Advertisment

ரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்... இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை!

விம்பிள்டன் போட்டிகள் 1877ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. முதல் உலகப் போரின் போது 1915 முதல் 1918 வரையில் இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak Wimbledon cancelled for the first time since world war II

Coronavirus outbreak Wimbledon cancelled for the first time since world war II

Coronavirus outbreak Wimbledon cancelled for the first time after second world war II: கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது வெளிகளில் நடமாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

124 ஆண்டுகளில் முதன்முறையாக ரத்தான ஒலிம்பிக்

இந்த நோயின் பரவலால் உலக அரங்கில் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பியா சாம்பியன் கால் பந்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. அதே போன்று ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், காரணங்களால் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டது. 1916ம் ஆண்டு பெர்லினில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதலாம் உலகப் போரின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதே போன்று, 1940ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகளும், 1944ம் ஆண்டு லண்டனில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தப்பட்டது. தற்போது 124 ஆண்டுகளில் 4வது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

விம்பிள்டன் டென்னிஸ்

இந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை விம்பிள்டன் போட்டிகள் நடைபெற இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு முதன்முறையாக இந்த போட்டிகள் ரத்தாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 18ம் தேதி துவங்கி ஜூலை 11ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் போட்டிகள் 1877ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. முதல் உலகப் போரின் போது 1915 முதல் 1918 வரையில் இந்த போட்டிகள் நடைபெறவில்லை. அதே போன்று இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1940 முதல் 1945 ஆண்டுகள் வரை இந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே ஃப்ரெஞ்ச் ஓப்பன் போட்டிகள் மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 31 துவங்கி செப்டம்பர் 13 வரை நடைபெறும் என்ற அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விம்பிள்டன் போட்டி தான் முதன் முறையாக ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : லாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது?

Coronavirus Corona Tennis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment