க்றிஸ் கெயில் பெவிலியன் தாண்டிய பல பந்துகளுக்கு காரணகர்த்தா என்றால், களத்தில் பல குதூகலத்திற்கும் காரணமாக இருப்பவர்.
டான்ஸ் ஆடுவது, பேட்டை தாலாட்டுவது, பவுலிங் போட வந்து பந்தை ரிலீஸ் செய்யாமல் பேட்ஸ்மேனை கலாய்ப்பது, எதிரணி வீரராகவே இருந்தாலும் கூட சேர்ந்து குத்தாட்டம் போடுவது, பேட்டி எடுக்கும் வர்ணனையாளர்களை சீண்டுவது என்று இவரது அட்ராசிட்டிஸ் ஏராளம்.
மேலும் படிக்க – கோலி சொன்னது சரியா? கவாஸ்கர் கோபப்பட்டது சரியா? – இந்திய டெஸ்ட் அணியின் ஆளுமை எங்கு தொடங்கியது?
குழந்தை மனது எனது சொல்லி கடந்து விடவும் முடியாது, அதற்காக எதையும் ஒரு நோக்கத்துடன் செய்பவர் என்று முத்திரை குத்தவும் முடியாது.
மேலும் படிக்க – சிஎஸ்கே-வில் இவர் மதிப்பு 50 லட்சமே… ஆனால் உலக சாம்பியன் இங்கிலாந்தை எப்படி கதறவிட்டார் பாருங்க (வீடியோ)
மனதிற்கு எது தோன்றுகிறதோ அதை பட்டென்று செய்து விடுகிறார். அது பல முறை ரசிக்கும் படியும் இருக்கிறது, சில முறை சர்ச்சைகளையும் கிளப்புகிறது.
ஆனால், இந்த சம்பவம் என்ன ரகம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தென்னாப்பிரிக்காவில் மெசான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட்போட்டி தொடர் நடந்து வருகிறது. ராக்ஸ் மற்றும் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி ராக்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலக்கை நோக்கி ராக்ஸ் அணி விளையாடத் தொடங்கியபோது ஸ்டார்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெய்ல் பந்துவீசத் தொடங்கினார். அப்படி வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்து பேட்ஸ்மேனின் பேடில் பட, கிறிஸ் கெயில் அதற்கு அவுட் கேட்டு அப்பீல் செய்தார்.
ஆனால், அம்பயர் அவுட் தர மறுக்கவே, சின்னக் குழந்தை அழுது அடம்பிடிப்பது மாதிரி கெய்ல் செய்த ரியாக்ஷன் அம்பயரையே சிரிக்க வைத்து விட்டது.
????️Howwwwzzzzaaaat
Big appeal from the Universe Boss????
He wanted it so badly????
Come on Ump????#MSLT20 pic.twitter.com/dAGzbZmJQG
— Mzansi Super League ???? ???????? ???? (@MSL_T20) November 22, 2019
யப்பா நல்ல நடிகனா நீ!!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Chris gayle baby cry face out appeal video
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்