மாற்றம் ஒன்றே மாறாதது! இங்கிலாந்தின் பல ரெக்கார்டுகளை தகர்த்த இளம் வீரர்!

இதற்கு முன், அலெஸ்டர் குக் (294) மட்டுமே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்திருந்தார்

By: Updated: August 23, 2020, 03:48:50 PM

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் 189 பந்துகளில் ஜோஸ் பட்லர் சதத்தை எட்டினார்.

நிலைத்து நின்ற ஜாக் கிராவ்லி 331 பந்துகளில் இரட்டை சதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இரட்டை சதம் அடித்தவர்களில் 3-வது இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஸ்கோர் 486 ரன்னாக உயர்ந்த போது 5-வது விக்கெட் ஜோடி பிரிந்தது.

ஜாக் கிராவ்லி 267 ரன்கள் (393 பந்து, 34 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்கள் எடுத்த நிலையில் ஆசாத் ஷபிக் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி – பட்லர் ஜோடி 359 ரன்கள் திரட்டியது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும்.

வழக்கத்திற்கு மாறான சிக்ஸர்கள் – யெஸ்! தோனி ரிட்டர்ன்ஸ் (வீடியோ)

சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் 152 ரன்னில் (311 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) பவாத் ஆலம் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் 40 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 15 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 154.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கிராவ்லி அவுட்டாவதற்கு முன்பு, இங்கிலாந்துக்காக ஐந்தாவது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக, 127/4 என்றிருந்த ஸ்கோரை 486/5 என்ற மெகா தொலைவுக்கு கொண்டுச் சென்றார். இது டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் 5வது பெஸ்ட் டெஸ்ட் விக்கெட் பார்ட்னர்ஷிப் இதுவேயாகும் ஆகும். 1973 ஆம் ஆண்டில் டோனி கிரேக் மற்றும் கீத் பிளெட்சர் படைத்த சாதனையை (254) க்ராலி மற்றும் பட்லர் தகர்த்தனர்.

ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில், அவர்களின் இந்த 359 ரன் பார்ட்னர்ஷிப் என்பது 5விக்கெட்டுக்கான நான்காவது சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும். இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஈடன் கார்டனில் படைத்த 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் 4வது இடத்தில் உள்ளது.

டெஸ்ட்டில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு அவுட்டான பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்கோர் அடித்தவர் கிராவ்லி (267) தான்.

23 வயதிற்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் 250 ரன்கள் எடுத்த 11 வது வீரர் கிராவ்லி தான். ராம்நரேஷ் சர்வன், கிரேம் ஸ்மித், பிரையன் லாரா, ஜாகீர் அப்பாஸ், ரோஹன் கன்ஹாய், கேரி சோபர்ஸ், ஹனிஃப் முகமது, ஜாக்கி மெக்லீ, லென் ஹட்டன் மற்றும் டான் பிராட்மேன் ஆகியோர் இதற்கு முன் இச்சாதனையை படைத்துள்ளனர்.

கிராவ்லியின் 267 என்பது இங்கிலாந்து பேட்ஸ்மேனின் பத்தாவது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும். இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன், அலெஸ்டர் குக் (294) மட்டுமே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்திருந்தார்.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனியும் நானும் ‘ஷோலே’ ஜெய், விரு மாதிரி – ரெய்னா

கிராவ்லி இந்த நூற்றாண்டில், இங்கிலாந்துக்காக 200 ரன்கள் எடுத்த மிக இள வயது வீரர். 1979 இல் டேவிட் கோவருக்குப் பிறகு இள வயது வீரர் எனும் பெருமையைப் பெறுகிறார். கடந்த 41 ஆண்டுகளில் இங்கிலாந்தின் இரட்டை சதம் அடித்த மிக இள வயது வீரரும் கிராவ்லி தான்.

ஜோஸ் பட்லரைப் பொறுத்தவரை, இது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் மிக நீண்ட இன்னிங்ஸ் (எதிர்கொள்ளும் பந்துகளின் அடிப்படையில்) ஆகும். இது அவரது இரண்டாவது டெஸ்ட் சதமாகும். தனது முதல் சதத்தை அடித்த பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சதம் அடித்திருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Zak crawley jos buttler partnership breaks test records eng vs pak

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X