அப்போ அனுபமா கிடையாதா? சஞ்சனா கணேசனை மணக்கிறார் பும்ரா

Jasprit Bumrah tamil news: இந்திய வீரர் பும்ரா திருமணம் செய்ய உள்ளது, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேஷுசை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cricket news in tamil : கடந்த சில நாட்களாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நடிகை அனுபமாவை காதலிக்கிறார் என்றும், அவர்கள் இருவரும் திருமண செய்ய உள்ளார்கள் என்பது போன்ற கட்டடுகதைகள் இணையத்தில் உலாவி வந்தன. இதையடுத்து நடிகை அனுபமாவின் தாயார் இவையெல்லாம் ‘ரூமர்ஸ்’ என்று கூறி இந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்த நிலையில் இந்திய வீரர் பும்ரா திருமணம் செய்ய உள்ளது, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேஷுசை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் இந்த மாதம் 14-15 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.

மேலும் படிக்க : 8-வது சீசன் புரோ கபடி: வீரர்களுக்கு தடுப்பூசி; பார்வையாளர்கள் அனுமதி?

யார் இந்த சஞ்சனா கணேசன்?

சஞ்சனா கணேசன், பிரபல ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொகுப்பாளினியாக உள்ளார். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளையும், ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய இவர் 2014-ம் ஆண்டு நடந்த மிஸ் – இந்தியா போட்டியில் இறுதி சுற்று வரை சென்றிருந்தார். மற்றும் பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியான எம்-டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஸ்பிலிட்ஸ் வில்லாவின் ஏழாவது சீசனில் பங்கேற்று இருந்தார்.

பும்ராவை போல இவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்த்தவர் தான் என்று தகவல் தெரிவிக்கின்றன. அதோடு சஞ்சனா பும்ராவை இரண்டு முறை மட்டும் நேர்காணல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இவர்களின் திருமணம் இந்த மாதம் 14-15 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள நிலையில், கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருவீட்டாரை தவிர வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மற்றும் பும்ரா திருமணத்திற்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக புனேயில் நடக்கவுள்ள ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil who is sanjana ganesan whom jasprit bumrah marries

Next Story
சொந்த நாட்டு டெஸ்ட் மேட்சை விட சிஎஸ்கே ஃபைனல் முக்கியம்: அலறவிட்ட சாம் குர்ரன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com