Devendra Pandey
உலகின் மிகப் பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியம், கடந்த 10 மாதங்ளுக்கும் மேலாக உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை இதுவரை செலுத்தவில்லை.
பி.சி.சி.ஐ.யின் 27 elite ஒப்பந்த வீரர்கள், கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து காலாண்டு தவணைகளில் முதல் தொகையை இன்னும் பெறவில்லை. டிசம்பர் 2019 முதல் இந்திய தேசிய அணி விளையாடிய இரண்டு டெஸ்ட், ஒன்பது ஒருநாள் மற்றும் எட்டு டி 20 ஆட்டங்களுக்கான போட்டிக் கட்டணத்தையும் வாரியம் வழங்கவில்லை.
கிரேடு ஏ + கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் ஆண்டுக்கு ரூ .7 கோடி பெறுகிறார்கள், ஏ, பி மற்றும் சி கிரேடுகளில் உள்ள மற்ற வீரர்களுக்கு முறையே ரூ .5 கோடி, ரூ .3 கோடி மற்றும் ரூ .1 கோடி கிடைக்கும். ஒவ்வொரு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான போட்டி கட்டணம் முறையே ரூ .15 லட்சம், ரூ .6 லட்சம் மற்றும் ரூ .3 லட்சம் ஆகும்.
360 டிகிரியில் ஒருவர் பந்து வீச முடியுமா? செய்து காட்டிய இந்திய வீரர் (வீடியோ)
பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள கடைசி இருப்புநிலைக் கணக்கின்படி, 2018 மார்ச் மாத நிலவரப்படி, ரூ .2,992 கோடி நிலையான வைப்புத்தொகை உட்பட, ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு ரூ .5,526 கோடியாக இருந்தது. ஏப்ரல் 2018 இல், பி.சி.சி.ஐ ஸ்டார் டிவியுடன் ரூ .6,138.1 கோடி மதிப்புள்ள ஐந்தாண்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆயினும், பி.சி.சி.ஐ. ஒப்பந்த கிரிக்கெட் வீரர்களில் எட்டு கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு 10 மாதங்களில் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த இந்திய எக்ஸ்பிரஸின் மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கு பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் பதிலளிக்கவில்லை.
வாரியத்திற்கு டிசம்பர் முதல் தலைமை நிதி அதிகாரி இல்லை, கடந்த மாதம் முதல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பொது மேலாளர் (கிரிக்கெட் செயல்பாடுகள்) இல்லை. "முந்தைய நிர்வாகிகளின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாத பின்னர் இந்த முக்கியமான நிர்வாக பதவிகள் நிரப்பப்படவில்லை" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வாரியத்தின் அரசியலமைப்பின் படி பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் தங்கள் பதவிக் காலத்தை முடித்துவிட்டனர். அரசியலமைப்பில் "cooling off" பிரிவை ரத்து செய்வதற்காக வாரியம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது, இதனால் இருவரும் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை ஒப்பந்த invoice தயாரிக்குமாறு வாரியம் வீரர்களைக் கேட்டுக் கொள்ளும்.
“ஆனால் இந்த முறை, ஒப்பந்த கிரிக்கெட் வீரர்களின் புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. ஒப்பந்த பணத்தை நான்கு தவணைகளில் பி.சி.சி.ஐ செலுத்தியது, ஆனால் இப்போது பணம் எப்போது வரும் என்று எங்களுக்குத் தெரியாது. எந்த தெளிவும் இல்லை. கடந்த மாதம், பிப்ரவரியில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான invoice தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். பணம் இன்னும் வரவு வைக்கப்படவில்லை" என்று பெயர் கண்டிப்பாக பதிவிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் கிரிக்கெட் வீரர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒப்பந்தங்கள் அக்டோபரிலிருந்து தொடங்குகின்றன, இருப்பினும் இந்த முறை வீரர்களின் பட்டியல் ஜனவரி மாதத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.
அஷ்வினின் ‘ஆட்டத்துக்கு ரெடியா’ புதிய க்விஸ் ஷோ – பங்கேற்பது எப்படி?
first-class மற்றும் இதர age-group வீரர்களுக்கான கட்டணமும் தரப்படாமல் உள்ளது. ஜார்கண்ட், மும்பை, வங்காளம், ஜம்மு-காஷ்மீர், பாண்டிச்சேரி, பரோடா, ரயில்வே, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல உள்நாட்டு வீரர்கள் கடந்த சீசனில் விளையாடியதற்கு இதுவரை “முழு ஊதியமும்” செலுத்தப்படவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.
கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான வருடாந்திர மானியத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கும், தலா ரூ .10 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வலைத்தளம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil