கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி ஐ.பி.எல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் துபாய் சென்றடைந்தது. இதில் பங்கேற்கவுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், கடந்த 15ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். 2 கட்ட கொரோனா பரிசோதனைக்கு பிறகு, அணிவீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 51 பேர் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர்.
மாற்றம் ஒன்றே மாறாதது! இங்கிலாந்தின் பல ரெக்கார்டுகளை தகர்த்த இளம் வீரர்!
ஹர்பஜன்சிங்கின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அணியினருடன் அவர் துபாய் செல்லவில்லை. விரைவில் அவர் அணியுடன் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
துபாய் சென்ற சிஎஸ்கே அணி தற்போது 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நெகட்டிவ் முடிவு வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
தனிமையில் வாட்டூ:
சென்னை ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவில் இருந்து நேராக துபாய் சென்றடைந்தார். அங்குள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாயில் உள்ள அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மல்லு சாங்ஸ் ஜடேஜா:
அதேபோல், தனிப்படுத்தப்பட்டுள்ள சில மலையாள பாடல்களை கேட்டுக் கொண்டே பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாகுபலி ரெய்னா:
ரெய்னாவோ, தனது உடலையே வேறு லெவலுக்கு மெருகேற்றி வைத்திருக்கிறார். இந்தளவுக்கு அவர் தனது உடலை இதற்குமுன் கட்டுக்கோப்பாக வைத்திருந்திருப்பாரா என்று தெரியவில்லை.
அதேபோல், கேப்டன் தோனி உட்பட அனைத்து வீரர்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 நாட்களுக்கு அனைவரும் கப்சிப் மோட் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil