/tamil-ie/media/media_files/uploads/2020/10/Chris-Gayle-sixers.jpg)
கிறிஸ் கெயில்
தற்போது ஐ.பி.எல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முக்கியமான வீரர் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருந்த இந்த அணி கெயிலின் வருகைக்குப் ஏற்றத்தை சந்தித்தது.
இட்லி, தோசை வேண்டாமா? டக்குனு மைதா தோசை செஞ்சிடுங்க!
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியுடன், பஞ்சாப் அணி மோதியது. இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் 8 சிக்ஸர்களை பறக்க விட்ட கெயில், டி-20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். அதோடு கிரிக்கெட் உலகில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரரும் கிறிஸ் கெயில் தான்.
சேப்பாக்கம் கேலரியில் ரசிகராக இருந்தவர், இன்று டோனி அருகில்! வருண் சக்கரவர்த்தி வீடியோ
நேற்றைய போட்டியில் கார்த்திக் தியாகி வீசிய பந்தில் கெயில் அடித்த சிக்ஸர் 1000-ஆகவும், அதன் பிறகு ஆர்ச்சர் வீசிய பந்தில் அடித்த சிக்ஸர் 1001-ஆகவும் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆறு இன்னிங்ஸில் விளையாடியுள்ள கெயில் 22 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.
அதோடு இதுவரை டி-20 போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையும் கெயிலுக்கு உண்டு. அவர் இதுவரை 13572 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10170 ரன்கள் பவுண்டரிகளால் பெற்றவை தான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us