WI and England players took a knee in support of the Black lives matter movement
WI and England players took a knee in support of the Black lives matter movement: மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை மின்னபோலீஸ் காவல்துறையினர் கொன்ற விவகாரம் விஷ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் கறுப்பினத்தவர்களுக்கு எதிராகவும், அடிமை முறையை உருவாக்கி ஆதரவு தந்த வெள்ளையின தலைவர்களின் சிலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு நாட்டுத்தலைவர்கள் இந்த கொடூர தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதும், கண்டனங்களை பதிவு செய்தும் வருகின்றனர். இந்நிலையில் கொரொனாவிற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தில் இங்கிலாந்திற்கும் வெஸ்ட் இண்டீஸ்ற்கும் இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி இன்று ஆரம்பமானது. 117 நாட்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று துவங்கிய போட்டிகள் மழையின் காரணமாக தாமதமாகவே போட்டி துவங்கியது. போட்டி துவங்கியதும் இரண்டு நாட்டு அணியினரும், அம்பெயர்களும் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மண்டியிட்டு ஒரு நிமிடம் நின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil