Advertisment

நான் தான் யுனிவர்சல் பாஸ்! - மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்

444 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், 477 சிக்சர்கள் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chris gayle hits maximum number of sixes in International cricket - நான் தான் யுனிவர்சல் பாஸ்! - மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்

chris gayle hits maximum number of sixes in International cricket - நான் தான் யுனிவர்சல் பாஸ்! - மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Advertisment

கிரிக்கெட்டின் அதிரடி மன்னன், வெஸ்ட் இண்டீஸ் பிரடேட்டர், ஆடியன்ஸை ஃபீல்டர்களாக்கும் வித்தைக்காரர் என இப்படி பல பெயர்களுக்கு சொந்தக்காரரான தி கிரேட் கிறிஸ் கெயில் இப்போது பிரம்மாண்ட சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று பார்படாஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் விளாசியது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 129 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும். தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக ஆடிய கெயில், பிறகு தனது ஸ்டைலில் பந்துகளை பெவிலியனை நோக்கி பறக்கவிட்டார்.

இந்தப் போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கெயில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

444 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், 477 சிக்சர்கள் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு, பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 524 போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

398 சிக்சர்கள் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் 3-வது இடத்திலும், 352 சிக்சர்களுடன் சனத் ஜெயசூர்யா 4-வது இடத்திலும், 349 சிக்சர்களுடன் ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.

இன்னொரு சாதனையாக, இந்தப் போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். ரோஹித், மார்ட்டின் கப்தில், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இரண்டு போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக கெயில் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 361 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 48.4வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வென்றது.

மேலும் படிக்க - 'பாகிஸ்தானை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியாது'! - பிசிசிஐ விளக்கமும், ரசிகர்களின் எதிர்ப்பும்

West Indies Chris Gayle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment