இந்த சீசனுக்கான ஆஸ்திரேலியாவின் பிரபல பிக் பேஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பல சர்பிரைஸ், என்ஜாய் மொமன்ட்களை அள்ளி தெளித்தும் வருகிறது. ஐபிஎல்-லுக்கு நிகரான 'பரபரப்பு' சீரிஸ் இல்லையென்றாலும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்று உறுதியாக கூறலாம்.
Advertisment
இது ஒருபுறம் இருக்க, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருந்த ஏபி டி வில்லியர்ஸ், சமீபத்தில் தான் பிக்பேஷ் லீக் தொடரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தார். இதுவரை அவர் இத்தொடரில் ஒப்பந்தமானதே கிடையாது. பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.
இதனால், அவர் எப்படி விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை அவர் முழுவதும் வீணாக்கவில்லை. தொடக்க போட்டிகளில் சற்று தடுமாறிய டி வில்லியர்ஸ், கடந்த ஜன.25ம் தேதி பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 71 ரன்கள் விளாசி, 'ஒருவழியா பஸ் ஏறிட்டாப்ள' மூடுக்கு ரசிகர்களை கொண்டு வந்தார்.
Advertisment
Advertisements
இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஆறு சிக்ஸர்கள் தான் 'டி வில்லியர்ஸ்' பேக் டூ மூட் என்ற எண்ணத்தை உறுதி செய்திருக்கிறது. இதுவே வெறும் பவுண்டரியாக அடித்திருந்தால், அவரது ஃபார்ம் குறித்த சந்தேகம் அப்படியே இருந்திருக்கும்.
இருந்தாலும், இன்று (ஜன.27) மெல்போர்ன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் அவுட்டான விதம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னரான சமித் படேல், 'ஆக்ரோஷம் காட்டடி' பாடி லேங்குவேஜில் பேட்டிங் செய்து கொண்டிருந்த டி வில்லியர்ஸின் லெக் ஸ்டெம்புக்கு பந்தை வீசினார்.
லெக் ஸ்டெம்புக்கு பிட்ச் செய்தால் என்ன செய்வார் ஏபிடி.....? ஆங்... பந்து டீப் ஸ்கொயர் லெக்கிலோ, டீப் மிட் விக்கெட்டிலோ அலல்து மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்பதால் டீப் ஃபைன் லெக் அல்லது லாங் லெக்கிலோ விழுந்திருக்க வேண்டும் அல்லவா!!?
அதுதானே ஏபிடியின் காட்டடி தர்பார் வழக்கம்!!?
ஆனால், இன்றைய போட்டியில் அவரோ, பேட்டை தனது வழக்கமான ஃபோர்ஸில் சுழற்ற, டைமிங் மிஸ்ஸானது. இதனால் பந்து அவரது வெய்ஸ்ட்டில் பந்து ஆஃப் மற்றும் மிடில் ஸ்டம்ப்பை காலி செய்து பைல்ஸை எகிறச் செய்ய, ஏபிடி புலம்பிக் கொண்டே சென்றதை பார்க்க நமக்கே புதிதாக தான் இருந்தது.
டைமிங், ரைமிங் இருந்தால் தான் ஃபார்மில் இருப்பதாக அர்த்தம் என்று ஒருசிலர் கூறினாலும், என்ன பாஸ்... யானைக்கும் அடி சறுக்காதா?? இதெல்லாம் ஒரு மேட்டரா என்றும் மல்லுக்கட்டுகின்றனர் மற்றொரு தரப்பினர்.