பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆஸம் தனது இந்தியா - பாகிஸ்தான் கலந்த டி20 அணியை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
ஹர்ஷா போக்ளேவுடன் பேசிய பாபர் ஆஸம், தனது அணியில் ஹர்திக் பாண்டியா, ஷோயப் மாலிக் இருவரையும் ஆல் ரவுண்டர்களாகத் தேர்வு செய்துள்ளார்.
அணி விவரம்:
ரோஹித் சர்மா, பாபர் ஆஸம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி, ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமிர், ஷாஹின் அஃப்ரீடி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.
நோ ஷேவாக்... ஒய் ஜடேஜா? - இது வாசிம் ஜாஃபரின் 'ஆல் டைம்' இந்திய அணி XI பஞ்சாயத்து
இதில், ரோஹித் - பாபர் தான் ஓப்பனர்ஸ். அதாவது, ரோஹித் அதிரடி காட்ட, பாபர் ஸ்லோ அன்ட் ஸ்டெடி மோடில் எதிரணி பவுலர்களை டயர்டாக்குவதே பிளான் போல.
ஒன் டவுன் நம்ம கோலி. வழக்கம் போல ஒரு அரைசதமோ, சதமோ விளாசப்படும்.
அடுத்து சோயப் மாலிக். இங்கு தான் பிரச்சனையே. சாரு, 'கன்சிஸ்டன்சி என்ன விலை?' அப்படின்னு அடிக்கடி கேட்பாப்ள. ஸோ, இந்த விக்கெட், அப்படியும் இல்லாம, இப்படியும் இல்லாம ஒரு பொதுவான ரவுண்டா இருக்கும்-னு வச்சுக்கலாம்.
அடுத்து தல.... தல இல்லாத ஆட்டம் இனி இந்த உலகத்தில் உண்டோ!!
பெறவு ஹர்திக் பாண்ட்யா... நல்ல ஆப்ஷன் தான். ஆனா, அண்ணி இப்போ தான் மாசமாகி இருக்காங்க. ஸோ, ஆள் விளையாடுவது டவுட்டே!!
டேரன் சமி நிறவெறி புகார் - 6 வருடங்களுக்கு பிறகு 'இன்ஸ்டா' ஆதாரத்தில் சிக்கிய இஷாந்த் ஷர்மா
வேகப்பந்துவீச்சில் ஒரே இந்திய ஆப்ஷன், பும்ரா மட்டுமே. அது போல, ஸ்பின் செக்ஷனில் குல்தீப்புக்கு இடம் கொடுத்திருக்காப்ள.
எப்படியும் உலக அணிக்கு டஃப் கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“