அஷ்வினின் ‘ஆட்டத்துக்கு ரெடியா’ புதிய க்விஸ் ஷோ – பங்கேற்பது எப்படி?

உங்கள் அணியை www.sstamilcricketquiz.com என்ற இணையதளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்

நான் ஒன்று மட்டும் தான் போட்டியாளர்களுக்கு சொல்லவிரும்புகிறேன் – ஆட்டத்துக்கு ரெடியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ‘ஆட்டத்துக்கு ரெடியா’ எனும் கிரிக்கெட் க்விஸ் நிகழ்ச்சியின் மூலம் க்விஸ் மாஸ்டராக களமிறங்குகிறார்.

இந்நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். ஆகஸ்ட் 9 முதல் ஞாயிறு தோறும் பகல் 1 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் டாப் 5 ஸ்டைலிஷ் மனைவிகள்

இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய அஷ்வின், “எனக்கு க்விஸ் போட்டிகள் என்றாலே உற்சாகம் தான். தமிழ் ரசிகர்களிடம் அவர்கள் விரும்பும் கிரிக்கெட்டைப் பற்றி அவர்களிடமே கேள்விகள் கேட்கப் போகிறேன் என்பது மேலும் உற்சாகம். அனைவரும் ரசித்துப் பார்க்கும் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் 1 தமிழ் சேனலில், மக்களுடன் கிரிக்கெட் மூலமாக இணைவது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. இதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது இருக்கும் பற்றை நேரடியாக என்னால் உணர முடியும். சமூக வலைத்தளங்களில் நான் பல க்விஸ் போட்டிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். முதல் முறையாக ஒரு பிரபலாமான தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களை சந்திக்கப்போகிறேன். அதுவும் தமிழில் நடைபெறும் முதல் கிரிக்கெட் க்விஸ் இது தான் என்பது பெரிய விஷயம். நான் ஒன்று மட்டும் தான் போட்டியாளர்களுக்கு சொல்லவிரும்புகிறேன் – ஆட்டத்துக்கு ரெடியா?” என்றார்.

கொரோனா அமளிதுமளியில் ஐபிஎல் – ஏக கட்டுப்பாடுகளை அடுக்கும் பிசிசிஐ

இப்போட்டியில் பங்கு பெற முதலில் இரண்டு பேர் கொண்ட அணியாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் ஆரம்பச்சுற்றுகளில் வெற்றிப் பெற வேண்டும்.


ஆரம்பச் சுற்றுகளில் பங்கு பெற உங்கள் அணியை www.sstamilcricketquiz.com என்ற இணையதளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். க்விஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு 1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வெல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ravichandran ashwins aattathukku readya quiz show how to participate

Next Story
ஹர்திக் பாண்டியாவுக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com