scorecardresearch

களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

Asia Cup 2022: Virat Kohli shakes hands with Pakistan Captain Babar Azam; video goes viral in social media Tamil News: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை மைதானத்தில் நேரில் சந்தித்து, கை குலுக்கி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cricket video news in tamil: Virat Kohli Meets Pakistan Captain Babar Azam Ahead Of Asia Cup 2022
Watch: Virat Kohli catches up with Babar Azam ahead of training session in UAE Tamil News

 Virat Kohli – Babar Azam Tamil News: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இதற்கான இந்திய அணி தூபாயில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா அணி முதல் போட்டியில் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் அணியை 28-ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன்னென்றால், கடந்த முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கவும் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: Ind vs Pak: எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் டிராவிட்: இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருக்கு பதில் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் .லக்‌ஷ்மணன் செயல்பட இருக்கிறார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் .லக்‌ஷ்மணன் செயல்படுவார். கொரோனா சோதனை நெகட்டிவ் என வந்தவுடன் டிராவிட் அணியில் சேருவார் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் டிராவிட்: இடைக்கால பயிற்சியாளரை அறிவித்த பிசிசிஐ!

விராட் கோலி – பாபர் அசாம் வைரல் வீடியோ

இந்நிலையில், ரோகித் சர்மா வழிநடத்தும் இந்திய அணியினர் மற்ற பயிற்சியாளர்களை வைத்து வீரர்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்: IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

இதையும் படியுங்கள்:

இந்த நிலையில், மற்றொரு சுவாரசியமான வீடியோ ஒன்றும் வெளியாகி இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை மைதானத்தில் நேரில் சந்தித்து, கை குலுக்கி பேசிக்கொள்கிறார். மேலும், அவர் பாபரை வரவேற்று எப்படி இருக்கிறீர்கள் என்பது போல் கேட்டு கொள்கிறார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வரும் இந்த வீடியோ, பார்ப்போரை நெகிழ்ச்சியடையும் விதமாக உள்ளது.

இதையும் படியுங்கள்: ‘யூஸ்வலி நான் டெய்லி 100-150 சிக்சர்களை அடிப்பேன்’ – வாயை பிளக்க வைக்கும் பாக். வீரர்!

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket video news in tamil virat kohli meets pakistan captain babar azam ahead of asia cup 2022

Best of Express