‘இதுக்கு பேரு கேட்ச்சா?’ அல்லது ‘இதுவும் கேட்ச்சா?’ – பிக்பேஷ் கேட்ச் இப்போது பஞ்சாயத்து வரை…

‘இது கேட்ச்சா? இதுக்கு பேரு கேட்ச்சா? இது எப்படி யா கேட்ச்சு? அடேங்கப்பா! என்னா கேட்ச்சு’ என்று ஓவ்வொரு கைகளும் ஒவ்வொரு விதமாக பிக் பேஷ் லீக் தொடரில், மேட் ரென்ஷா பிடித்த இந்த கேட்ச் பற்றி சமூக தளங்களில் கமெண்ட் செய்து எழுதி வருகிறது. IND vs…

By: January 10, 2020, 4:45:22 PM

‘இது கேட்ச்சா?

இதுக்கு பேரு கேட்ச்சா?

இது எப்படி யா கேட்ச்சு?

அடேங்கப்பா! என்னா கேட்ச்சு’

என்று ஓவ்வொரு கைகளும் ஒவ்வொரு விதமாக பிக் பேஷ் லீக் தொடரில், மேட் ரென்ஷா பிடித்த இந்த கேட்ச் பற்றி சமூக தளங்களில் கமெண்ட் செய்து எழுதி வருகிறது.

IND vs SL 3rd T20 Live Score: யப்பா ஏதாச்சும் டஃப் கொடுங்கப்பா; ரொம்ப மொக்கையா இருக்கு!

https://youtu.be/RClIRPQ7l5E

எப்புடி நம்ம ஆளு கேட்ச்சு!??

நேற்று(ஜன.9) பிரிஸ்பேன் ஹீட் – ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில், ஹோபர்ட் அணி வீரர் மேத்யூ வேட் 46 பந்துகளில் 61 ரன்கள் அடித்திருந்த போது, பென் கட்டிங் ஓவரில், சிக்ஸ் அடிக்க முயன்ற போது தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

முதலில் இதற்கு அவுட் தர யோசித்த மூன்றாவது அம்பயர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பிறகு அவுட் கொடுத்துவிட்டார்.

எனினும், இது கேட்ச்சே அல்ல என்று ஒரு தரப்பினரும், யோவ் இது செம கேட்ச்சுயா என்று மற்றொரு தரப்பினரும் சமூக தளங்களில் மல்லுக்கட்டி வருகின்றனர்.


குறிப்பாக, நியூசிலாந்தின் ஜிம்மி நீஷம், ஜேம்ஸ் டெய்லர் ஆகியோர் அம்பயரின் இந்த அவுட் தீர்ப்பை விமர்சித்துள்ளனர்.

’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Bbl matt renshaw controversial catch video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X