இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) மொஹாலி போலீசாருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து, fantasy sports தளமும், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ஸ்பான்சருமான டிரீம் 11 ஆய்வுக்கு உட்பட்டது. போலி டி20 லீக் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்றதாகக் காட்டப்பட்ட Uva டி 0 லீக்கை நேரடியாக ஒளிபரப்பிய ஸ்ட்ரீமிங் வலைத்தளமான FanCode-ன் பங்களிப்பு பற்றி விசாரிக்கும்படி ஏ.சி.யு கேட்டுக் கொண்டது, ஆனால் உண்மையில் மொஹாலிக்கு அருகிலுள்ள சவாரா கிராமத்தில் உள்ள ஒரு உள்ளூர் கிளப் மைதானத்தில் தான் அந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. Uva என்பது இலங்கையில் உள்ள ஒரு மாகாணம். விளையாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸின் ஒரு பகுதியாக ஃபான்கோட் மற்றும் ட்ரீம் 11 உள்ளன.
கிரிக்கெட் வரை பாதிப்பை ஏற்படுத்திய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் - மண்டியிட்டு கண்டித்த வீரர்கள்!
மொஹாலி காவல்துறையினரை, தி இந்தியன் எக்ஸ்பிரஸால் சார்பில் தொடர்பு கொண்ட போது, ACU கூறுகையில்: “இந்த போலி விளையாட்டில் ட்ரீம் 11க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. பயன்படுத்தப்பட்ட Kits முந்தைய ட்ரீம் 11 போட்டியில் இருந்து வந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். எல்லா kits பின்புறத்தில் “ட்ரீம் 11” என்று இருந்தது - இவை போலியானதாக இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஆனால் இரண்டு பக்கங்களிலும் ட்ரீம் 11 அடையாளத்தை மறைக்கும் டேப் இருந்தது. இது விசித்திரமானது: யாராவது அதை மோசடி செய்து, இரு தரப்பினரும் அதைக் காட்ட விரும்பவில்லை என்றால், அவர்கள் முதலில் அச்சிட மாட்டார்கள்".
இதுபோன்ற ஒரு போட்டியை நடத்த FanCode-ஐ அணுகுவது எளிதல்ல என்பதால் அவர்களின் ஈடுபாட்டையும் நாங்கள் கேள்விக்குள்ளாக்குவோம்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்பு கொண்டபோது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் (ஏ.சி.யு) தலைவர் அஜித் சிங் ஷேகாவத், தங்களது பிரிவு மொஹாலி காவல்துறைக்கு தகவல்கள் வழங்கியதை உறுதிப்படுத்தினார். "அவர்கள் (ட்ரீம் 11) சம்பந்தப்பட்டிருப்பதாக நாங்கள் கூறவில்லை, ஆனால் ஃபான்கோட் சம்பந்தப்பட்டிருப்பதால், போட்டி எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும், இதை மறைப்பதற்கான திட்டத்தை தீட்டியவர் யார் என்பதை அறிய வேண்டும். இலங்கை வாரியம் அந்த போட்டிகளுக்கு எந்த அனுமதியையும் வழங்க மறுத்ததால், போலியாக சில ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஃபான்கோட் விசாரணைக்கு வழிகாட்டியாக இருக்கும். எனவே, அவர்களிடமும் விசாரிக்கும் படி நாங்கள் போலீசாரிடம் கேட்டுள்ளோம்" என்று சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
ஒரு ஃபான்கோட் செய்தித் தொடர்பாளர், "இந்த விஷயத்தில் அனைத்து விசாரணை அமைப்புகளுடனும்" ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக கூறினார். "போட்டிகளின் நேரடி ஒளிபரப்பிற்காக, கடுமையான செயல்முறையை ஃபான்கோட் பின்பற்றுகிறது. எங்கள் போட்டிகளில் எந்தவொரு போட்டிகளையும் / லீக்கையும் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு ஆணையம் / சங்கத்தால் போட்டி அங்கீகரிக்கப்படுகிறதா என்பதை நாங்கள் விடாமுயற்சியுடன் சரிபார்க்கிறோம்" என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஒரு அறிக்கையில், Fancode வலைத்தளம், “ஃபான்கோட் 2020 ஜூலை 6 ஆம் தேதி மும்பை காவல்துறைக்கு முறையான புகார் அளித்துள்ளது. Uva பிரீமியர் லீக் டி20 குறித்த இந்த முழு சம்பவத்திலும் நாங்கள் ஒரு வேதனைக்குரிய நிலையில் இருக்கிறோம், ஏனெனில் அமைப்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலி. அமைப்பாளர்கள் எங்களுக்கு Uva மாகாண கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி கடிதம் மற்றும் எஸ்.எல்.சி (இலங்கை கிரிக்கெட்) இன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியிலிருந்து ஒருமின்னஞ்சலை வழங்கினர், இது போட்டியை உறுதிப்படுத்தியது. ”
"போட்டியின் முதல் நாள், ஃபான்கோட் இரண்டு போட்டிகளை ஸ்ட்ரீம் செய்த பின்னர், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சட்டக் குழு எங்களை அணுகி, போட்டிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவித்தார். இந்த போட்டிகளை எங்கள் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதை உடனடியாக நிறுத்தினோம். நாங்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், எங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்கள் / சான்றுகள் மற்றும் விவரங்களை வழங்கியுள்ளோம், அவை விசாரணைக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் பணிபுரியும் எந்தவொரு மற்றும் அனைத்து விசாரணை நிறுவனங்களுக்கும் தகவல் / சான்றுகள் / ஆவணங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அக்தரை பார்த்து பயந்ததை சச்சின் ஒப்புக் கொள்ள மாட்டார்' - அப்ரிடி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஏ.சி.யு, மொஹாலி காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், அதன் இரண்டு அதிகாரிகள் - அலோக் குமார் மற்றும் அன்ஷுமன் உபாதயா நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் கூறப்பட்ட மேட்ச் பிக்ஸரும் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரும் ரவீந்தர் தண்டிவால் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய டென்னிஸ் போட்டியை நிர்ணயிக்கும் மோசடியில் ஆஸ்திரேலிய காவல்துறை அவரை குற்றவாளியாக அறிவித்தது.
சந்தேகத்திற்கிடமான மற்ற அம்சங்களில், இலங்கை நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட விளம்பர பதாகைகள் மற்றும் அவற்றில் அச்சிடப்பட்ட ‘UVA டி20’ ஸ்டம்புகள் ஆகியவை குறித்து போலீஸாரிடம் விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டது. வழக்கமாக அந்த இடத்தில் இந்தியக் கொடிகள் ஏன் காணப்பட்டன என்பதையும், வெளியாட்களை அந்த இடத்திலிருந்து விலக்கி வைக்க வெள்ளைத் தாள்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்பதையும் விசாரிக்க போலீசாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இடத்தின் உரிமையாளர்கள், தி ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் சங்கம், நடுவர்கள் மற்றும் வீரர்களின் பங்கு குறித்தும் ACU அறிக்கை கேள்வி எழுப்பியது. "ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன், வீரர்கள், நடுவர்கள் மற்றும் வர்ணனையாளர்களும் மோசடியில் ஈடுபட்டதாக நாங்கள் மேலும் மதிப்பிடுகிறோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.