2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் நாக் அவுட் வாய்ப்பை காலி செய்யவே இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் தெரிவித்திருப்பதாக பாக்., முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சிகந்தர் பக்த் தெரிவிக்க விஷயம் விபரீதமானது.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் தான் அப்படிக் கூறவேயில்லை என்று பென்ஸ்டோக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிரெட்மில் உலக சாம்பியன்: 100 மைல் சாதனையை முறியடித்த அல்ட்ரா மராத்தான் வீரர்
தன் ட்விட்டர் தளத்தில் சிகந்தர் பக்த்துக்கு மறுப்பு தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், “உங்களால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாது, காரணம் நான் அப்படி கூறவேயில்லை. இதுதான் வார்த்தைகளைத் திரிப்பது, பரபரப்பு தலைப்பு என்பதாகும்.” என்று கூறியுள்ளார்.
28, 2020
இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை எதிர்த்து 31 ரன்களில் இந்தியா தோல்வியடைந்தது, ஆனால் இந்தியா நினைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றே பலருக்கும் தோன்றியது. தோனி மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
பென் ஸ்டோக்ஸ் எழுதிய ‘ஆன் ஃபயர்’ என்ற புத்தகம் இனிமேல்தான் வெளிவரப்போகிறது, இதில் ஒவ்வொரு போட்டியையும் பென்ஸ்டோக்ஸ் பகுத்தாய்ந்து எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், தோனியிடமிருந்தோ, அவரது பார்ட்னர் கேதர் ஜாதவ்விடம் இருந்தோ, போட்டியை வெற்றிகரமாக முடிப்பது தொடர்பாக எந்த நோக்கமும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, வெற்றி இன்னும் சாத்தியமாக இருக்கும்போது, நீங்கள் அடித்து நொறுக்க வேண்டும்.
28, 2020
எங்கள் முகாமில் தோனியின் விளையாடும் முறை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று ஒரு கோட்பாடு உள்ளது. இந்தியா ஆட்டத்தை வெல்ல முடியாவிட்டாலும், இந்தியாவின் ரன் விகிதம் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய அவர் அதை இறுதிவரை நேரம் எடுத்துக்கொள்கிறார்.
'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' - இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,
இறுதி ஓவரில் வரை களத்தில் நிற்பதன் மூலம், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பை அவர் தனக்கு தானே வழங்குகிறார். ஆனால் அவர் பொதுவாக ஒரு தோல்வி பெறும் நேரத்தில் கூட ஒரு இலக்கை அடைய முடிந்தவரை களத்தில் நிற்கவே விரும்புகிறார்.” என்று ஸ்டோக்ஸ் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil