பிக்பேஷ் லீக் தொடரில், வீரர் ஒருவர் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பிக்க செய்த செயலால் மோசமான காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.
Advertisment
ஆஸ்திரேலியாவின் பிரபல பிக்பேஷ் லீக் தொடரில், நேற்று மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியும், ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணியும் மோதின.
இதில், ஹோபர்ட் பவுலர் நாதன் எல்லிஸ் வீசிய பந்தில் ஸ்ட்ரெய்ட் மிட் ஆஃப்-ல் அடித்த மெல்போர்ன் பேட்ஸ்மேன் சாம் ஹார்ப்பர், சிங்கிள் எடுக்க மின்னல் வேகத்தில் ஓடினார்.
அப்போது, பவுலர் ஸ்டம்புக்கு அருகில் வந்து குனிந்து நிற்க, அவர் மீது மோதாமல் இருக்க ஹார்ப்பர் அவரை தாண்டி எகிறி கீழே விழுந்தார். இதில், அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
நல்லவேளையாக ஹார்பர் களத்தில் இருந்து எழுந்துவிட்டார். ஆனால், நிதானமின்றி காணப்பட்டதால், அணியின் தலைமை மருத்துவர் ஆலோசனைப்படி அவர் பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் விழுந்த அந்த நொடி சக வீரரில் இருந்து எதிரணி வீரர்கள் வரை அனைவரும் பதறிவிட்டனர்.