கால்பந்து உலகில் 7-1 எனச் சொல்லி முடிக்கும் முன், 2014 உலகக் கோப்பையில் பிரேசில் Vs ஜெர்மனி அணிகள் மோதிய போட்டிதான் வெறித்தன ரசிகர்களின் நினைவுக்கு வரும். ஆனால், இந்த நினைவை தகர்த்திருக்கிறது சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் Barcelona கிளப்புக்கு எதிராக பேயர்ன் மியூனிச் அணியின் 8-2 கோல் வெற்றி.
பத்து கோல்கள் அடிக்கப்பட்ட ஒரு போட்டியில் Greatest of All Time (GOAT) எனப் பெயரெடுத்த அந்த வீரனால் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
120 ஆண்டுகளாக கட்டிக்காத்த நல்ல பேரை, 90 நிமிடத்தில் கெடுத்துவிட்டது பார்சிலோனா.
ஆம்! ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதியில் பார்சிலோனாவை 8-2 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த பேயர்ன் மியூனிக் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம், யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றில் முதல்முறையாக 8 கோல் அடித்து வென்ற அணியாக பேயர்ன் மியூனிக் வரலாறு படைத்துள்ளது. அதேசமயம், பார்சிலோனா அணி 1951ம் ஆண்டுக்கு பிறகு 6 கோல் வித்தியாசத்தில் தோற்றது இதுவே முதல்முறையாகும்.
நீல மேகம் இனி மஞ்சள் மேகம் – ‘விண்டேஜ்’ தோனியின் அதகளம் சிஎஸ்கேவில் ஆரம்பம்!
சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 13 முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக ரியல் மாட்ரிட் அணி உள்ளது. பேயர்ன் அணி 12வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி 2வது இடத்தில் உள்ளது. ஸ்பெயினின் லா லிகா தொடரின் 2020 சீசனில் 2வது இடத்தை பிடித்த Barcelona, சாம்பியன்ஸ் லீக் தொடரில் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது.
பார்சிலோனா சறுக்கலுக்கு காரணம் என்ன?
போட்டியின் போது பார்சிலோனா உற்சாகத்துடன் தான் களம் கண்டது. அதற்கு ஏற்ப பந்து பெரும்பாலும் பார்சிலோனா வீரர்கள் வசம்தான் இருந்தது. ஆனால், பந்தை துல்லியமாகக் கடத்துவதில் பேயர்ன் அணி சிறப்பாக செயல்பட்டது.
அணியின் டிஃபன்ஸ் படுமோசம். அதை நிச்சயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆட்டத்தின் 4வது நிமிடம் அனுபவ வீரர் தாமஸ் முல்லர், முதல் கோலை அடித்து பேயர்ன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார். அடுத்து 7வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் சுவாரெஸ் கோல் நோக்கி அடித்த பந்தை, பின்கள ஆட்டக்காரரான டேவிட் தடுக்க முயன்ற போது சுய கோலாக மாறியதால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. அதன்பிறகு ஆட்டம் வேகம் பிடிக்க, பேயர்ன் அணியின் இவான் பெரிசிக் 21வது நிமிடத்திலும், செர்ஜ் கினாபி 27வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர்.
மெஸ்ஸி மீதான ‘ஒன் மேன் ஷோ’ விமர்சனம்
ஒருமுறை டீகோ சிமியோன் சொல்லியிருப்பார், “உலகின் மிகச் சிறந்த வீரர் Messi என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், என்னை ஓர் சுமாரான அணியை வழிநடத்தச் சொல்லி, அந்த அணிக்கு யாரை வாங்குவீர்கள் எனக் கேட்டால், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தேர்வு செய்வேன்” என்று சொல்லியிருப்பார். ஏனெனில், மெஸ்ஸிக்கு தன்னைச் சுற்றி இயங்கும் அணி தேவை. ரொனால்டோ, எந்தவோர் அணியாக இருந்தாலும் தன் தரத்தில் இயங்குவார்.
‘தல’ அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த ‘சின்ன தல’
எல்லா அணிகளும் சூப்பர் ஸ்டார்களை வைத்து வென்று விடுவதில்லை. ஒருவரை ஒருவர் காம்ப்ளிமென்ட் செய்து, ஒரு டீமாக ஆடும் அணிகள்தான் வெற்றி பெறுகின்றன. ஆனால், இங்கு மெஸ்ஸி மீது வைக்கப்படும் விமர்சனம், ‘மற்ற 9 ஆன்ஃபீல்ட் வீரர்களும் மெஸ்ஸியின் ஸ்டைலோடு ஒத்துப்போய் ஆடவேண்டும். Messi அதற்கு ஏற்றதுபோல் ஆடமாட்டார்’ என்பதே.
இனியும், சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், ஒன் மேன் ஷோ என்று சொல்லிக் கொண்டிருந்தால் பார்சிலோனா நிலைமை தான் என்கின்றனர் கால்பந்து விமர்சகர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil