவரை ஸ்பின்னர் மெஹிதி ஹசன் கொண்டு ஆட்டத்தை துவக்கியுள்ளது வங்கதேசம். எந்த நேரத்திலும் விக்கெட் விழும் அபாயம் இருக்கிறது. திக் திக் நிமிடங்களுடன் இந்தியா பேட்டிங்!!
08:27 PM: வங்கதேசத்தை, இந்திய பவுலர்கள் 222 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். இத்தனைக்கும் முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 120 ரன்கள் சேர்த்தது. இதில் லிட்டன் தாஸின் சதம் வேறு. மூன்று வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளனர்.
08:15 PM: நஸ்முல் இஸ்லாம் ரன் அவுட்!. அவர் ரன் அவுட்டாகவில்லை. சௌமியா சர்க்காரால் ரன் அவுட் ஆக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
07:54 PM: மோர்டசா ஸ்டெம்பிங்! இருந்தாலும் எங்க தல மோர்டசாவுக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? டேஞ்சரை பின்னாலயே வச்சுக்கிட்டு இறங்கி வந்து அடிச்சாரு பாரு!
07:45 PM: லிட்டன் தாஸ் ஸ்டெம்பிங்.. தோனியின் 'எட்ஜ் சீட்' ஸ்டெம்பிங்கில் 121 ரன்னில் அவுட்டானார் லிட்டன் தாஸ்.
07:33 PM: உங்களுக்கு ஒரு பீதியான தகவலை செல்றோம் கேளுங்க.. ஐசிசி தொடரில் இந்தியா இதுவரை தோற்ற 9 ஃபைனல்களிலும் எதிரணியின் ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் 70 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறது. இந்தப் போட்டியிலும் தொடக்க வீரர்கள் 70 + பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அப்படியெனில் இன்று இந்தியா அந்த எமகண்டத்தை தகர்க்குமா?
07:24 PM: பந்தை பிடிக்கிறியா? இல்லை கீப்பரை மாத்தட்டுமா? (குல்தீப் மைண்ட் வாய்ஸ்).. அதாவது, 35.4வது ஓவரில் கேதர் ஜாதவ் வீசிய பந்தை பேக்வேர்ட் ஸ்கொயரில் அடித்துவிட்டு லிட்டன் ரன் ஓட, கண்களை மூடிக் கொண்டு சௌமியா பேட்டிங் பக்கம் வந்துக் கொண்டிருந்தார். தோனி கதற, குல்தீப் வேகமாக த்ரோ கொடுத்தும், தோனி பந்தை வாங்கி தவறவிட, நல்ல ரன் அவுட் சான்ஸ் மிஸ்.
07: 07 PM: அட... அட... அட... குல்தீப் ஓவரில் மஹ்மதுல்லா தூக்கி அடித்த பந்தை சிக்ஸ் லைனில் 'ஐபிஎல்' ஸ்டைல் கேட்ச் பிடித்து அசத்தினர் பும்ரா. 4 ரன்னில் மஹ்மதுல்லா அவுட்.
07:00 PM: வங்கதேச அணியின் செயல்பாடு
01-10 ஓவர்கள்: 65/0 (7 X 4s; 2 X 6s)
11-20 ஓவர்கள்: 51/0 (6 X 4s)
21-30 ஓவர்கள்: 31/4 (2 X 4s)
06:54 PM: அதேசமயம், லிட்டன் தாஸ் 87 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
06:45 PM: வாவ்! மிகப்பெரிய விக்கெட்! வங்கதேச பிக் ஃபிஷ் முஷ்பிகுர் ரஹீமை 5 ரன்னில் வெளியேற்றினார் கேதர் ஜாதவ்.
06:35 PM: அடுத்த விக்கெட்! இம்ருல் கெய்ஸ்-ஐ வெளியேற்றினார் சாஹல். சாஹலின் லெக் பிரேக் பவுலிங்கை தவறாக கணித்து எல்பிடபில்யூ ஆனார் கெய்ஸ்.
06:20 PM: விக்கெட்! 20.5வது ஓவரை வீசிய கேதர் ஜாதவ் ஓவரில், அம்பதி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் மெஹிதி ஹசன் அவுட்டானார். ஒருவழியாக இந்தியா முதல் விக்கெட்டை அறுவடை செய்துள்ளது.
India have a breakthrough!
Kedar Jadhav dismisses Mehidy Hasan for 32 and @BCBtigers are 120/1 after 21 overs! #INDvBAN
FOLLOW LIVE????????https://t.co/N0RVppXoLg pic.twitter.com/l6JW2ZbELi
— ICC (@ICC) September 28, 2018
06:10 PM: நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் - மெஹிதி ஹசன்.
06:00 PM: எல்லாம் தலைகீழாக நடந்துக் கொண்டிருக்கிறது. வங்கதேசம் சிறப்பாக ஆடினாலும், பொறுமையை கடைப்பிடித்து வருகிறது. தோனி தனது அமைதியை இழந்து, சில காரணங்களுக்காக அம்பயரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
05:45 PM: லிட்டன் தாஸ் அரைசதம்... ஜடேஜா ஓவரில் அடுத்த பந்தே அவர் கொடுத்த எளிய கேட்சை சாஹல் தவற விட்டுள்ளார்.
Bangladesh have got off to a flyer in the Asia Cup final!
They are 65/0 after the first ten overs with Liton Das already racing onto 47. #INDvBAN
FOLLOW LIVE????????https://t.co/N0RVppXoLg pic.twitter.com/W3f7HFIh3j
— ICC (@ICC) September 28, 2018
05:33 PM: சரியா போச்சு!! அரை சதம் அடித்த வங்கதேச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்.
05:25 PM: அதாகப்பட்டது சமூகம் என்ன சொல்லுதுன்னா.. இன்றைய போட்டியில் ஒப்பனராக களமிறங்கியுள்ள மெஹிதி ஹசன், (FC/ListA/T20s) என அனைத்து கிரிக்கெட்டிலும், முதன் முறையாக இன்று தான் ஒப்பனிங் இறக்கப்பட்டிருக்கிறாராம். உஷாரய்யா உஷாரு!!
05:10 PM: தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் கூட்டணி நேர்த்தியாக ஆடுவது போல் தெரிகிறது. பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்று இருக்கிறார்களோ? ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் 13 ரன்கள் சேர்த்திருக்கிறது. இந்த தொடரில் வங்கதேசத்தின் பெஸ்ட் ஒப்பனிங் இதுதான்.
04:55 PM: இறுதிப் போட்டியில் வங்கதேசத்தின் செயல்பாடுகள் :
vs SL, Dhaka, 2009: இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (Tri-series)
vs Pakistan, Dhaka, 2012: இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (Asia Cup ODI)
vs India, Dhaka, 2016: எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (Asia Cup T20I)
vs SL, Dhaka, 2018: 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (Tri-series)
vs India, RPS, 2018: நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி (Nidahas Trophy)
04:35 PM: டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஐந்த வீரர்களும் (ரோஹித், தவான், பும்ரா, புவனேஷ், சாஹல்) அணிக்கு திரும்பியுள்ளனர்.
3:50 PM : இந்திய வீரர்கள் வங்கதேச அணியை எதிர்கொள்ள ஸ்டேடியம் வந்து சேர்ந்தனர். அந்த வீடியோ காட்சிகள் இங்கே:
From the Driver's seat ????️: #TeamIndia depart for the grand finale of #AsiaCup against ???????? #INDvBAN ???? pic.twitter.com/YV2usS6ICH
— BCCI (@BCCI) 28 September 2018
3:45 PM: இந்திய அணி தோல்வியை தழுவாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து ஒரு வீடியோ தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதை இங்கே காணலாம்.
It's Match Day and the #MenInBlue are all set to take on the @BCBtigers in the Final of #AsiaCup2018.
???????? vs ???????? Who are you backing to lift the ???? today?
Live action starts at 5 PM IST. Follow the game here - https://t.co/lXRUQlZhXu pic.twitter.com/6gCRPbBkky
— BCCI (@BCCI) 28 September 2018
3:25 PM: வங்கதேச வீரர் முஷிபுர் ரஹிம் கூறுகையில், ‘இங்கு வரும்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை இலக்காக வைத்திருந்தோம். இப்போது அதை செய்திருக்கிறோம். எங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தினால், இந்தியா தோற்கடிக்க முடியாத அணி அல்ல. அவர்கள் உலகை வெல்லும் அணிதான். ஆனாலும் அவர்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்’ என்றார்.
3:20 PM : இந்திய் அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 11 பேர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
3:15 PM: இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் வங்கதேச அணி வீரர்கள் இதை கவனத்தில் கொள்ளமாட்டார்கள் என்றும் பிரபல விமர்சகர் ஹர்ஷா போக்ளே கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.