ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க பேட்ஸ்மேன் எடுத்த ரிஸ்க் – பதறிய எதிரணி வீரர்கள் (வீடியோ)

பிக்பேஷ் லீக் தொடரில், வீரர் ஒருவர் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பிக்க செய்த செயலால் மோசமான காயத்துக்கு உள்ளாகியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல பிக்பேஷ் லீக் தொடரில், நேற்று மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியும், ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணியும் மோதின.  இதில், ஹோபர்ட் பவுலர் நாதன் எல்லிஸ் வீசிய…

By: January 22, 2020, 8:55:38 PM

பிக்பேஷ் லீக் தொடரில், வீரர் ஒருவர் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பிக்க செய்த செயலால் மோசமான காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல பிக்பேஷ் லீக் தொடரில், நேற்று மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியும், ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணியும் மோதின.

இதில், ஹோபர்ட் பவுலர் நாதன் எல்லிஸ் வீசிய பந்தில் ஸ்ட்ரெய்ட் மிட் ஆஃப்-ல் அடித்த மெல்போர்ன் பேட்ஸ்மேன் சாம் ஹார்ப்பர், சிங்கிள் எடுக்க மின்னல் வேகத்தில் ஓடினார்.

Ind vs Nz ODI series 2020: ப்ரித்வி ஷாவுக்கு அடித்த ஜாக்பாட் – சஞ்சு சாம்சனுக்கு எதிர்பாராத வாய்ப்பு

அப்போது, பவுலர் ஸ்டம்புக்கு அருகில் வந்து குனிந்து நிற்க, அவர் மீது மோதாமல் இருக்க ஹார்ப்பர் அவரை தாண்டி எகிறி கீழே விழுந்தார். இதில், அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

நல்லவேளையாக ஹார்பர் களத்தில் இருந்து எழுந்துவிட்டார். ஆனால், நிதானமின்றி காணப்பட்டதால், அணியின் தலைமை மருத்துவர் ஆலோசனைப்படி அவர் பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் விழுந்த அந்த நொடி சக வீரரில் இருந்து எதிரணி வீரர்கள் வரை அனைவரும் பதறிவிட்டனர்.

‘நான் இந்தியாவுக்கு சென்று விளையாடினால் என்னை தேர்வு செய்வார்களா?’ – பாக்., வீரர் கம்ரான் அக்மல் வேதனை

தற்போது ஹார்ப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Bbl 2020 sam harper suffers a massive blow video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X